×

ஜேர்மன் வீரனை வீழ்த்தி முதலிடம் பிடித்த தமிழீழத்தின் அடுத்த தலைமுறை!

ஜேர்மன் நாட்டிற்கும் சுவிஸ் நாட்டிற்க்குமிடையில் ஜேர்மன் நாட்டின் Singen நகரில் Singen Münchriedhalle எனும் இடத்தில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியிலே மேற்படி வெற்றியை தனதாக்கினார் சுவிஸ் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழீழத்தின் வாரிசு. சுமார் 130 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் 17 வயது, 75கிலோ நிறையுடைய சதுர்த்திகன் 79 கிலோ நிறையுடைய ஜேர்மன் வீரனை எதிர்கொண்டு தனது வெற்றியை பதிவு செய்துகொண்டார். இந்த போட்டியில் தமிழீழ தேசியக் கொடியினை போர்த்தி களத்தில் தன்னை தயார் செய்தார் இந்த இளம் வீரர்.

சதுர்த்திகன் சூரிச் மாநிலத்தில் வசித்து வரும் திரு. திருமதி சிவகாந்தன் கெளசி தம்பதிகளின் புதல்வனாவார். எம் தேசத்து பிள்ளைகள் புலம்பெயர்ந்த தேசங்களில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறார்கள். ஆனாலும் அவற்றையெல்லாம் கொண்டாடி தீர்க்க ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது தமிழீழ தனியரசு எமது கையில் இல்லையே என்பது எம்மவர்களிடம் உள்ள ஏக்கமாக உள்ளது. நாம் எங்கு வாழ்ந்தாலும் எமது வரலாற்றையும், அடையாளங்களையும் மறக்காமலும், மறைக்காமலும் வெளிப்படுத்துவோம். விரைவில் தமிழீழம் விடுதலை பெறும் என்ற நம்பிக்கையுடன் இலக்கை நோக்கிப் பயணிப்போம் ! வெற்றி காண்போம் !.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments