
சங்ககால ஈழமும் அதன் சமூக கட்டமைப்பும்
சங்ககால பழந்தமிழகத்தில் வேந்தர், அரசர், வேளிர் போன்றவர்கள் ஆளும் வகுப்பாக இருந்தனர். இவர்களை ஈழத்திலுள்ள பாகத மொழி கல்வெட்டுக்களில் மஹரஜ,ரஜ,வேள் என விளிக்கின்றன. அதற்கான காரணமாக அமைந்தது சங்ககால பழந்தமிழகமாக திகழ்ந்த ஈழத்தில் கி.மு 6 முதல மற்கலி கோசாலர்,கணி நந்தாஸிரியர்,பூரண காசிபர் போன்ற பெருந்துறவிகளால் தோற்றுவிக்கப்பட்ட ஆசீவகம் காரணமாகும். இவர்கள் தமது ஓகச் செயற்பாட்டின் போது அமர்ந்திருந்து அதனை செய்வதால் அமணர் என தமிழில் அழைக்கப்பட்டனர்,இதனை தமிழக கல்வெட்டுக்களில் காணப்படுகின்ற மூதா அமணன் செங்காயபன் போன்ற கல்வெட்டுக்கள் மூலமாக அறிந்துகொள்ள முடியும்,
அதனையே பாகத வடிவில் சமணம் என எழுதினர், சம்மணமாக அமர்வது என்பதும் அதே பொருளையே கொண்டது.இந்த சமணம் சங்கத்தில் ஸ்ரமணம் என்றாகியது.
அடுத்து இந்த பழந்தமிழக சமூக கட்டமைப்பின் பிரதான அங்கமாகத் திகழ்ந்தோர் அந்தணர்/பமண(அமணர்) தாபதர்/பத, அறிவர்,இவர்களை பிங்கல நிகண்டு சாவகர்,அருகர்,சமணர்,அமணர் என்றும் கூறுகிறது, இவர்களே பண்டைய பல அந்தணர்கள்.இவர்களில் ஈழத்துக் கல்வெட்டுக்கள் குறிக்கும் பமண என்ற சொல் பாகத்தில் சமணர் என குறித்த அமணர்,இவர்களில் பெரு அமணர்கள் மக்கலி,பூரணர்,கணி ந்ந்தாஸிரியஇ என்போராவர். இதனையே தமிழக கல்வெட்டு மூதா அமணன் செங்காயபன் என்றும் கூறுகிறது, அத்தோடு இந்த பத என்ற பாகதச் சொல் தாபதர் ஆகும். இவர்களோடு இந்த கணியர் போன்ற பிசிராந்தையார் புறம் 191ஆம் பாடலில் குறிப்பிடும் கொள்கைச்சான்றோரும் இரண்டாம் வகுப்பாக இருந்தனர். இவர்கள் அறிவு, ஆய்வு, ஒழுக்கம், பொதுநலம், துறவு ஆகியவற்றில் சிறந்தவர்கள்.
அடுத்து வணிகர்கள்/வணிஜ தொழில் செய்பவர்கள், வேளாண்மை செய்யும் நிழக்கிழார்கள்/கமிக போன்றவர்களில் செல்வந்தர்களும், உயர்ந்தோர்கள் எனப்படுவோரும் மூன்றாவது வகுப்புக்கு உரியவர்கள்.இவர்களை ஈழத்துக் கல்வெட்டுக்கள் பருமக என்கிறது.
இவர்களில் சிறு குறு வணிகர்கள், சிறு குறு தொழில் செய்பவர்கள், சிறு குறு வேளாண்குடிகள் ஆகியோரும், இன்னபிறரும், போர்வீரர்களும், பார்ப்பனர், பாணர், கூத்தர், பொருநர், விறலி போன்றவர்களும் நான்காவது வகுப்பைச் சேர்ந்தவர்கள். புலையர், இழிசனர் போன்றவர்களும் இந்த நான்காம் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். சங்ககாலத்தில் அவர்கள் மதிப்புக்குரியவர்களாகவே இருந்தனர். பழந்தமிழகத்தில் இந்த நான்கு வகுப்புகள் மட்டுமே இருந்தன. அதை போன்றுதான் ஈழத்திலும் அந்த அச்சுப்பிசகாமல் இருந்தன. அதனை ஈழத்துக்கல்வெட்டுக்களும் உறுதி செய்கின்றன.ஆகவே இந்த ஈழக்கல்வெட்டுக்கள உரைக்கும் பமண,பத,கண,மஹரஜ,ரஜ,வேள் போன்றவை பழந்தமிழக சமூக கட்டமைப்பின் பாகத வடிவங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பழந்தமிழக கட்டமைப்பு பின்பாக பல்வேறு அந்நிய படையெடுப்புக்கள், காலனித்துவ ஆட்சிகள் ஊடாக சிதைக்கப்பட்டு உருத்தெரியாது சிதைந்து போனாலும் அதன் வேர்கள் இன்னமும் அங்கு ஒன்றாக இங்கு ஒன்றாக இந்த வேரடி மண்ணோடு இன்றும் மறையாது இருப்பதையே கீழ்வரும் பெயர்கள் இன்றும் காணப்படுதனை கொண்டு அவற்றை ஊகிக்கலாம் அவை நாகராசா,நாகம்மா,திசநாயகம்(திஸ) திசவீரசிங்கம்(திஸ), தேவசிகாமணி(கமணி),தவராசா(தம) தவக்குமார்(தம) என பற்பல வடிவில் காணப்படுகின்றன,இவை போன்ற பெயர்கள் மிகவும் அதிகமாக ஈழத்தமிழர்களிடம் காணப்படுவதனை கொண்டு இவர்கள் பண்டைய ஈழத்து நாகர்களின் வழிவந்தோர் என அடையாளம் காண்பது மிக எளிதாகிறது.