
பரந்தாமன்.. இது ஒன்றும் ஒரு வெறும் படகின் பெயரல்ல..
தமிழீழக்கடல் தமிழர்கள் வசம் இருந்த காலத்தின் கதை இது.
கடல் எல்லைகளை விரிவாக்கி கடாரம் கொண்ட சோழர்களின் கதை நாம் அறிந்ததுதான்.
ஆனாலும் கரிகாலன் படைகளின் சிந்தனை வேறுமாதிரியானது.
எங்கள் கடல் எங்களுடையது.
இன்னொரு கடல் எல்லையினை ஆக்கிரமிக்கும் சிந்தனை துளியளவும் இருந்ததில்லை.
தமிழீழக்கடலில் தமிழர்கள் எழுதிய வீரக்கதைகள் எண்ணற்றவை.
தம்மிடமுள்ள குறைந்த வளங்களை கொண்டு கடற்கலங்களை கட்டியமைத்து கடலை ஆண்ட கதை என்பது எந்த கற்பனைக்கதைகளில் கூட சாத்தியமற்றது.
இரவு பகலாக, ஓய்வற்று , விழ விழ எழுந்து கடலை ஆண்ட கதை ஒன்றும் கற்பனை அல்ல.
கண்முன்னே நிகழ்ந்த வரலாறு.
வரலாற்றை எவரால் மாற்றமுடியும்.
பரந்தாமன்.
இன்றொரு கடற்புறா..