×

யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டின் பழங்குடி மக்கள்

யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டின் பழங்குடி மக்கள்

யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டின் பழங்குடி மக்கள். இக்கால் சிங்களவர்களால் தமிழர்கள் என்று குறிக்கப்படுபவர்கள், இந்த இருவகை தமிழர்களையும் சேர்த்தே கூறப் படுகிறார்கள். இந்த யாழ்ப்பாணப் பகுதித் தமிழர்களின் சார்பாகவே ‘தமிழர் விடுதலை முன்னணி’ என்னும் கட்சி இயங்கி வருகிறது. எனினும், இக்கட்சி இந்த இரு வகைத் தமிழர்களுக்கும் சேர்த்தே விடுதலை கோரி வருகிறது. தமிழர்கள் தாங்கள் இடைக்காலத்தில் வாழ்ந்து தனித்து முழு இறைமையுள்ள அரசாக ஆண்டு வந்ததைப் போலவே, இன்றும் அந்நிலப்பகுதிகளைத் தனியாகப் பிரித்துத் தமிழர்களே ஆளவேண்டும் என்பதே தமிழர் விடுதலை முன்னணிக் கட்சியின் கோரிக்கையாகும்.

தமிழர்களைத் தவிர, இப்பொழுது பிரிட்டிசுக்காரர் களால் வந்து வாய்த்த அரசைக் கைப்பற்றியுள்ள சிங்களர்களும் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறார்கள். கீழ் நாட்டுச் சிங்களவர், கண்டிச் சிங்களவர் எனப்படுபவர்கள் அவர்கள். கீழ்நாட்டுச் சிங்களவர்கள் என்பவர்கள் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தரை, அம்பாந்தோட்டை முதலிய மேற்கு, தெற்கு நகர்ப்புற மாகாணங்களில் வாழ்பவர்கள். கண்டிச் சிங்களவர்கள் எனப்படுபவர்கள் இந்தியத் தமிழர்களைப் போலவே கண்டி, மாத்தளை, நுவரெலியா, வதுளை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல் முதலிய மலைப்பகுதி மாகாணங்களில் வாழ்பவர்கள். இவர்களும் தோட்டத் தொழிலாளர்களே. கடந்த காலங்களில் ஏற்பட்ட இனக் கலவரங்களில் பெரும்பாலும் தோட்டப் பகுதிகளில் உள்ள தமிழர்கள் இவர்களாலேயே பெருத்த அழிவுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளானார்கள்.

இவ்விரு பேரினங்கள் தவிர, மூர்கள், மலாய்க்காரர்கள், பறங்கியர்கள் ஆகியோரும் மிகச் சிறுபான்மையினராக இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வினப் பாகுபாடுகளெல்லாம் ஆங்கில அரசாட்சிக் காலத்திலேயே வகுக்கப்பட்டனவாகும்.

இனி,சமயங்களைப் பொறுத்த அளவில், இலங்கையில் உள்ள மக்களில் பெரும்பான்மையினர் (67. 3 விழுக் காட்டினர்) புத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் சிங்களவர்களே, இந்துக்கள் 17.6 விழுக் காட்டினர். இவர்களனைவரும் இந்து சமயத்தைக் குறிப்பாக சைவ சமயத்தை சார்ந்தவர்கள். கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் சிங்களவரின் முன்னோன் என்று கருதப்படும் விசயன் வருவதற்கு முன்பே, இங்குச் சைவ மதம் மிகச் செழிப்பாக வளர்ந்தோங்கியிருந்து என்று, வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. அதற்குச் சான்றாக திருக்கேதீசுவரம், முனீசுவரம், தொண்டீசுவரம், திருக்கோணேசுவரம் நகுலேசுவரம் ஆகிய ஐந்து புகழ்மிக்க சிவத்திருவிடங்கள் இங்கு உண்டு.

இசுலாம் மதம் இங்கு இந்து மதத்திற்கு அடுத்த மதமாக உள்ளது. இங்குள்ள மக்களில் 7.1 விழுக்காட்டினர் இசுலாம் மதத்தைச் சார்ந்தவர்கள். இம் மதத்தைச் சார்ந்த முசுலிம்கள் அனைவரும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழர்களே. இவர்கள் இலங்கையில் எல்லாப் பகுதிகளிலும் பரந்து வாழ் கிறார்கள். கிழக்கு மாகாணம், கொழும்பு, புத்தளம், மன்னார் ஆகிய இடங்களில் பெரும் எண்ணிக்கையாக நெருங்கியும் வாழ்கின்றனர்.

கிறித்துவ மதத்தைப் பொறுத்தவரையில் அங்குள்ள கிறித்தவர்களில் 7.1 விழுக்காட்டினர் உரோமன் கத்தோலிக்கர். 0.8 விழுக்காட்டினர் பிற கிறித்துவ மதத்தைச் சார்ந்தவராவர். இவர்களல்லாத பிற மதத்தினர் மிக மிகச் சிறுபான்மையரான 0.1 விழுக்காட்டினரே.

பொதுவாக இலங்கைத் தமிழர்கள் மன்னார், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அவ்விட மக்கள் தொகையில் பகுதிக்கு மேலும், யாழ்ப்பாணத்தில் மட்டும் 94.9 விழுக்காட்டளவிலும், திருகோணமலையில் 35 விழுக்காட்டளவிலும், அம்பாறையில் 22 விழுக் காட்டளவிலும் வாழ்கின்றனர்.

அரசியல் முறையில் இலங்கை, இக்கால் 24 ஆளுமை மாவட்டங்களாகப் பகுக்கப் பெற்றுள்ளது. இவை 9 மாநிலங்களாக (மாகாணங்களாக) வகுக்கப் பெறுகின்றன. அம் மாகாணங்களும், அவற்றுள் அடங்கிய மாவட்டங்களும் வருமாறு :

1) மேல் (மேற்கு) மாகாணம்:

(மாவட்டங்கள் மூன்று)

1.கொழும்பு (Colombu);

2. களுத்துறை(Kalutara);

3. கம்பகா (Kambaka)

2) நடு மாகாணம் (மாவட்டங்கள் மூன்று)

4. கண்டி (Kandy);

5. மாத்தளை (Matala);

6. நுவரேலியா (Nuwara-Eliya)

3) தென் மாகாணம்: (மாவட்டங்கள் மூன்று)

7. காலி (Galle);

8. மாத்தரை (Matara);

9. அம்பாந்தோட்டை (Hambantota).

4. வட மாகாணம்: (மாவட்டங்கள் நான்கு)

10. யாழ்ப்பாணம் (Jaffna);

11. மன்னார்( Mannar);

12.வவுனியா (Vavuniya);

13. முல்லைத்தீவு(Mullai Tiv)

5. கிழக்கு மாகாணம்: (மாவட்டங்கள் மூன்று)

14. மட்டக் களப்பு (Batticaloa);

15. அம்பாறை(Amparai);

16. திருகோணமலை (Trincomalee).

6) வடமேல் மாகாணம் (மாவட்டங்கள் இரண்டு)

17. குருநாகல் (Kurunegala);

18. புத்தளம்(Puttalam).

7) வட நடு மாகாணம்: (மாவட்டங்கள் இரண்டு)

19 அநுராதபுரம் (Anurathapuram);

20 பொலநறுவை (Polonnaruwa).

8) ஊவா மாகாணம்: (மாவட்டங்கள் இரண்டு)

21. வதுளை (Badulla);

22. மொனறாகலை
(Moneragala).

9) சுப்பிரகமூவா மாகாணம்: (மாவட்டங்கள் இரண்டு)

23. இரத்தினபுரி. (Ratnapur )

24. கேகாலை. (Kegalle).

இவற்றுள் வடமாகாணம், கிழக்கு மாகாணம், நடு மாகாணம், முதலிய இடங்களில் தமிழர்கள் பேரளவிலும், மற்ற பகுதிகளில் சிங்களவர் பேரளவிலும் வாழ்கிறார்கள்.

இக்கால், ஆட்சி சிங்களவர் கைக்குள்ளிருப்பதால் அங்குள்ள தமிழர்களை மொழி, இன ஆளுமைகளால் ஒடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு, தமிழர்கள் பெரும் பாலும் வாழும் இடங்களில் எல்லாம் சிங்களவர்களைப் பெருமளவில் குடியேற்றும் வேலை அரசின் ஆதரவுடன் நேரிடையாகவும் மறைமுகமாகவும் நடைபெற்று வருகிறது.

-தொடரும்…….

-தமிழீழம்

-பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தொகுப்பு: தமிழரசன்அப்துல்காதர்

 

guest
0 Comments