
உலகத் தாய் மொழி நாள்.(பெப்ரவரி 21,1999).
கிழக்குப் பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்). டாக்கா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் அதிபர் முகமதலி ஜின்னா . உருதுதான் ஆட்சி மொழி என்று அறிவித்தார். வங்க மாணவர்கள் கிளர்ந்தெழுந்தனர். வங்க மொழியே எங்கள் தங்க மொழி (சோனார் பங்ளா) என்று முழங்கினர். உருது மொழியை விரட்டினர். மொழிப்போர் துவங்கியது. நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர். வங்கதேசம் உருவாக அதுவே முதல் போராட்டமாக அமைந்தது.
1971 இல் தனி வங்கதேசம் வென்றெடுக்கப்பட்டது. வங்கதேசத் தலைநகர் டாக்காவில் அந்த நான்கு மொழிப்போர் ஈகிகளுக்கும் பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்பட்டது. 1971 இல் வங்கதேசம் உருவான பின்னர், 1948 இல் மொழிப்போராட்டம் தொடங்கிய அந்த நாளை (பெப்ரவரி, 21) உலகத் தாய் மொழி நாளாக அறிவிக்க வேண்டும் என்று வங்கதேசம் யுனெஸ்கோவுக்குக் கோரிக்கை வைத்தது. யுனெஸ்கோவும் அதனை ஏற்றுக் கொண்டு பெப்ரவரி 21 ஐ உலகத் தாய் மொழி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று 1999 இல் அறிவித்தது.
வங்க மொழியே வங்கத்தில் ஆட்சி மொழியாய்க் கோலோச்சுகிறது. அந்நிய மதமான இஸ்லாத்தின் அரபு மொழியோ , உருது மொழியோ தாய்மொழியாம் வங்கமொழிப் பற்றுக்குத் தடையாக இல்லை. இனி , நாமும் தான் 1937ல் இருந்து இந்தி ஆதிக்கத்திலிருந்து தமிழ் மொழியைக் காக்கப் போராடினோம். 1965ல் நூற்றுக்கணக்கானவர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானவர் தடியடியும், தூப்பாக்கிச் சூடும் ஏற்றுச் சிறை சென்றனர். .ஆனால் இன்னும் இந்தி ஆதிக்கம் குறையவில்லை. தமிழ் மொழி, தமிழின ஒழிப்பில் இந்திய அரசு முனைப்பாக இருக்கிறது. இந்தியா ஒரே நாடு .இந்திதான் அதன் ஒரே மொழி என்கிறது. மையத்தில் ஆட்சி புரிந்த, புரிகின்ற எல்லாக் கட்சிகளும் .மொழி காப்போம் என்று ஆட்சிக்கு வந்த கழகங்கள் இப்போது காவிகளிடம் தஞ்சம் புகுந்து பதவிச்சுகம் கொண்டிருக்கின்றன.
எப்போது எம்தாய்மொழி தமிழ் தரணி ஆளும்? தன்னுரிமை பெற்ற தமிழகம் , தமிழர்கள் தலைமையின் கீழ் என்று அமைகிறதோ அப்போதுதான் தமிழ் தரணி ஆளும். “வாழ்க , உலகத் தாய் மொழி நாள்” “வாழ்க தமிழ்” என்றெல்லாம் வெற்றுக் கூச்சலிடுவதால் எந்தப் பயனுமில்லை. களத்தில் இறங்குவோம். ஆக்கபூர்வ அறவழிச்செயலில் ஈடுபடுவோம். அன்னைத் தமிழை மீட்போம். தமிழர்களுக்கான இறையாண்மை அரசை நிறுவுவோம்..
எகிப்து நாட்டில் 2100 ஆண்டுகள் பழைமையான தமிழி (அ)