
மூத்த தளபதியும், வான்புலிகளின் சிறப்புத்தளபதியுமாகிய கேணல் சங்கர்
மூத்த தளபதியும், வான்புலிகளின் சிறப்புத்தளபதியுமாகிய கேணல் சங்கர் / முகிலன் அவர்களின் குடும்ப உறவுகள் (சகோதரர்கள்)
கேணல் சங்கர் அவர்களுடன் கூடப்பிறந்தவர்களில்….
– ஜீவானந்தம் ஐயா; (சங்கர் அப்பாவின் தமையன்). இவர் ஹாட்லிக் கல்லூரியின் சிறந்த மாணவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். மருத்துவப் படிப்பிற்காக பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். MBBS பட்டம் பெற்றார். இவர் திருமணம் முடித்து உயர்கல்விக்காக இலண்டன் பயணித்து அங்கே வைத்திய நிபுணத்துவ ஆலோசகராக பணியாற்றினார் என்று 2003ம் ஆண்டில் அறிந்தோம். (இப்போதைய தரவு தெரியவில்லை)
– கேணல் சங்கர் (முகிலன்) போராளிகளினான் ‘சங்கர் அப்பா’ என்று அன்புடன் அழைக்கப்படுவர். 2001ம் ஆண்டு ஈகைச்சுடர் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் நினைவுநாள் கற்சிலைமடுவிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும்போது ஒட்டுசுட்டான் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்.
– கப்டன் கரன் (சங்கர் அப்பாவின் இரண்டாவது தம்பி).
‘கடற்புறா’வின் பொறுப்பாளர், தமிழீழக் கடற்பரப்பில் வைத்து 03.10.1987 அன்று கைதுசெய்யப்பட்டு யாழ். மாவட்டம் பலாலி படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க “சயனைட்” உட்கொண்டு 05.10.1987 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘திருமலை மாவட்டத் தளபதி’ லெப். கேணல் புலேந்திரன், ‘யாழ். மாவட்டத் தளபதி’ லெப். கேணல் குமரப்பா உட்பட 12 வேங்கைகளில் கப்டன் கரனும் ஒருவர்.
(கரன் அண்ணாவின் இரண்டு பிள்ளைகள் அவர்களை இறுதிவரை தன் சொந்தப்பிள்ளைகள் போல் வளர்த்துவந்தார் சங்கர் அப்பா. பிள்ளைகள் புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்றார்கள்)
– லெப்டினன்ட் சித்தாத்தன் (சங்கர் அப்பாவின் மூன்றாவது தம்பி).
14.02.1987 அன்று யாழ். மாவட்டம் கைதடிப் பகுதியில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடி விபத்தின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய குழு உறுப்பினரும், மூத்த தளபதியுமாகிய லெப். கேணல் பொன்னமான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ் உட்பட 10 மாவீரர்களில் லெப்டினன்ட் சித்தாத்தனும் ஒருவர்.
– சிறீதரன் அவர்கள். (சங்கர் அப்பாவின் முதலாவது தம்பி).
இவர் பிறந்ததிலிருந்து மூளை வளர்ச்சி குன்றியவராக இருந்தார். கைதடி மனவளர்ச்சி குன்றியோர் பாடசாலையில் சேர்க்கப்பட்டு அங்கே பராமரிக்கப்பட்டு வந்தார்.
ஒயாத அலைகள் மூன்றின் மூலம் யாழ்மாவடடத்தின் சிலப்பகுதி போராளிகளினான் மீட்க்கப்பட்டிருந்தது. அதில் கைத்தடி பிரதேசமும் விடிவிக்கப்பட்டிருந்தது. அப்போது கைதடி முதியோர் இல்லம், மனவளர்ச்சி குன்றியோர் பாடசாலை மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை தாக்குதல்களினால் அங்கிருந்தவர்கள் உடலங்கள் சிதைந்து சின்னாபின்னமாகின. சிறிதரன் அண்ணாவும் அதில் ஒருவராக சாவைத் தழுவிக்கொண்டார். உடல் எடுத்துவர முடியாததால் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
(அப்போது சங்கர் அப்பா ஓயாத அலைகள் மூன்றின் களமுனை வேலைகளில் மறுமுனையில் ஈடுபட்டிருந்தார்)
– உதயகுமார் அவர்கள். (சங்கர் அப்பாவின் நான்காவது தம்பி).
உதயகுமார் அண்ணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து ‘சுதன்’ என்ற இயக்கப் பெயரில் போராளியாக செயற்பட்டார்.
சிலகாலத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக உரிய அனுமதியுடன் அமைப்பிலிருந்து விலகி சிகிச்சை நிமிர்த்தம் கொழும்பு சென்றிருந்தார். அங்கே தேசவிரோதிகளால் ‘சங்கர் அப்பா’வின் சகோதரன் என அடையாளம் காணப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
– சங்கர் அப்பாவின் மனைவி குகா அன்ரியும் இறுதிப்போரின்போது…..