தமிழீழத்தின் காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் நோக்குடன் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் வன வளப் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டது.
இதன் பொறுப்பாளராக சத்தி என்னும் போராளி நியமிக்கப்பட்டார். இப் பிரிவு வனவளம் அழியாமல் பாதுகாக்கவும், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொறுப்புணர்வுடன் செயற்பட்டது.
மக்களுக்குத் தேவை ஏற்படும்போது தாமே தெரிவுசெய்யப்படும் மரங்கள் தடிகளை வெட்டி மர மடுவங்கள் மூலம் வழங்கினர். வெட்டப்படும் ஒவ்வொரு மரங்களுக்குப் பதிலாக பல மரங்கள் மீள் நடுகை செய்யப்பட்டு காடுகள் பாதுகாக்கப்பட்டன.
முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைமுறை தமிழீழ அரசின் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் பாதுகாப்பு படை வீரரின் ஆடையில் அணியும் இலட்சனை வனங்களை பாதுகாக்க தனி படையே அமைத்து இயற்கையை நேசித்தான் எம் தலைவன் .