×

பாண்டியன் நெடுஞ்செழியன் என்பவன் யார்?

பாண்டியன் நெடுஞ்செழியன் என்பவன் யார்?

IC 338 பெரியபுளிங்குளம்,வவுனியா
ரஜ நக ஜித ரஜ உதி ஜய அபி அநுரதி ச கரபித ஸ இம லெணெ ஸதுதிஸ ஸ ஸகய அகத அநகத அகதந பஸூ விஹரயெ அபரிமித லோகத்துய ஸதந ஸித ஸுகயெ.

இதன் பொருளாவது 
நாக அரசர் மகள் இளவரசி அநுரதியும் அவள் கணவர் அரசர் உதியும் உருவாக்கிக் தானமாக கொடுத்த இந்தக் கற்பாழி ,என்பதோடு இது நாற்திசை திசைகளில் இருந்து வரும் சந்நியாச துறவிகளுக்கு “லோகத்துய ஸதந”என்ற உலோக பூதவாத,அணுவாத சாதன தவம் மேற்கொள்வதற்கு உரிய “விஹரயெ”சந்நியாசிகளுக்கானது என்பது அதன் பொருள், எனவே அன்று இந்த விஹரயெ என்பது சந்நியாசிகளையே குறித்தன என்பதும், அது இன்றுள்ளது போன்று விகாரையை என்ற கட்டுமானத்தை குறிக்கவில்லை என்பதும் தெளிவாகிறது,அதே போன்ற சொல் “ஸதிவிஹரிய” இது நிலையாக ஓர் இடத்தில் தங்கியிராத பரதேசி சந்நியாசிகளை குறிக்கும்,அதே போன்ற இந்த
புத்த,தெரஹ,விஹரிய,ஸதிவிஹரிய என்பதும் ஆதியில் சமணம் சார்ந்ததாக காணப்படுவதை கல்வெட்டுக்கள் ஊடாக காணமுடிகிறது.அது மாத்திரமல்ல,இந்த பாதச்சுவடு வழிபாடு என்பதும் வெண்காயப என்ற ஐயனார் வழிபாடு என்பதன் மூலம் அதுவும் இந்த சமணம் சார்ந்தது என்பதும் உறுதியானது.மேலும் இந்த பூரணர் கோதம புத்தர் போன்று கிரியாவாத அதாவது கர்மவினை என்ற தத்துவத்தை பரப்பிய பெளத்த புத்தர் அல்ல,அவரது கர்மவினை என்ற கொள்கைக்கு நேரெதிரான அகிரியவாத கர்மவினை மறுப்பு கொள்கை உடையவர்,சமண புத்தர்.- மேலும்

இக்கல்வெட்டு குறிக்கும் அரசர் உதி கிமு 6 ஆம் நூற்றாண்டில் இக்கல்வெட்டு எழுதப்படும் தருவாயில் வரலாற்று ரீதியான ஈழத்து முதன்மை அரசர் கமணி அபய என்ற அரசரின் பத்து மகன்களில் ஒருவராக இருந்து இளவளசி அநுரதியை மணந்து ,அந்த கமணி அபய என்ற அரசருக்குப் பின்னே தெவநபிய மஹரஜ உதி என்ற முதல் பாண்டிய பேரரசராக முடிசூட்டிக் கொள்கிறார்.ஆனால் இவரது தந்தைக்கு அவ்வாறான தெவநபிய,மஹரஜ,என்ற பேரரசருக்குரிய பட்டங்களை காணமுடியவில்லை,வெறுமனே கமணி என்ற பட்டத்தை மாத்திரமே கொண்டு விளங்குகிறார்,ஆகையால் இந்த அரச பரம்பரை இந்த கமணி அபய என்ற அரசரோடுதான் ஓர் அரச பரம்பரையாக ஆரம்பித்து அவருக்கு அடுத்த அவரது மகனாகிய தெவநபிய மஹரஜ கமணி உதி காலத்தில்தான் பேரரசாக எழுச்சி கொள்கிறது என்பதை அறிய முடிகிறது.

இந்த முதலாவது பாண்டிய பேரரசராக விளங்கிய தெவநபிய மஹரஜ கமணி உதி என்ற பாண்டிய பேரரசருக்கு ஓர் மகன் பிறந்து அவனும் இவரது ஆட்சியின் பின்னே தெவநபிய கமணி அபய என்ற அவனுடைய பேரன் பெயரிலேயே பேரரசராக முடிசூடுகிறார்.இவருக்கும் ஒரு மகன் பிறந்து அவரும் இவருக்கு பின்னே தெவநபிய கமணி திஸ என்ற பேரரசர் ஆகிறார்.அவருக்கும் அவரை மகன் பிறந்து தெவநபிய திஸ என்ற பட்டத்தைப் பெறுகிறார்,இவருடைய இரண்டு மனைவியரும் சமணத்துறவு பூணுகிறார்கள்,அத்தோடு இந்த அரச குடும்ப ஆட்சி கல்வெட்டு ஆதாரங்களின் சான்றுகள் அடிப்படையில் நிறைவுக்கு வந்து விடுகிறது, அதன்பின் இந்த அரச குடும்ப வாரிசுகளின் ஆட்சி தொடரவேயில்லை,மகாவம்ச கதைகள் இந்த வரலாற்றோடு பொருந்தாது.

இனி இந்த அரசர்கள் பற்றிய விரிவான ஆய்வுக்கு வருவோம்,இந்த அரசர்கள் அனைவருமே சமணத்தை சேர்ந்து தமது பெயரை இவ்வாறு அவர்களுடைய அரச பெயர்களாக வைத்திருந்த போதும் ,அவர்கள் அந்த அரச வாழ்வைத் தத்தமது மகன்கள் உரிய வயதை எட்டியதும் அவர்களுக்கு முடிசூட்டிவிட்டு அதன்பின் தமது பாரம்பரிய சமணத் துறவறத்தை மேற்கொண்டு அந்த துறவறம் மேற்கொள்ளும் போது பெற்ற தீக்கை பெயரால் அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை பல கல்வெட்டுக்கள் ஊடாக அறிய முடிகிறது,அவற்றில் ஒன்று இந்த மஜிமஹ ரஜ என்ற பெயராகும்,அந்த மஜிமஹ என்ற பெயரை பெற்ற பேரரசர் யார் என காண்கையில் அவர்

கொத்தாமூகல,போவத்தகல,கெனனகல என்ற இடத்து கல்வெட்டு” கமணி திஸ ஹ பித ஹ ச மஜிம ரஜ ஹ ச நியத கமணி ச பரிபகநி கிரிதிஸ கமெ கரஜிநிதிஸகமெ விலகமெ கஸபநகரெ மலுகமெ நெகபிகெ” என்ற கல்வெட்டு ஊடாக இந்த கமணி திஸ என்பவருடைய தந்தை மஜிம ரஜ என்பதன் ஊடாக இந்த தெவநபிய மஹரஜ கமணி திஸ தந்தையான தெவநபிய மஹரஜ கமணி அபய என்பவரைத்தான் இது மஜிமஹ குறிப்பிடுகின்றது என்பதை அறிந்து கொண்டோம்,அடுத்து இந்த அரசரால் வெளியிடப்பட்ட மஜிமஹ என்ற களிறு (ஆனை)உருவம் பொறித்த நாணயத்தையும் கண்டு கொண்டோம்.

அடுத்து IC 1045 
“ஸகஸ மொகலி புத பருமக மஜிம புத த(த்) தஹ லெணெ” என்ற கல்வெட்டு ஊடாக இந்த மஜிமஹ என்ற தீக்கை பெயரை துறவறத்தின் போது பெற்றுக்கொண்ட தெவநபிய மஹரஜ கமணி அபய என்ற பேரரசருடைய தந்தையாகிய ஈழத்து முதலாவது பாண்டிய பேரரசராக தெவநபிய மஹரஜ கமணி உதி என்பவர்தான் இந்த மொகலி என்ற சமணத்துறவி என்பதையும் அவரே இந்த பாகத மொழியில் சமணம் எனப்பட்ட ஆசீவகத்தின் தோற்றுநராக இருந்தும் அவர் அதில் கழிவெண்பிறப்பு என்ற நிலையை எய்தி ஐயனாராக வணங்கப்படுபவர் அவரே என்பதையும் கண்டு கொண்டோம்,
ஆகவேதான் இந்த மொகலி(மற்கலி என பாகத த்தில் எழுதுவதற்கு தமிழி சிறப்பெழுத்து “ற”அம்மொழியில் கிடையாது)
அவரை பற்றிய கல்வெட்டும் கெனனகல என்ற இடத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டது,அதில் “பகவத கோதம சமணெ மொகலி பு(த்)த தெரஹ,ஸரி பு(த்)த தெரஹ .புந தெரஹ,புஸ தெரஹ ஸதிவிஹரிய அகத அநகத ஸதுதிஸ ஸகஸ திநெ,பருமக அபய புத பருமக எரக “என்கிறது, இந்தக் கல்வெட்டு அபய மகன் எரக என்பவரால் வெட்டப்பட்டுள்ளமையால் இது இவரது பத்து சகோதரர்களில் ஒருவராகவும் இவர்களுடைய தந்தை அபய என்பவருக்கு மகனாகவும் இருக்கக்கூடும்.

அடுத்து இந்த பகவத மொகலி கோதம சமணெ என்று அழைக்கப்பட்ட இந்த தீக்கை பெயரை பெற்ற தெவநபிய மஹரஜ கமணி உதி என்பவர் மஹரஜ என்ற பேரரசர் என்ற நிலைக்கு வருவதற்கு முன்பாக அவர் இளவரசராக இருந்தபோது அவரும் அவருடைய மனைவி அநுரதி அவர்களும் வவுனியா,பெரியபுளியங்குளத்தில் மேற்கண்ட பாழியை சந்நியாசிகளுக்கு தானம் அளித்தமை ஒப்புநோக்கும் போது இந்த அரச தம்பதிகள் இவ்விடத்திற்கு அண்மையாக உள்ள அவர்களது அரண்மனையிலேயே வசித்திருக்ககூடும் ஆகையால் அது பாண்டியர்களுடைய ரிதிக்கல என்ற அரச மாளிகையாகவே இருந்திருக்க வேண்டும்,ஏனெனில் அநுராதபுரத்தில் ,மிகுந்தலையில் அவ்வாறான மாளிகைகளை காண்பது அரிதாக உள்ளது,அவ்விடங்கள் அநேகமாக அக்காலத்தில் சமண பாழிகளையே கொண்டு விளங்கியதை ஊகிக்க முடிகிறது, இந்த ரிதிக்கல என்ற இடத்திற்கு அடுத்து இராசக்கல் என்ற இடமே அரச மாளிகைகளை கொண்டு விளங்கினாலும் அது மிகுந்த தூரத்தில் உள்ளது(அம்பாறை).

ஆகவே இந்த தெவநபிய மஹரஜ கமணி என்ற பேரரசராக இருந்த உதி இந்த ரிதிக்கல அரண்மனையிலேயே வசித்திருக்கக்கூடும் அவர் மகன் மஜிமஹ என்ற அபய என்பவரும் அங்குதான் தனது சிறுபராயம் முதலாக வசித்திருக்ககூடும்,அந்த மஜிமஹ என்ற என்ற பெயரில் உள்ள நாணயத்தில் காணப்படுகின்ற களிறு (ஆனை)அவர்களுடைய சமணத்தை(ஆசீவகத்தை)பிரதிபலிக்கும் பாகத சமண பெயராக விளங்கும் சமகாலத்தில் ஈழத்தில் கந்தரோடை ,தமிழக திருநெல்வேலி போன்ற இடங்களில் கிடைத்த பெருவழுதி என்ற சுத்தமான தமிழி பெயரோடு அதுவும் தமிழின் சிறப்பெழுத்தாகிய “ழ” என்ற சிறப்பெழுத்தைக் கொண்டு விளங்குவதும் ,அந்த வழுதியே இந்த ரிதிக்கல கல்வெட்டுக்கூறும் கடலன்,மஹசமுத்த,மற்றும் மாங்குளம் கல்வெட்டு உரைக்கும் வழுதிகடலன்,என்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பாண்டிய பேரரசன் என்பதை இனம்காண முடிகிறது,இவன்தான் கணி நந்தாஸிரிய என்ற இயக்கனுக்கு மாங்குளத்தில் பாழி சமைத்துக் கொடுத்தவன்,இவனே ஈழத்துக் கல்வெட்டுக்கள் கூறும் தெவநபிய மஹரஜ கமணி அபய,மஜிமஹ மற்றும் மஹசமுத ,கடலன்,பணவன்,வழுதி என்ற பாண்டியன் நெடுஞ்செழியனுமாகும்.

 

guest
0 Comments