கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட ஒரு அழகிய இடமாக இராமநாதபுரம் இருக்கிறது. வட்டக்கச்சி பழையவட்டக்கச்சி, கல்மடு, புதுக்காடு, அழகாபுரி, மாயவனூர் என்னும் பிரதேசங்கள்
சூழ இராமநாதபுரம் செழித்துக்காணப்படும் ஒரு கிராமம் ஆகும். வட்டக்கச்சி வட்டம் எனும் பகுதியாக இவை அனைத்தும் அழைக்கப்பட்டாலும்தனித்தனியே தமக்கென சிறப்புகள் கொண்ட கிராமங்களாக இவைகள் காணப்படுகிறது. கரைச்சி கிழக்கில் அமைந்திருக்கும்இக் கிராமங்களில் இராமநாதபுரம் வயல் நிலங்கள், தென்னைச் சோலைகள், இரணைமடு அன்னை அள்ளித்தரும் நீர்வளச்செழிப்போடும் தன்னகத்தே கெண்ட சிறு சிறு குளங்களோடும் இராமநாதபுரம் நீர் நிலச் செழிப்புடைய கிராமமாகும்.
1948 குடியேற்றக் கிராமமாக அரச ஆவணங்களில் இருந்தாலும் பழையகண்டி பாதையில் அமைந்துளள கிராமங்களின் புராதண மரபுத் தொடர்புகள், ஆதிக் குடிகளின் தொடர்புகள்
பற்றிய குறிப்புகள் இருந்தபோதிலும்அதற்கான அரசஆவணப்பதிவுகள் இல்லாது உள்ளது. அருகே
இருக்கும் கண்டாவளை கிராமம் அரசர்காலத் தொடர்புடைய கிராமமாக உள்ளது. பழைய கண்டிய மற்றும் யாழப்பாண வன்னி மன்னர்களின் அரசவழிப் போக்குவரத்து பாதையை தன்னகத்தே கொண்டகிராமமாகும். தன் எல்லையில் ஒரு பகுதியை வன்னி மண்ணின் பண்டாரவன்னியனின் நெருங்கிய தொடர்புடைய அம்பகாமம்கிராமத்தையும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியையும் எல்லையாக்க கொண்ட கிராமமாகும். புராதண வரலாற்றுப் பதிவுகள்மறைக்கப்பட்டு 1948 தொடக்கம்
யாழ்ப்பாணப் பகுதியில் இருந்து வயல் வேலைகளுக்காக வந்தவர்களுக்கு இரண்டு ஏக்கர்மேட்டு நிலப்பரப்பும் மூன்று ஏக்கர் வயல் நிலங்களும் கொடுக்கப்பட்டு குடியேற்றப்பட்டதாகவும் குடியேற்றத்துக்கு துணையாகஇருந்த அரசியல் பிரமுகர் இராமநாதன் அவர்களின் பெயரிலே அக்கிராமம் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால்இங்கே சித்தர்கள் மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் வயலூர் முருகன் ஆலயமும் காணப்படுகின்றது. அந்த ஆலயத்தின்வரலாற்றுக் குறிப்புக்கள் வாய்வழியாகவே காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்வி வளமும் அதிக பட்டதாரிகள் தொழில் வாண்மை மிக்கவர்களை உருவாக்கிய இடமாகவும்
காணப்டும் இந்தப் பிரதேசம் பல தேசிய விருதுகளை வென்று தந்த பாடசாலைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
கலையில் மூத்த கலையான கூத்துக் கலைக்கும் தெருநாடகக் கலைக்கும் இசை நாடகத்துறைக்கும்
பிரசித்தி பெற்றஇடமாகும்.அதிகமாக காத்தவராயன் கூத்து, பண்டாரவன்னியன் கூத்து, வள்ளி திருமணம் என்னும் கூத்துக்கள் பிரசித்திபெற்றன. இங்கே ஆனி உத்தரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். ஜயனார் ஆலயத்தில் தொடங்கி மாவடி அம்மன் ஆலயம்வரைசெல்லும் காவடிகள் காலை தொடங்கி இரவுவரை செல்லும். குறிப்பாக பறை இசையுடன் ஆடிவரும் காவடி ஆட்டம்பார்பதற்கு உணர்ச்சி பூர்வமாக இருக்கும்.
போர்காலத்தில்அதிக போரளிகளையும் மாவீரர்களையும் இந்த மண்ணுக்கு தந்த வீரம் மிக்க கிராமமாகும் மண்ணின் தியாகம்மிக்க பக்கங்களில் இராமநாதபுரம் கிராமம் தனது பங்களிப்பை உணர்வுடன் செய்துள்ளது. தன் வரலாற்றுத் தடத்தில்மாவீரர்களை விதையாகக் கொடுத்துள்ள இந்தக் கிராமத்தின் தியாகமும் இரணைமடு அன்னையின் நீர்ச்செழிப்பில் செழிக்கும்வயலின் வளமும் வற்றிப்போகது.
இப்பிரதேச மக்களின் ஆன்மீகப்பற்றுணர்வின் வெளிப்பாடாக பின்வரும் ஆலயங்கள் அமைந்திருக்கின்றன:
இப்பிரதேச வாசிகள் அனைவருமே கல்விகற்பதில் ஆர்வமும் அறிவுத்தேடலும் உடையவர்களாவர்.
இவர்களின்அறிவுத்தேடலுக்குத் தீனி போடும் வகையில் மூன்று அரச பாடசாலைகள் இப்பிரதேச எல்லைக்குள் அமைந்திருக்கின்றன.
வட்டக்கச்சி
வினோத்