
திருப்பூர் குமரன் ஒர் இந்திய தேசிய விடுதலைப்போராட்ட வீரர். தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை என்னும் சிறிய நகரில் 1904 அக்டோபர் 4 ஆம் நாள் பிறந்தார். இந்திய விடுதலைப்போரில் ஈடுபாடு கொண்டார். 1932 சனவரி 11- ஆம் நாள், பிரிட்டிஷ் காலனிய அரசு எதிர்த்து நடைபெற்ற ஊர்வலத்தில் பங்கேற்றபோது, காவல்துறையினரின் தாக்குதலில் காயம் ஏற்பட்டது.அவர் தாக்குதலுக்கு ஆளானபோதும்,பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டிருந்த இந்திய காங்கிரசுக் கொடியைக் கீழே போட மறுத்தார். 1932 ஏப்ரல் 7ம் நாள் மருத்துவமனையில் உயிரிழந்தார். ‘கொடிகாத்த குமரன் ‘ என்ற அடைமொழியுடன் போற்றப்படுகிறார்.