×

தமிழர் கட்டிடக்கலை

தமிழர் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலத் தமிழர்களின் கட்டட வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும். தமிழர் கட்டிடக்கலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கட்டிடக்கலை நுட்பத்தில் சிறப்பான இடத்தை பெற்றிருந்தது. மனித முன்னேற்றத்துடன், அறிவுத்துறைகளும், வாய்மொழி மரபுகளினாலும், செயல்முறைகளினாலும், ஒழுங்கமையத் தொடங்கியபோது, கட்டிடம் கட்டுதல் ஒரு கலையாக உருவானது. இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டிடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய எல்லாவகைக் கட்டிடக்கலைகளினதும் கூட்டுமொத்தம் தமிழர் கட்டிடக்கலை எனப்படலாம்.

மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும் அரசர்களுக்கான மாளிகைகளும் வணக்கத்தலங்களும், பொதுக் கட்டிடங்கள் பலவும் உருவாக்கப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை. எனினும் சமயம் சார்ந்த கட்டிடக்கலை அதன் முதன்மையிடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது. சமூக அமைப்பில் கோயில்களை முதன்மை கட்டுமானங்களாக கொண்ட அந்த கட்டிடக்கலையில் நுணுக்கமான அம்சங்கள் இந்தியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளில் பரவலாக இன்றும் இருக்கின்றன. மேலும், பல்வேறு காலகட்டங்களில் தமிழக பகுதிகளை ஆட்சி செய்த ராஜ்ஜியங்களின் அடிப்படையில் அவற்றின் தாக்கமும், தனித்தன்மையும் தமிழக கட்டிட கலையின் மீது பதிந்து புதிய அம்சங்களும் உருவாகி இருக்கின்றன.

ஆரம்ப கால கட்டுமான பொருட்கள்

சுமார் 6 நூற்றாண்டுக்கு முன்னர் சுடு மண், மரம், சுதை, மூங்கில், வைக்கோல், புல் மற்றும் செங்கல் ஆகியவை கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்பட்டன. அவ்வாறு அனைக்கப்பட்ட வீடுகளும், மன்னர் மாளிகைகளும், வணிக நிறுவனங்களும், பொது இடங்களும் இருந்ததற்கான அடையாளங்கள் இன்று பல இடங்களில் உள்ளன. கிட்டத்தட்ட 6-ம் நூற்றாண்டிற்கு பின்னர் கட்டுமான பணிகளில் கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டு கட்டிடங்கள் உருவாயின.

சுடுமண்

 களிமண்ணால் செய்து பக்குவமாக உலர வைத்துச் சூளை போன்ற முறையில் சுட்டெடுத்து செய்யப்படும் உறுதியான கட்டட பொருளாகும்.

மரம்

மரம் ஒரு சிறந்த ஆரம்ப கால கட்டுமான பொருள். பல ஆயிரம் வருட அனுபவங்களை மர கட்டிட பொருட்கள் கொண்டுள்ளது. மரத்தால் கட்டப்பட்ட கட்டிடங்கள் நீண்ட கால சாத்தியம் உள்ளது. மர கட்டிடங்கள், யாரும், தேதி, நிலைத்து இல்லை.

மரங்களில் ஆண்,பெண்,அலி என மூன்று வகையுண்டு.இவற்றில் வீட்டின் வாசற்கால்,தூண்கள்,பலகணி போன்றவை உண்டாக்க ஆண் மரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். உத்திரம்,விட்டம்,வளை,தாழ்வாரம் தாங்கிக் கட்டை ஆகியவற்றுக்கு பெண்மரங்கள் ஏற்றவை.சிறுவிட்டம்,சட்டம்,கைகள்,வேலி ஆகியவற்றுக்கு அலி மரங்களை பயன்படுத்தலாம்.இவையெல்லாம், அரண்மனை, செல்வர் மாளிகைகள், கோவில்கள்,அவை சார்ந்த கட்டிடங்களுக்காகச் சொல்லப்பட்டவை.

சுதை

சுண்ணாம்பால் உருவாக்கப்பட்டவையாகும். மரக் குச்சிகளும் சுண்ணாம்பும் இதற்கு பயன்படுத்தப்பட்டன. சுதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கிலிருந்தன. பின்னாளில் சுண்ணாம்பிற்குப் பதிலாக சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது. மரக் குச்சிகளுக்குப் பதிலாக  இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டன.

மூங்கில்

மூங்கில் கட்டுமானங்கள் ஒரு வலுவான மற்றும் இலகுரக கட்டிட பொருள், மூங்கில்களை முழுமையாகவோ உடைத்தோ பயன்படுத்தினார்கள். அதன் விரைவான வளர்ச்சிக்கு நன்றி, விரைவாக புதுப்பிக்கத்தக்க வளமாகும்.

வைக்கோல்

பழமையான கட்டுமானப் பொருட்களில் ஒன்றாகும், இது மிகவும் வலிமையானது. கோதுமை, அரிசி, கம்பு, மற்றும் இதே போன்ற பயிர்களிலிருந்து அறுவடை செய்யப்படும் வைக்கோல் பூமிக்கு உகந்ததாகவும், பணப்பையை நட்பாகவும் கொண்டுள்ளது. வைக்கோல் சுவர்கள் அதிக சுமைகளைத் தாங்கும் அளவுக்கு உறுதியானவை.

செங்கல்

செங்கல் என்ற சொல் களிமண்ணால் ஆன ஒரு அலகு என்று குறிப்பிடப்படுகிறது. சுடப்பட்ட செங்கற்கள் மிக நீடித்த மற்றும் வலிமையான கட்டுமானப் பொருட்களில் ஒன்றாகும். ஒரு செங்கல் என்பது கொத்து கட்டுமானத்தில் சுவர்கள், மற்றும் பிற கூறுகளை உருவாக்க பயன்படும் பழமையான கட்டுமானப் பொருள். ஒரு செங்கல் களிமண் தாங்கும் மண், மணல் மற்றும் சுண்ணாம்பு பொருட்களால் ஆனது.

கட்டமைப்பு முறைகள்

வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகள் அமைப்ப தில் ‘பெரும் பெயர் மன்னர்க் கொப்ப மனை வகுத்து..’ என்ற சங்க பாடலுக்கேற்ப மக்களின் தேவைகள் மற்றும் வசதி ஆகியவற்றை அனுசரித்து கட்டிடங்களை மக்கள் அமைத்துக்கொண்டனர். வீடுகள் கட்டுவதற்கு முன்னர் தேர்வு செய்த நேரத்தில் கடைக்கால் அமைக்கும் வழக்கமும் இருந்தது. தமிழர் கட்டிடக்கலையில் பொதுவான அம்சங்கள் அஸ்திவாரம், சுவர்கள் மற்றும் மேற்கூரை, விமானம் அல்லது கோபுரம் ஆகியவை. எந்தவொரு கட்டிட அமைப்பும் அவற்றின் அடிப்படையிலேயே கட்டப்பட்டன. அவ்வாறு அமைந்த வீடுகளின் நிலைகளில் அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. காற்று வசதிக்காக வீட்டின் சுவர்களில் விதவிதமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டன.

பழைய கால அஸ்திவாரம்

பழைய காலத்திலும் உறுதியான அஸ்திவார அமைப்புகள் வடிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அதற்காக சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்போது இருப்பது போன்ற கடைக்கால் அமைப்பதற்கான பொறியியல் வல்லுனர்கள் அன்று இல்லை. இருந்தாலும் காலத்தை வென்று நிற்கக்கூடிய கட்டமைப்புகளை அவர்களால் உருவாக்க இயன்றது. அதற்கு காரணம் அன்றைய சூழலில் எளிதாக கிடைத்த இயற்கையான பொருட்களை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்தினார்கள்.

தமிழர் கட்டிடக்கலையில் பொதுவாக மூன்று உறுப்புகள் காணப்படுகின்றன . அவை தாங்குதளம் , சுவர் மற்றும் விமானம் (கோபுரம்) ஆகும்.

தாங்குதளம் என்பது விதிகளின்படி அமைக்கப்படுகின்ற மரபுவழிக் கட்டிடங்களின் உறுப்புக்களில் ஒன்றான அடித் தளத்தைக் குறிக்கும். தொடக்ககாலக் கட்டிடங்களின் உறுப்புகளில் நிலத்தின்மேற் அமைக்கப்பட்ட முதல் உறுப்பு இதுவாகவேயிருந்தது. தாங்குதளங்கள் ஒன்றின்மேலொன்றாக வரிவரியாக அல்லது பல படைகளாக அமைகின்ற துணையுறுப்புக்களின் சேர்க்கையால் உருவாக்கப்படுகின்றன.

சுவர் என்பது வழக்கமாக ஒரு இடத்தை அல்லது வெளியை வரையறுக்கின்ற அல்லது அதனைப் பாதுகாக்கின்ற ஒரு அமைப்பாகும். சரிவான நிலையில் அமைந்த சுவர்களும் இருந்த போதிலும் சுவர்கள் பொதுவாக நிலைக்குத்து அமைப்புகளாகும். மிகப் பொதுவாக, சுவர்கள் கட்டிடங்களினுள் இடத்தைப் பல்வேறு அறைகளாகப் பிரிப்பதுடன், கட்டிடத்தின் உட்பகுதிகளை வெளிப்புறப் பகுதிகளினின்றும் பிரிக்கின்றது.

கோபுரம் என்பது மனிதரால் உருவாக்கப்பட்ட உயரமான அமைப்பு ஆகும். இவை அவற்றின்  நீள, அகலங்களைக் காட்டிலும் பல மடங்கு உயரமாக இருக்கும். கோபுரங்கள் பொதுவாக அவற்றின் உயரத்திலிருந்து பயன் பெறுவதற்காகவே கட்டப்பட்டன.

பாறைகளில் கட்டுமானங்கள்

தமிழக கட்டிடக்கலையில் பல்லவர்கள் காலம் புதிய பார்வையை உண்டாக்கியது. அவர்களது கட்டிடக்கலை அமைப்புகள் குடைவரை, கற்றளி மற்றும் கட்டுமான கோவில் என்று மூன்று விதங்களில் அமைந்தன.

குடைவரைக் கோயில்கள்

பெரிய மலைகளை  குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் “குடைவரைக் கோயில்கள்” என அழைக்கப்படுகின்றன. நீண்ட காலம் நிலைத்து நிற்காத மரம், மூங்கில், வைக்கோல், புல் வகைகள் போன்றவைகளைப் பயன்படுத்தியே கட்டிடங்களை அமைத்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றது. நிலைத்து நிற்கக் கூடிய கட்டிடங்களை அமைப்பதற்கு, பெரியமலைப் பாறைகள் இருக்குமிடங்களில், அவற்றைக் குடைந்து கட்டிடங்களை அமைத்தார்கள். குறிப்பிட்ட பாறையின் ஓரிடத்தில் தொடங்கி கட்டுமான வடிவமைப்புக்கு ஏற்ப பாறையை சரியாக செதுக்கிச்செல்ல வேண்டும். அந்த நிலையில் பாறையில் விரிசல்கள் உருவானால் பணி கைவிடப்படும் என்ற நிலையில் தக்க ஒலியியல் சோதனைகள் செய்து கற்களின் உறுதி கண்டறியப்பட்டது.

கற்றளி

தமிழர் கட்டிடக்கலையில் கற்றளி என்பது நிலத்திலிருந்து துருத்தி கொண்டிருக்கும் பாறை அல்லது குன்று பகுதியை வெளிப்புறமாக மேலிருந்து கீழாக குடைந்து அமைக்கப்படும் கோயில் அமைப்புகள் ஆகும். பின்னர், ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கற்கள் கொண்டு கட்டுமான கோயில்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானது மாமல்லபுர கடற்கரை கோவில் ஆகும். யுனெஸ்கோ அமைப்பால் புராதன சின்னமாக அது அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 45 அடி உயரத்தில் கட்டுமான கோவில்களுக்கும், தமிழர் கட்டுமான நுட்பத்திற்கும் எடுத்துக்காட்டாக இன்றும் அது போன்ற கோவில்கள் உள்ளன.

தொழில் நுட்ப அம்சங்கள்

இக்காலக் கட்டடக் கலை வல்லுநரும் வியக்கும் சில பொறியியல் துணுக்கங்கள் பழந்தமிழர் கட்டடக் கலையில் அமைந்திருந்ததைக் காண்கிறோம். பலவகை அழகிய தோற்றமுடைய பலகணிகளைப் (ஜன்னல்) பழந்தமிழர் கட்டியிருப்பதை அறிய முடிகிறது.

பின்னர், சோழர்கள் காலத்தில் தமிழர் கட்டிட கலை வளர்ச்சி பெற்று, பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் பெரிய அளவில் கோயில்கள் கட்டப்பட்டன. அவை பல்லவர்களின் கட்டுமான பாணியை பின்பற்றியிருந்தாலும், அவற்றிலிருந்து பல்வேறு நிலைகளில் வேறுபட்டிருந்தன. கருங்கற்களை கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல கோயில்களை சோழர்கள் அமைத்தனர். அவர்கள் பல்வேறு பொது கட்டமைப்புகளையும் வடிவமைத்து கட்டிடக்கலையை வளர்த்தது குறிப்பிடத்தக்கது.

இராசராசன் கட்டிய தஞ்சைக் கோபுரத்தின் உயரம் 216 அடி. அப்படியானால் இதன் கடைக்கால் அளவு எத்துணை ஆழமும் அகலமும் உள்ளதாயிருந்திருத்தல் வேண்டும்? கோபுரத்தின் உச்சியில் அமைந்துள்ள ஒரே கல் மட்டும் இருபத்தைந்தரை அடிச் சதுரம் உடையது. இதன் எடை இன்றைய அளவுமுறைப்படி எண்பது டன். இதற்குப் ‘பிரமந்திரதளக்கல்’ என்று பெயர். பாரம் தூக்கி மேலே ஏற்றி வைக்கக்கூடிய புதிய எந்திரங்கள் எவையும் இன்றுபோல இல்லாத காலத்தில் இவ்வளவு பெரிய கல்லை எவ்வாறு 216அடி உயரத்திற்கு ஏற்றினர் என்பது எண்ணி வியத்தற்குரியது. அணைகள் கட்டி நீரைத் தேக்கும் பொறியியலிலும் தமிழர்கள் திறம் பெற்றிருந்தனர். சோழன் கரிகாற் பெருவளத்தான் காவிரிக்குக் கரை எடுத்த பெருமையும், கல்லணை கட்டிய சிறப்பும் நீர்ப்பாசனப் பொறியியல் கட்டடக் கலையியலின் அழியாச் சின்னங்களாக விளங்குகின்றன.

அதன் பின்னர் தென்னகத்தில் சிறப்பான கட்டிடக்கலை வல்லுனர்கள் கொண்ட விஜயநகர அரசின் கட்டிட கலை அம்சங்கள் பொருந்திய கோவில்கள் அமைக்கப்பட்டன.

கல். மரம், செம்பு, இரும்பு, அரக்கு முதலியவற்றைப் பயன்படுத்தி அவ்வக் காலத்தில் தமிழர் கட்டடக் கலை கோயில்களாகவும், அரண்மனைகளாகவும் வளர்ந்த விதம், கோட்டைகளாகவும், பாதுகாப்புக் கட்டடங்களாகவும் வளர்ந்த விதம் அனைத்துமே அவர்தம் வரலாற்றுச் சிறப்பையும், பண்பாட்டுப் பெருமையையும், பொறியியல் நுண்ணறிவையும் விளக்குவனவாக அமைந்துள்ளன.

பொறியியல் வல்லுநர்

இன்றைய பொறியியல் வல்லுநர்கள் (Construction Engineers) போல் அன்றும் கட்டடக்கலைத் திறன் வல்ல நூலறி புலவர் இருந்தனர். சிற்ப நூலை (கட்டடக் கலை நூலை) நன்கு துணுக்கமாக அறிந்த புலவர்கள் நூலை நேரே பிடித்துத் திசைகளை மாறாது குறித்துக்கொண்டு அவ்வத் திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் குறைவறப் பார்த்து அரச மரபினருக்கு ஏற்ப மனையை வகுத்தனர். நூலைப்பிடித்து அளவும் திசையும் பார்க்கும் வழக்கம் இன்றும் கொத்தனார்களிடையே உள்ளது.

கட்டடக் கலையும் பாதுகாப்பும்

கோயில்கள், அரண்மனைகள் போலவே பாதுகாப்புக்கான கோட்டை கொத்தளங்களையும் அகழி, மதில் போன்ற அவற்றின் உறுப்புக்களையும் தமிழர்கள் சிறப்பாக வகுத்திருக்கின்றனர். கோட்டை மதில்களையும் பாதுகாப்புக்கான அகழிகளையும் அமைப்பதில் தமிழர்கள் மிகமிக உயர்திறன் பெற்றிருந்ததை அறியப் போதுமான சான்றுகள் உள்ளன.

நெடிதுயர்ந்த மதில்களில் பாதுகாப்புக்கான பல்வேறு வகை விசைக் கருவிகள் பொறிகள் பொருத்தப்பட்டிருந்தன. தாமாகவே வளைந்து விரைவாக அம்புகளை வீசும் விற்பொறிகள், கருங்குரங்கைப் போன்ற அமைப்புடைய விசைப்பொறிகள், கற்களை உமிழ்வதுபோல வீசியடிக்கும் கவண்பொறிகள், பகைவர் நெருங்கிவர முயலும்போது அவர்மீது கொதிக்கிற எண்ணெயைக் கவிழ்த்துவிடும் பொறிகள், இரும்பைக் காய்ச்சி ஊற்றும் உலைப்பொறிகள், பகைவரைப் பற்றிக் கழுத்தை இறுக்கி முறுக்கும் பொறிகள், ஆளிதலைப் புலிவடிவாக அமைந்த புதுமைப் பொறிகள், அகழியைத் கடந்து மதிலில் ஏற முயலும் பகைவர்களைக் கீழே தள்ளிவிடும் இரும்புக் காப்புக்கள், தூண்டில் பொறிகள், பன்றிப் பொறிகள், ஊசிப் பொறிகள், சங்கிலிப் பொறிகள் முதலான பல்வேறு வகை இயந்திரப் பொறிகளை மதிலில் கட்டி யிருந்தார்கள் என்று சிலப்பதிகாரம் விவரித்துக் கூறுகிறது.

பொதுமக்களுக்கான பொறியியல் அறிவுடன் (Civil Engineering) இராணுவப் பொறியியல் அறிவை (Military Engineering) யும் பழந்தமிழா்கள் பெற்றிருந்தார்கள் என்பதையே இச்சான்றுகளால் உணரமுடிகிறது. அரண்மனையிலிருந்து கோயிலுக்குச் செல்லவும், ஊருக்கு வெளியே இரகசியமாகச் செல்லவும் தமிழ் மன்னர்கள் சுரங்கப் பாதைகள் அமைத்துக் கொண்டனர். இவற்றுள் கட்டடக் கலையோடு தொடர்புடைய மதிலரண் பொதுவில் ‘புரிசை’ என்று கூறப்பட்டாலும், மதில், எயில், இஞ்சி, சோ என்று நால்வகைப்படும். புரிசை என்றால் வளைதல் அல்லது சூழ்ந்திருத்தல்.

மதில்

நால்வகை மதில் அரண்களில் உயரம் ஒன்றே உடை யது மதில்.

எயில்

உயரத்தோடு அகலமும் உடையது எயில்.

இஞ்சி

உயரம் அகலம் இவற்றோடு திண்மையும் உடையது இஞ்சி.

இன்றைய கட்டிடக்கலை

நவீன கட்டிடக்கலை என்பது முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில் பல மேற்கு நாடுகளில் எழுந்த ஒரு கட்டிடக்கலைப் பாணியைக் குறிக்கும். போர்த்துக்கீசியர்கள் மற்றும் ஆங்கிலேய கட்டிட கலை பாணிகளின் தாக்கம் பொது கட்டமைப்புகளில் வெளிப்பட்டன. அதன் பின்னர் மக்களின் வாழ்வியல் நடைமுறைகளுக்கேற்ப வெவ்வேறு இயற்கை பொருட்கள் பயன்படுத்தி குடியிருப்புகள் உள்ளிட்ட பொதுக்கட்டிடங்கள் அமைக்கப்பட்டன.

இன்று நவீன கட்டிடக்கலை என்னும் போது அது 20 ஆம் நூற்றாண்டில் உருவாகி வளர்ந்த தனித்துவமானதொரு கட்டிடக்கலைப் பாணியைக் குறிக்கவே பயன்படுகின்றது.

நவீன கட்டிடக்கலை, பயன்பாடு சார்ந்த வடிவமைப்பு, கட்டிடப்பொருட்களின் அறிவார்ந்த பயன்பாடு போன்ற கொள்கைகளின் அடிப்படையில் உருவானது. இது வரலாற்றுப் பாணிகளைப் பின்பற்றுவதையும், அழகூட்டல் அணிகளைப் பயன்படுத்துவதையும் கைவிட்டு, கட்டிடப்பொருட்களினதும், கட்டிட வடிவங்களினதும் உள்ளார்ந்த அழகியல் தன்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு முக்கியத்துவம் கொடுத்தது. இதனால் நவீன கட்டிடக்கலை, கட்டிடங்களுக்கு எளிமையான வடிவத்தைக் கொடுத்தது.

இன்றைய கட்டுமான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கட்டமைப்புகளை விரைவில் உருவாக்கும் ‘பிரி-பேப்ரிகேட்டடு’ கட்டுமான யுக்தி மூலம் சில வாரங்களில் வீடுகளை அழகாக உருவாக்கி குடியேற இயலும் என்பது கவனிக்கத்தக்கது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments