பொங்கல் -தமிழர் திருநாள் இறைவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நன்னாள்.
தமிழரின் புதுவருடம் – தமிழ் மக்களுக்கும், உலகத்திற்கும் தெய்வீகத் திருக்குறளை அளித்த திருமகன் திருவள்ளுவரின் 2054 ஆம் ஆண்டு தொடக்கம். டாக்டர் அல்பேற் சுபைட்சரின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் .திருக்குறளில் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தத்துவம் இருப்பதாக உலகத்திற்கு எடுத்துக்காட்டினார் டாக்டர் அல்பேற் சுபைட்சர்.
“ஒவ்வொருவரும் தனக்குத்தானே செய்ய வேண்டிய கடமை என்ன ? மற்றவர்களுக்குச் செய்யவேண்டிய கடமை என்ன என்பனவற்றையெல்லாம் சிறந்த பண்பாட்டோடும் , மதிநுட்பத்தோடும், வள்ளுவர் பேசுகின்றார்.உலக இலக்கியத்தில் இத்தகைய மாண்பு மிக்க மெய்யறிவு வேறு எந்த நூலிலும் இத்துணைச் சிறப்பாகப் பொலிவுறவில்லை என்று சொல்லலாம்.” “பொது நீதிகளைப் பற்றி கூறும் திருக்குறளில் பயன் கருதிய பரிசில்களுக்கு வேறு தத்துவ நூல்கள் கொடுக்கும் ஆதிக்கம் அளிக்கப்படவில்லை.” “தமிழரின் பாரம் பரிய குறிக்கோள்களை எடுத்துக் காட்டும் வாழ்க்கை உறுதிப்பாடு, செயற்பாடு முதலியன திருக்குறளில் புதைந்து புத்துயிர் ஊட்டுகின்றன.”
“விசேடமாக திருக்குறளிலே அற்புதமான நீதிநெறி வாழ்க்கையுடன் உயிர்த்தன்மை நிறைந்த உள்ளன்பு நெறியும் (Active Love) இணைக்கப்பட்டுள்ளது. “
உலகில் பிரசித்தி பெற்ற ஐரோப்பிய ஞானிமூலம் கிடைத்த பாராட்டு ஒவ்வொரு தமிழனும் கவனத்தில் எடுக்க வேண்டிய மகிழ்ச்சி தரும் செய்தியாகும். இத்நாள் டாக்டர் அல்பேற் சுபைட்சரையும் ( Dr .Albert Schweitzer ) அவரின் ஆழ்ந்த சிந்தனைக் கருத்துகளையும் நினைவு கூருவது எமது உரித்தான நன்றிக்கடனாகும்.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் ஆற்றல் அரிது – தெய்வீக திருக்குறள் 101. ஒவ்வொரு தமிழனும் திருக்குறளை தமிழர் தேசிய நூலாகக் கருதி, அதன்படி வாழமுயற்சி எடுத்து, சகோதரத்துவத்துடனும் வாழ்வோமாக கலாநிதி அல்பேற்சுபைட்சருக்கு கிடைத்த உலக சமாதான நோபல் பரிசின் முக்கியத்துவத்தை உணர்ந்து இவ்வுலக சமாதானத்தை நோக்க முன்னேறிச் செல்வோமாக…
ஆதாரம்….
தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும்