×

தென்னவன் என்ற பாகத வடிவமே தெவநபிய அதன் விளக்கம்.

தென்னவன் என்ற பாகத வடிவமே தெவநபிய அதன் விளக்கம்.

ஈழத்து பாண்டிய வேந்தர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டு வந்த இந்த உயரிய சிறப்பு பட்டமாகிய தெவநபிய என்பது மகாவம்சம் அசோகரோடு தொடரபுடையவனாக கூறுகின்ற தெவநபிய திஸ என்ற வேந்தனுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வந்த சிறப்புப் பட்டம் அல்ல,அது அவனது தந்தைக்கும் இந்த தெவநபிய திஸ பெற்றுக்கொள்ளும் முன்பாக இருந்துள்ளது,அது மாத்திரமல்ல இந்த தெவநபிய திஸ பாட்டன் கமணி அபயனுக்கும் இருந்துள்ளது,அத்தோடு இந்த தெவநபிய திஸ பூட்டன் உதிக்கும் இருந்துள்ளது,இவை அனைத்தும் வெறும் இலக்கிய புனைவுகள் அல்ல,அவை உறுதியான சான்றாக அமையும் கல்வெட்டு ஆதாரங்களாக காணப்படுபவை,அவை Inscription of Ceylon என்ற ஏட்டில் IC 46,47 தெவநபிய உதி, IC 193,994,29 தெவநபிய கமணி அபய, IC 425,424,426,422,236 தெவநபிய கமணி திஸ, IC 725 தெவநபிய (திஸ) என அவனது சேனாதிபதிகள் இருவரது கல்வெட்டில் வெறுமனே தெவநபிய என்ற சொல் மூலமாக கருதப்படுவது தெவநபிய திஸ ஆக இருக்கலாம்,ஆக இந்த தெவநபிய திஸ தந்தை கமணி திஸ,அவரது தந்தையாகிய கமணி அபய, அவருக்கும் தந்தையாகிய கமணி உதி ஆகிய நான்கு தலைமுறை அரசர்கள்

இந்த தெவநபிய என்ற உயரிய பட்டத்துக்கு உரிய வேந்தர்களாக இருந்தார்கள் என்பதை அறிய முடுவதோடு அவர்கள் ஆய்குல பாண்டியர்கள் என்பதையும் தெட்டத்தெளிவாக அவர்களுடைய கல்வெட்டுக்களில் காணப்படுகின்ற மீன் சின்னம் வெளிப்படுத்தத் தயங்கவில்லை,மேலும் இவர்கள் சங்ககால பழந்தமிழக ஏனைய தமிழ் மூவேந்தர் போன்று ஆசீவக நெறியையே கடைப்பிடித்து ஒழுகியதும் அப்பட்டமாக எந்த ஐயமுமின்றி புலனாகிறது அதற்கான ஆதாரங்களும் வெளிப்படையாக அதன் குணம்குறிகளோடு வெளிப்படுத்தும் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன,அதனை போதுமான அளவுக்கு ஏற்கனவே கண்ணுற்று விட்ட காரணத்தால் இன்றைய எடுகோள் கருத்தாகிய இந்த தெவநபிய என்ற சொல்லின் பொருள் பற்றிக் காண்போம், அதற்கு முன்பாக அந்த சொல்லை விளக்கத் தேவையான சில அடிப்படை சொற்களை ஆராய்வது அதற்கு உகந்ததாக துணை புரியும் ஆதலால் , முதலில் இந்த பாண்டிய அரசர்களுடைய பாகத பெயர்களில் இருந்து அதற்குரிய விளக்கத்தைக் காணலாம், உங்களுக்குத் தெரியும் எந்தவொரு தமிழ் பெயரும் அது ஆண்களுடையதாயின் அன் விகுதி கொண்டிருக்கும் அதேபோன்று இந்த பாண்டிய அரசர்களுடைய அபய என்ற பெயரின் அன்விகுதி சில கல்வெட்டுக்களில் அபயந என்ற பக்த அன்விகுதி பெற்றுக் காணப்படுகிறது, ஆகவே இந்த அபய ,,ய,, என்ற எச்சத்தோடு காணப்படுகின்ற பெயர்கள்

அபயன் என்ற தமிழ் அன்விகுதி பெற்றுக் காணப்பட வேண்டிய நிலையில் இந்த ,,ந்,,அதற்கு வலிந்து கொடுக்கப்பட்டு உள்ளது, அதேபொன்று திஸய-திஸன் இது தமிழக அழகன்குளத்தில் இவ்வாறுதான் முழுமையாக உள்ளது, அதேபோன்று ரஜய என்பது (அ)ரச(ன்) ஆகும். அதேபோன்ற கமணி ரஜய கரிதெ என்றால் கமணி அரசர் உருவாக்கியது, அதனையே கமணி ரஜயபி கரிதெ என்றால் கமணி அரசர் பெரும உருவாக்கியது என பொருள்,இந்த பெரும என்பதன் தமிழ் வடிவம் பெருமான்,பெருமகன் என்பதாகும். இதற்கு சேரமான் பெருமான் சிறந்த உதாரணமாகும். ஏன் அண்மையில் இலங்கை களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தெவரபெரும என்பவர் பெயரில் உள்ள இந்த பெரும கூட பெருமான் என்ற தமிழ் பதம்தான்,ஆகவே இந்த தெவநபிய என்ற சொல் பற்றி ஆராய முன்னர் முதலில்

இந்த தெவந என்ற சொல் எவ்வாறு இந்த அதுவும் தமிழர் தொல்குடியாகிய பாண்டிய ஆய்குல வேந்தனுக்கு வந்தது என நன்கு ஆராய்ந்து பார்க்கின் பண்டைய காலத்தில் சேர்ர்களுக்கு எவ்வாறு வானவன் என்ற வேந்தன் பட்டம் இருந்தோ அதேபோன்று இந்த பாண்டியர்களுக்கு தென்னவன் என்ற வேந்தனுக்கு மட்டுமே உரிய பட்டம் இருந்ததை அறிவோம் இந்த தென்னவன் என்ற பெயரை பாகதவடிவில் எழுதுவதற்கு தமிழ் மொழி்க்குரிய ன பாவிப்பது கிடையாது ஆதலால் அந்த தெ(ன்)(ன)வ என்ற எழுத்தை மாத்திரம் கொண்டும் அதன் இறுதியில் வரவேண்டிய ன் என்ற எழுத்தாக கருதப்படும் ந என்ற எழுத்தை புகுத்தி தெவந என எழுதினர்,அதனால் தென்னவன் என்ற பாகத வடிவை உருவாக்கியாயிற்று இனி அதனை தென்னவன் பெரும அதாவது தென்னவன் பெருமான் என வரவேண்டிய நிலையில் கமணி ரஜயபி அதாவது கமணி அரசர் பெரும என்ற சொல்லில் காணப்படுவது போன்று தெவநபி தென்னவன் பெரும என விளித்து அதன் இறுதியில் அன்விகுதி தோன்றா எழுவாய்போன்று அமைத்தனர்

இந்த ய என்ற எழுத்தில் பாகத பெயர்கள் திஸய-திஸன்,அபய-அபயன் என அந்த மொழியியல்பு கண்டோம்,ஆகவே இந்த தெவந என்பது தென்னவன்,தெவநபி என்பது தென்னவன் பெரும,தெவநபிய என்பது தென்னவன் பெருமான் ஆகும். இந்த தெவநபிய என்ற சிறப்பு பட்டத்தை இந்த கமணி உதி கிமு 5 இல் தனது வேந்தருக்கு உரிய சிறப்பு பட்டமாக வைத்துள்ளார் அதன்பின் அவர் மகன் கமணி அபய கிமு 4 ,அவர் மகன் கமணி திஸ கிமு 4 அவரது மகன் தெவநபிய திஸ கிமு 3 ஆகியவற்றில் கொண்டு விளங்கிய காரணத்தால் இந்த தெவநபிய என்ற தென்னவன் பெருமான் என்ற பாகத பெயருக்கும் அசோகருடைய தேவாநா(ம்)பிய பியதஸி என்ற தேவனுக்கு பிரியமான சொல்லுக்கும் அதன் எழுத்துரு ஒற்றுமையன்றி பொருள் ஒன்றல்ல,இரண்டும் வெவ்வேறு பொருளை குறிப்பவை, இந்த தெவநபிய என்ற தென்னவன் பெருமான்

என் பட்டத்தைச் சூடிக்கொண்ட கமணி உதி காலத்தில் இந்தியா மீது அலக்சான்டர் கூட படையெடுத்து வரவில்லை, மோரிய அரசும் அசோகருடைய பாட்டன் சந்திரகுப்தன் தலைமையில் தோன்றவில்லை, அப்போது அதனை ஆண்டு கொண்டு இருந்தவர்கள் நன்னர்கள் என்ற தமிழ் வேளிர் குலங்கள், இவ்வாறான தெவநபிய என்ற பட்டப் பெயருக்கு இணையான பெயரை சூடிக்கொண்ட சங்ககால தமிழ் அரசர்கள் யாராவது இருக்கிறார்களா என ஆராய்வோமானால் அதற்கு இணையான வானவன்,வானவரம்பன் என்ற தெய்வீக பெயரைச் சூடிக்கொண்ட சேர அரசர்கள் வரலாற்றில் காணப்படுகிறார்கள். அவர்களில் கொல்லிமலையைத் தன் நாட்டோடு கொண்டிருந்த வானவன்,
ஆமூரைத் தாக்கி ஆமூரை ஆண்ட கொடுமுடி என்பவனிடம் தோற்றோடிய வானவன், கோடியர் என்னும் யாழிசைப் பாணர்களைப் பேணிப் பாதுகாத்த குதிரைப்படைத் தலைவன் வானவன், கோட்டைக் கொத்தளங்களை நொறுக்கிய வானவன், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் தோற்ற இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனாகிய வானவன், குடகடலில் பிற கப்பல்கள் செல்லாவண்ணம் தன் மரக்கலங்களை ஓட்டி வாணிகம் செய்த (கடல் பிறக்கு ஓட்டிய சங்குட்டுவனாகிய) வானவன், ஆகியோர் வானவன் என்னும் பெயரால் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

வானவன் என்னும் சொல் இந்திரன் என்னும் தேவனைக் குறிக்கும் வகையில் எடுத்தாளப்பட்டுள்ள இலக்கிய வழக்குகளும் உண்டு. வானவன் முடித்தலை உடைத்த தென்னவன், வானவன் விழவு இந்திர-விழா வானவன் விழாக்கோள் போன்றவை அவை.
அதே போன்று..

வானவரம்பன் எனச் சேர மன்னர்களும் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். வானவரம்பன் என்பது சங்க காலத்தில் சேர மன்னர்களுக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சிறப்புப் பெயராகும். ‘வானத்தை எல்லையாகக் கொண்டவன்’ அல்லது ‘வானவர்க்கு (தேவர்க்கு) இனியவன்’ என்று இப்பெயருக்குப் பல்வேறு பொருள்கள் உள்ளன. ”வானவரம்பன் நன்னாட்டு உம்பர்” (தமிழர் பொருள் தேடச் சென்றனர்).

பதிற்றுப்பத்து ஆறாம்பத்தின் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், பகைவர் கோட்டையை நொறுக்கியபின் (குட்டம் தொலைய வேலிட்டு கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்)
வெளியத்தை ஆண்ட சேரமன்னன் வானவரம்பன்  சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் ஆகியோர் வானவரம்பன் எனப் போற்றப்பட்டுள்ளனர்.இவை சேர மன்னர்களின் சிறப்புப் பெயர்கள். சேர நாட்டு அரசர்கள் இமயவரம்பன், வானவரம்பன் என்னுஞ் சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்ததைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். மாமூலனார் என்னும் புலவர் ஒரு வானவரம்பனைக் குறிப்பிடுகிறார் (அகம் 359 : 6) வெள்ளிவீதியார் என்னும் புலவர் ஒரு வானவரம்பனைக் கூறுகிறார் (அகம் 45:17). நக்கீரர் என்னும் புலவர் ஒரு வானவரம்பனைக் கூறுகிறார் (அகம் 389 : 16). வானவன், வானவர் என்பது சேர அரச குலத்தைச் சேர்ந்த வேந்தனுக்கு உரியது,அதேபோன்று தென்னவன் என்பது தென்னவர்ப் பெயரிய துன்னருந் துப்பின்  தொன்முது கடவுட் பின்னர் மேய வரைத்தாழ் அருவிப் பொருப்பிற் பொருந” (அடி 40-42) இந்த பொருந என்பது பாகத மொழியில் தம்பபர்ணி என விளிக்கப்பட்ட,சங்கத மொழியில் தாமிரபரணி என அழைக்கப்பட்ட பொருநைக்கு அதிபதியான பாண்டியன்,பொருப்பிற்குத் தலைவன்…

தென்னவன் பெயரிய … பொருப்பு = தமிழகத்தின் தென்பகுதியை ஆண்டதால் தென்னவன் என்று பெயர் பெற்ற பாண்டியனை ஒத்துத் தென்மலை எனப்பெற்ற பொருப்பு
பொருப்பின் பொருந = அத்தென் மலையின் வீரம் மிகுந்த தலைவனே … பாண்டியனே ! என பொருள் அந்த பொருந இன்று பொம்பரிப்பு ஆக திரிந்து விட்டது,அது இந்த பொருந நாகரிகத்தின் எச்சம் இதன் பொருளை புராண இதிகாச அகத்தியரோடு புனைபவர் ஏராளம்.

 

guest
0 Comments