முல்லைத்தீவு மாவட்டம் முத்து ஐயன் கட்டு குளம் என்று இன்று அழைக்கப்படும். இந்தக் குளம் சோழர்கள் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் சோழ படைகளின் தளபதிகளாக அல்லது சீற்றரசர்களாக இருந்த ஒரு பிரிவினரான முத்தரையர் என்ற இனக் குழுவினரால் கட்டப்பட்டது ஆகும். பண்டைய குறிப்புகள் மற்றும் ஆவணங்களில் முத்தரையன்கட்டு குளம் என்றே குறிப்பிடப்படுகிறது. நாளடைவில் முத்தையன்கட்டு எனவும் தற்போது முத்து ஐயன் கட்டு எனவும் அழைக்கப்படுகிறது.
வரலாற்று சின்னமாக இந்தக் குளம் அமையும் போது இந்தப் பெயர் மாற்றத்திற்கு காரணம் என்ன? தானாகவே நடக்கிறதா இல்லை வரலாறு மாற்றப்படுகிறதா?