×

வள்ளியம்மை தமது 16- ஆம் வயதில் காந்திய இயக்கத்தில்

வள்ளியம்மை தமது 16- ஆம் வயதில் காந்திய இயக்கத்தில் இணைந்து இன- ஒதுக்கலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு குறுகிய காலத்திலேயே இறந்து போனார். தமிழ்நாட்டில் அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த தில்லையாடி என்ற ஊரிலிருந்து தென் ஆபிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்கிற்குக் குடியேறிய ஆர். முனுசாமி -மங்களம் ஆகிய பெற்றோருக்கு  மகளாகப் பிறந்தார்.

வள்ளியம்மை தம் வாழ்நாளில் ஒருமுறை கூட இந்தியாவுக்கு வந்ததில்லை .

24.03.1913 அன்று தென் ஆபிரிக்க கேப் நகர நீதிமன்றத்தில் தரப்பட்ட ஒர் தீர்ப்பு இந்திய சமூகத்தவரைப் பாதிப்புக்கு உள்ளாக்கியது. அத்தீர்ப்பின் படி, கிறித்தவ தேவாலய சடங்குகளின் படியும் தென் ஆபிரிக்க திருமண சட்டப்படியும் நடைபெறாத எந்தக் திருமணமும் செல்லுபடி ஆகாது. இதை எதிர்த்து காந்தியடிகள் தமது அமைதி வழிப் போராட்டத்தைத் தொடங்கினார். எதிர்ப்புப் பேரணியைப் பெண்கள் ஒழுங்கு செய்தனர். வள்ளியம்மையும் அவரது தாயும், 1913 அக்டோபர் மாதம் டிரான்ஸ்வாவிலுருந்து நேடால் புறப்பட்ட இரண்டாவது பெண்கள் குழுவில் பங்கேற்றனர். 1913 டிசம்பர் 22 ஆம் தேதி, அவர்கள் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் கடின உழைப்புடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர். மரிட்ஸ்பர்க் சிறையில் நோய்வாய்ப்பட்ட வள்ளியம்மையை விடுதலை செய்ய சிறையதிகாரிகள் முன் வந்தாலும், அதை எற்க வள்ளியம்மை மறுத்துவிட்டார். விடுதலையான குறுகிய காலத்துக்குள், 1914 பிப்ரவரி 22 ஆம் நாள் இறந்தார்.

நோய்ப் படுக்கையில் கிடக்கும்போது தன்னைக் காண வந்த காந்தியடிகளிடம் தான் அப்போதும் கூட சிறை செல்லத் தயார் என்று கூறினார். தம்முடைய தாய்நாட்டிற்காகச் சிறை செல்ல யார்தான் விரும்பமாட்டார்கள் என்று வள்ளியம்மை கேட்டார். ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள பிராம்பார்டீன் கல்லறைத் தோட்டத்தில் வள்ளியம்மைக்குக் காந்தியடிகள் கல்லறைக் கல்லை திறந்து வைத்தார். 1915 ஏப்ரல் 30 அன்று காந்தியடிகளும் கஸ்தூரிபாய் காந்தியும் தில்லையாடி வருகைதந்து வள்ளியம்மைக்கு மரியாதை செலுத்தினார்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments