வலைப்பந்தாட்ட அணியினரை மாணவரமைப்பின் பாண்ட் அணிவகுப்பு மரியாதையுடன் பராட்டு விழா நடைபெற்ற கிளிநொச்சி மகாவித்தியாலய மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்ட காட்சி.
பிரிட்டன் புறோமில் நகரில் நடைபெற்ற 8ஆவது தமிழர் விளையாட்டு விழாவில் பங்கு பற்றிய சகல போட்டிகளிலும் வெற்றிகளை ஈட்டிய தமிழீழ வலைப்பந்தாட்ட அணிக்கு இன்று (30-08-2003) கிளிநொச்சியில் பாராட்டு விழா நடைபெற்றது.
பராட்டு விழாவானது தமீழிழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. பாப்பா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் ஆரம்ப நிகழ்வாக பொதுச் சுடரினை சோதியா படையணி தளபதி கேணல் துர்க்கா, தளபதி கேணல் பானு ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை மாலதி படையணி தளபதி; கேணல் விதுசா ஏற்றி வைத்தார்.
பராட்டு உரைகளை தமிழீழ காவல்த் துறைப் பொறுப்பாளர் திரு.பா. நடேசன், நீதி நிர்வாக பொறுப்பாளர் திரு. பரா, அரசியல்த்துறை துணைப்பொறுப்பாளர் திரு. தங்கன், மகளிர் துணைப்பொறுப்பாளர் கீதா, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. சிவசாமி ஆகியோர் நிகழ்த்தினர்.
இவ்வலைப்பந்தாட்ட அணியில் யாழ், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மன்னார், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றினர்.