முதல் தரைக் கரும்புலித் தாக்குதலை 1987 யூலை மாதம், 5ம்
முதல் தரைக் கரும்புலித் தாக்குதலை 1987 யூலை மாதம், 5ம் திகதி சிறீலங்கா இராணுவத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான கரும்புலி கப்டன் மில்லர் தாக்குதலை நடத்தினார். கப்டன் மில்லரினால் வடமராட்சி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்கா இராணுவமுகாமின் மீதே நடாத்தப்பட்டது. இத் தாக்குலைத் தொடர்ந்து ஒப்ரேசன் லிபரேசன் எனும் சிறீலங்கா இராணுவ நடவடிக்கை முடக்கப்பட்டது.
கப்டன் மில்லர் (ஜனவரி 1, 1966 – ஜூலை 5, 1987) கரவெட்டி, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயர் கொண்ட வல்லிபுரம் வசந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.