தென்னாபிரிக்க அரசை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரகத்தில் சிறைக்குச் சென்ற பெருமைக்குரியவர் நாகப்பன் .சிறையில் பல கொடுமைகளுக்கு ஆளாகி உடல்நலம் குன்றியவர். சாகும் நிலையில் சிறையிலுருந்து விடுதலையாகி வெளியே வந்த சில நாட்களில் மரணத்தைத் தழுவிக்கொண்டார். 15.7.1914 அன்று அவருடைய நினைவுக்கல் திறப்பு விழாவின் போது காந்தியடிகள் பின்வருமாறு குறிப்பிட்டார்.
“பயங்கரமான சிறை வாழ்க்கையில் மிகக்கொடுமையான குளிரைத் தாங்கிகொண்டு அஞ்சாநெஞ்சம் படைத்த அந்த இளைஞன் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தான் என்பதை நான் அறிவேன். நாகப்பனுடைய உள்ளம் எஃகு போன்ற உறுதியுடன் இருந்தது . சிறையில் இருந்து வெளியே வந்தபோது “ஒரே ஒருமுறைதான் நான் சாகமுடியும் , அவசியமானால் மீண்டும் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.
எந்தவிதமான துன்பத்தையும் சகித்து கொள்ளும் மனத்திண்மையும் , பொறுமையும், நாட்டுப்பற்றும் சாவுக்கஞ்சாத மன உறுதியும் அவரிடம் இருந்தன .