குளித்தலை ப.உடையாம்பட்டியில் 1938இல் பிறந்த வீரப்பன் 1955இல் ஆசிரியரானார். 1965இல் கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த அய்யம்பாளையம் நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றியபோது மாணவர்கள் பற்கேற்கும் இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றார். ஆரசின் அடக்குமுறையும், தமிழ் உணர்வாளர்களின் உயிரிழப்பும் ஆசிரியர் வீரப்பனைப் பதறச் செய்தன.
”இந்தியைத் திணிக்கும் முறைகேடான அரசின்கீழ் ஆசிரியராகப் பணியாற்றுவது முறையற்றது” எனக் கடிதம் எழுதி 10.02.1965 அன்று அரசுககு; ப் பதிவஞ்சல் அனுப்பி
வைத்துவிட்டு மறுநாள் 11.02.1965 அன்று வேட்டிகளை ஒன்றன்மேல் ஒன்றாக சுற்றிகn; காண்டு தீயிட்டுகn; காண்டார்.