×

தோல்கருவிகள்

தோல்கருவிகள்

பெரும்பறை
சங்க காலம், சோழ, பாண்டிய அரசர்கள் காலத்தில் பறை இசைக்கப்பட்டது தொடர்பான குறிப்புகள் உள்ளன. அரசர்களது அறிவிப்புகளை மக்களுக்கு முரசு அறைந்து அல்லது பறையடித்துச் சொல்வது மரபு. ஒரு மன்னன் எதிர்நாட்டுக்கு சென்று போர் புரியும் முன் அங்குள்ள போர் புரியவியலாத மக்களை வெளியேற வேண்ட, பெருகிவரும் புனலை அடைக்க, உழவர் மக்களை அழைக்க, போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட, வெற்றி தோல்வியை அறிவிக்க, வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க, விதைக்க, அறுவடை செய்ய, காடுகளில் விலங்குகளை விரட்ட, மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க இப்படியான நிகழ்வுகளில் இசைக்கப்படுவது பெரும்பறை.

சிறுபறை

இயற்கை வழிபாட்டில், கூத்துகளில், விழாக்களில், இறப்பில் போன்ற அனைத்து வாழ்வின் நிகழ்வில் எல்லாம் நிகழ்த்தப் படுவது சிறுபறை

பெருமுரசு

பெருமுரசு தோற்கருவி வகை சார்ந்த ஒரு தமிழர் இசைக் கருவி. இது அரைக் கோள வடிவுடையது. இது ‘பெரிய இருப்புச் சட்டியில் மாட்டுத் தோலை வார்த்து உருவாக்கப்படும்.’ பண்டைக் காலத்தில் அறவிப்பு அல்லது தொடர்பாடல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது

சிறுமுரசு

சிறுமுரசு அல்லது சாயரட்சை மேளம் என்பது தோற்கருவி வகை சார்ந்த ஒரு தமிழர் இசைக் கருவி. இது ‘சிறிய அரைச்சட்டியில் புள்ளிமான் தோல் கொண்டு வார்க்கப்பட்டது.’ இதனை கோயில்களில் மாலை வழிபாடுகள் முடிந்ததும் இசைக்கப் பயன்படுத்தினர்.

பேரிகை

பேரிகை என்பது தகவல் தெரிவிக்கப் பயன்பட்ட ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரசனுடைய கட்டளைச் செய்தி, திருமணச் செய்தி, ஊர்வலம் முதலிய தகவல்களை நகரில் இருப்பவர்களுக்கு அறிவிக்க இந்தக் இசைக் கருவியைப் பயன்படுத்தியிருக்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட யானையின் முதுகில் பேரிகையை வைத்து முழக்குவர். அதன் பின்பு சொல்ல வேண்டிய தகவல் தெரிவிக்கப்படும். இப்படி அறிவிப்பவர்கள் வள்ளுவர்கள் எனப்பட்டனர்.

படகம்

இன்னமும் குறிப்புகள் தெரியவர வில்லை

பாடகம்

இன்னமும் குறிப்புகள் தெரியவர வில்லை

உடுக்கை

உடுக்கை என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். கிராமப்புற கோயில்களிலும் முக்கியமாக மாரியம்மன் கோவில் சமயச் சடங்குகளிலும் இது ஒலிக்கப்படும். தோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக்கலாம். உலோகத்தால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால் இதை இடை சுருங்கு பறை என்றும் துடி என்றும் அழைப்பர். கரகம் ஆடும் போதும், பஜனைகளின் போதும்,  பூசாரியை உருவேற்றுவதற்காகவும் இது முழக்கப்படுவதுண்டு.

மத்தளம்

இந்தியாவின் மத்தள இசைக்கருவிகளில் புகழ் பெற்றது தோலக் எனப்படும் மத்தளம். நடுவில் பெரியதாகவும் கடைசியில் சிறியதாகவும் இருக்கும் இந்த மத்தளம். பலகையால் செய்யப்பட்ட தோலக்கில் இருக்கும் இரண்டு வளையங்கள் மேலும் தோல் இழுத்து கட்டப்பட்டிருக்கும். மத்தளத்தின் சுருதியை மாற்ற இரண்டு மத்தளத் தலைகளை இணைக்கும் கயிறை மாற்றி அமைக்க வேண்டும். இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்படுகிறது. இனிமையாதல் மதங்கம் எனும் சொல் ‘மிருதங்கம்’ என வடமொழியில் மாறி அமைந்தது.

சல்லிகை

இன்னமும் குறிப்புகள் தெரியவர வில்லை

காடிகை / கரடிகை

பழங்காலத்தில் தெய்வ வழிபாட்டின் போது பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று கரடிகை. மிருதங்கத்தைப் போலவே மரம் மற்றும் மிருகத்தின் தோலினால் செய்யப்பட்டக் கருவி. இவை தாளவிசை கருவியாகப் பயன்பட்டது. கம்பராமாயணத்தில் வரும் ஒரு பாடல்(8445) மூலம் கரடிகை என்ற இசைக்கருவி இருந்ததை நாம் அறிந்து கொள்ளலாம்.

‘கும்பிகை திமிலைசெண்டை
குறடுமாம் பேரிகொட்டி
பம்பை தார்முரசும் சங்கம்
பாண்டில் போர்ப்பணவம் தூரி
கம்பலி உறுமை தக்கை
கரடிகை துடிவேய் கண்டை
அம்பலி கனுவை ஊமை
சகடையோ டார்த்தவன்றே’
என்ற பாடலில் வரும் சொற்கள் அனைத்துமே அக்காலத்தில் பயன்பட்ட இசைக்கருவிகளை பட்டியலிடுகிறது. அவற்றில் ஒன்று கரடிகை. திருவலம் அருகே உள்ள ஒரு கோயில் கல்வெட்டில் அக்கோயிலில் இருந்த இசைக்கருவிகளை பட்டியலிடும்போது,

‘மத்தளம் எட்டும்
தாளம் ஒன்றும்
கரடிகை ஒன்றும்
கண்டையாறும்
திமிலையொன்றும்’
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில்களில் ஒரே விதமான இசைக்கருவிகைளப் பயனபடுத்தாமல் நேரத்துக்கு ஒரு இசையை வாசிக்கும் பழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கிறது.ஒட்டு மொத்தமாகவும் வாசிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. சிவன் கோயில்களில் இக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெருமாள் கோயில்களில் வீணை, யாழ், குழல் போன்றவை பயன்படுத்தப் பட்டுள்ளன. ஆக சிவாலயங்களில் வழிப்பாட்டிற்காக ஒலியெழுப்பப்படும் கருவிகளில் ஒன்றுதான் கரடிகை.
ஹஅருணகிரிநாதர் பிள்ளைத்தமிழ்’ என்னும் நூலிலும் தாளவிசைக் கருவிகள் எவை என்பதை குறிப்பிடும்போது; ஹஇடக்கை சல்லிகை கரடிகை பேரிகை இசைக்கும் குடமுழவு…’ என்று அப்பாடல் நீள்கிறது.

திமிலை

திமிலை என்பது தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். இது மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவியாகும். இது பாணி எனவும் அழைக்கப்படுகிறது. மணற்கடிகார வடிவில் இருக்கும் திமிலை இசைக்கருவியானது கேரளா மற்றும் தென்னிந்தியக் கோவில்களில் இசைக்கப்படுகிறது. நன்கு செப்பம் செய்யப்பட்ட பலா மரத்தில் செய்யப்பட்டு கன்றின் தோலால் (குறிப்பாக 1-2 ஆண்டேயான கன்றின் தோல்) மூடப்பட்ட இருமுக முழவுக்கருவிகளுள் ஒன்று. இக்கருவி பஞ்சவாத்தியம் எனப்படும் கருவிகளுள் ஒன்றாக கேரளா மாநிலக் கோவில்களில் இசைக்கப்படுகிறது.

தக்கை

இன்னமும் குறிப்புகள் தெரியவர வில்லை

கணப்பாறை

இன்னமும் குறிப்புகள் தெரியவர வில்லை

தமடூகம்

இன்னமும் குறிப்புகள் தெரியவர வில்லை

தண்ணுமை

மிருதங்கம் அல்லது தண்ணுமை என்பது தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.’மதங்கம்’ என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே ‘மிருதங்கம்’ என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் ‘மெது’ என்பதே ‘மிருது’ எனத் திரிந்தது. பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது.

இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் ‘சோறு’ என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும். மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.

தடாரி

இன்னமும் குறிப்புகள் தெரியவர வில்லை

அந்தரி

இன்னமும் குறிப்புகள் தெரியவர வில்லை

முழவு

முழவு என்பது தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். முழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு முழவுக்குப் பெயர் அமைத்திருக்கலாம். பனைமரத்தடி, பலாப்பழம் போன்றவை இதற்கு உவமையாக சுட்டப்பட்டுள்ளன. இது குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை எழுப்பிச் சுவைக்கும் கருவியாகும். முழவு என்ற சொல் தாளக் கருவிகளைச் சுட்டும் பொதுச் சொல்லாகவும், ஒரு குறிப்பிட்ட கருவியைச் சுட்டும் சொல்லாகவும் இலக்கியங்களில் இடம் பெறுகிறது.

சிலப்பதிகார காலத்தில், தாளக் கருவிகளுள் ‘தண்ணுமை’ தலைமைக் கருவியாய் விளங்கியது. ‘ஈர்ந்தண் முழவு’ ‘மண்ணார் முழவு’ ‘முழவு மண் புலர’ போன்ற குறிப்புகள் மூலம் தண்ணீரால் தோலைப் பதப்படுத்தி இனிய ஓசையை எழுப்பியதையும், தோலில் ஒருவகை பசை மண்ணை இட்டு முழக்கியதையும், இம் மண் காலப்போக்கில் வறண்டு உதிர்ந்ததையும் உணரமுடிகிறது என்று ‘மத்தளவியல்’ என்ற நூலில் முனைவர் வி.ப.க.சுந்தரம் கூறுகிறார். பதிற்றுப்பத்து கூறும் ‘பண்ணமை முழவு’ சீவக சிந்தாமணியின் நச்சினார்க்கினியர் உரை கூறும் ‘இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய்’, ஆகிய தொடர்கள் மூலம் பண்டைய காலத்திலேயே முழவிசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments