×

தமிழீழ தேசிய ஆள் அடையாள அட்டைக்கான வேண்டுகை

தேசிய ஆள் அடையாள அட்டைப்பகுதி , ஆட்பதிவுத்திணைக்களம், தமிழீழம்.

எமது கோவை எண் தமிழீழத் தேசிய ஆள் அடையாள அட்டைக்கான வேண்டுகை (அ) வேண்டுகையுடன் இணைக்கப்படவேண்டியவை ரூபாய் 200/= செலுத்தியதற்கான சான்றுத்துண்டு தமிழீழவைப்பக சேமிப்புக் கணக்கு எண் 10079ல் வைப்பிலடப்பட்ட அல்லது தங்கள் பிரதேசத்திலுள்ள வேண்டுகை பொறுப்பேற்கும் அலுவலரிடம் அல்லது தமிழீழ ஆட்பதிவுத்திணைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் பணம் செலுத்திய பற்றுச்சான்று.

ஒளிப்படம் 10* 15 cm ஒளிப்படம் ( கலர்) 01 – தனி 0.33 * 10.56 cm ஒளிப்படம் ( கலர்) 01 தனி பின்னனி சிவப்பு நிறமுடையதாகவும் நேர்ப்பார்வையில் அமைந்திருத்தல் வேண்டும்.

மனிதவளப்பதிவு அட்டை இல்லாதவிடத்து குடும்பப் பதிவு அட்டையின் நிழற்பதிவு. பிறப்புச்சான்று இல்லாதவிடத்து தகைமையுடையோர் உறுதிப்படுத்திய சான்று.

மாவீரர் குடும்ப நலன் காப்பக அட்டையின் நிழற்படி (மாவீரர் ) குடும்பத்திற்கு மட்டும் .

~ கவனிக்கப்படவேண்டியவை குடியியல் நிலை என்பதில் மணமாகாதவர் / மணமானவர் / கைம்மணாளன்/ கைம்பெண் எனபனவற்றின் வேண்டுகையாளர் எந்தவகையைச் சார்ந்தவர் என்பதைக் குறிப்பிடுக .

~ உறுப்பு எழுத்தாக எழுதுக .

~ குண்டுமுனை நீலநிறப் பேனாவை (Ball point pen ) மட்டும் பயன்படுத்துக.

~வேண்டுகையுடன் இணைக்கப்பட்டுள்ளவற்றின் மூல ஆவணத்தை கையேற்பு அலுவலர் சரிபார்ப்பதற்கு கொண்டு வருக .

~வேண்டுகை உறுதிப்படுத்த தகைமையுடையோர்! மனிதவள அலுவலர், பாடசாலை அதிபர் (மாணவர்களுக்கு மட்டும்) தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கிராமத்தலைவர்கள் .

~ இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள் இல்லாதவிடத்து உறுதிப்படுத்தும் தகைமையுடையோர் . மனிதவள அலுவலகர், கிராமசேவகர், தமிழீழ சமாதன நீதீயாளர்கள் ,திருமண பதிவாளர், (திருமணச்சான்றுக்கு மட்டும்) பாடசாலை அதிபர் (மாணவர்களுக்கு மட்டும் ) தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கிராமத் தலைவர்கள் .

  1. வேண்டுகையாளரின் முதலெழுத்துக்குரிய முழுப்பெயர்
  2. வேண்டுகையாளரின் பெயர்
  3. வேறு பெயர்
  4. இனம்
  5. பிறந்த இடம்
  6. பிறந்தநாள்
  7. மனிதவளப் பதிவு எண்
  8. குடும்ப பதிவு அட்டை எண்
  9. நிரந்தர அனுமதி அட்டை எண்

10 . குடியியல் நிலை ( மணமாகதவர் / மணமாணவர்/ கைம்மணாளன்/ கைம்பெண்)

  1. வாழ்க்கைத்துணையின் பெயர்
  2. வாழ்க்கைத்துணையின் தந்தையின் பெயர்

முழுமையாக.. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

தமிழீழ தேசிய ஆள் அடையாள அட்டைக்கான வேண்டுகை

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments