×

சென்னை கோடாம்பாக்கம் விசுவநாதபுரத்தில் 1941 -இல் பிறந்தார்.

சென்னை கோடாம்பாக்கம் விசுவநாதபுரத்தில் 1941 – இல் பிறந்தார். அண்ணன் வீட்டில் தங்கியிருந்து சென்னை மாநகராட்சி ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்தி ஆட்சி மொழிச் சட்டத்தை எதிர்த்து 25-1-1965 அன்று தமிழ்நாடெங்கும் நடத்தப்பட்ட மாணவர் பேரணியில் மாணவர்கள் தாக்கப்பட்டது சிவலிங்கத்தைச் சினம்கொள்ள வைத்தது.
26-1-1965 அன்று வீட்டிற்கு எதிரே இருந்த பொட்டல் வெளியில் தீக்குளித்து மாண்டு போனார். சிதறிக்கிடந்த “உயிர் தமிழுக்கு – உடல் தீயிற்கு “என்றும்“ இந்தி ஆட்சி மொழி ஆவதைக் கண்டித்துத் தீக்குளித்துச் சாகிறேன்” என்றும் எழுதப்பட்ட தாள்களில் இருந்த கையெழுத்தைக் கொண்டே அந்த திடலில் கரிந்து சரிந்து கிடந்தது சிவலிங்கம் எனக் கண்டறியப்பட்டது .
 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments