எட்டாவது நாள் அதிக மக்கள் வந்ததால் அவர்களின் நிழலுக்காக கொட்டகைகள் போட ஆரம்பித்தார்கள். அந்த நாட்களில் தமிழ் மக்களிடம் அதிக புகழ் பெற்றமட்டக்களப்பைச் சேர்ந்த இளம் போராளி மதன் திலீபனைப் போல் இரண்டு நாட்களில் தானும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்கள். தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச் செல்வம், என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடங்கப் போவதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் பரவியதை விட அதி வேகமாக அஹிம்சைப் போராட்டம் தீயெனப் பரவியது. திலீபன் எல்லோரின் ஆதர்ச சக்தியாக இருந்தார். அன்று திலீபனால் பேச முடியவில்லை, நடக்க முடியவில்லை, எழ முடியவில்லை ஆனால் வெகு சுலபத்தில் பல்லாயிரம் பேரை அஹிம்சை வழிக்குத் திருப்பி இருந்தார். அனைத்து யாழ் அரசு அலுவலகங்களையும் மக்கள் முற்றுகையிட்டு மறியல் செய்தனர். அனைத்துமே அமைதிவழிப் போராட்டம். மேடையில் பேசமுடியாத மக்கள் எல்லாம் எழுத்தின் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தார்கள். இதற்காக ஒரு பத்து பேர் கை வலிக்க வலிக்க எழுதிக் கொண்டிருந்தார்கள். எழுதிய கருத்துக்கள் எல்லாம் அப்போதைய பாரத பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பப்பட்டது.
பயணம் தொடரும்….
மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.
Day 8 எட்டாவது நாள் முழு அறிக்கை
In English