கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட ஒரு அழகிய ஊரே கனகபுரம்.
கனகபுர மக்களின் நோக்கு சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்தி தமிழருக்கு சொந்தமான மண்ணைப் பாதுகாக்கும் வண்ணம் படித்த வாலிபர் குடியேற்றத் திட்டத்தை ஏற்படுத்துதல் அவ் வாலிபர்களுக்கு சமூகப் பொருளாதாரதுறைகளில் நீடித்து நிலைத்து வாழ்வதற்கு ஏற்புடைய உதவியும் ஊக்கமும் அளித்து சமூக முன்னேற்றத்தையும் பொருளாதார அபிவிருத்தியையும் ஏற்படுத்துதல் இந்த நோக்கில்
யோகர் சுவாமியின் வழிகாட்டலில் கனகபுரத்தை பூர்வீகமாக கொண்ட மக்களுடன் இணைந்து சிங்கள காணி அபகரிப்புக்கு எதிராக தமிழ் சமூகம் யாழ்பாணத்தில் இருந்து வந்து கனகபுரம் காடுகளை சுத்தம் செய்து அங்கிருந்த புர்வீக தமிழ் மக்களுடன் குடியிருக்கத் தொடங்கினர்.
பல படித்த வாலிபர்கள் படித்த வாலிபர்களின் குடியேற்றத் திட்டத்தோடு கனகபுரம் மக்கள் செறிந்து குடியிருக்க ஆரம்பித்தகர் அங்கு குடியேறிய மக்கள் தமக்கான கல்வி விளையாட்டு சமூகக் கட்டமைப்புகளையும் உருவாக்கி சிறந்த வாழ்வியலை கனகபுரத்தில் ஏற்படுத்தினர்.
கனகாம்பிகைக்குளம் கனகபுரம் யோகர் சுவாமியின் தொடர்பு கிளிநொச்சியில் புரையோடிக்கிடக்கிறது. 1958ம் ஆண்டு ஆவணிமாதம் 22ம் திகதி கனகபுரம் படித்த வாலிபர் திட்ட மேட்டுநில குடியேற்றத்திட்டம் தொடங்கப்பட்டது. கனகபுரம் சுமார் 7கிமீ நீண்ட கிராமம் ஆகும் கனகபுரத்தில் கனகபுரம் கருணாகரப்பிள்ளையார் ஆலயம் மற்றும் யூதா கோவிலும் காணப்படுகிறது.
கனகபுரம் விளையாட்டுக்கழகமும் கிளிநொச்சி மாவட்டத்தில் மிகப்பிரசித்த விளையாட்டுக் கழகமாகும். இங்கு பண்ணைகள் அமைத்து மேட்டுநிலப் பயிர்செய்கை பண்ணை விலங்குகள் வளர்ப்பு என பல பொருளாதாரவளம் செழிக்கும் தொழில்கள் இங்கு இருந்தபோதும் நகரமயமாதல் காரணமாக விளைநிலங்கள் கடைகள் கட்டிடங்களாக மாறிவருகிறது. தமிழர் போரியல் வரலாற்றில் கனகபுரம் மிகவும் முக்கியத்துவமான இடமாக விளங்குகின்றது கனகபுரம் மாவீரர் துயிலுமிடம் தமிழர் வரலாற்றில் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களை வழிபட கனகபுரம் துயிலும் இல்லம் இன்றும் காணப்படுகின்றது. சிறீலங்கா அரசினால் இடித்து அழிக்கப்பட்டாலும் மக்கள் குறித்த நாளில் கனகபுரம் துயிலுமில்லத்தில் வழிபாடு மற்றும் மாவீரருக்கு மரியாதையை இன்றும் செலுத்திவருகின்றனர்.
வட்டக்கச்சி
வினோத்