×

300 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய போர்க்கருவிகள் – ஒரு வாழும் வரலாறு

300 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய போர்க்கருவிகள் – ஒரு வாழும் வரலாறு

16-ஆம் நூற்றாண்டு விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்காலத்தில், நமது ஆறகழூரை உள்ளடக்கிய மகதை மண்டலம் பாளையக்காரர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இதன் ஒரு பகுதியான ஆறகழூர் அருகே உள்ள ராயப்பனூர் என்ற ஊரில், காங்கேயமுடையார் என்ற பாளையக்காரர்களின் ஆட்சி நடைபெற்று வந்துள்ளது.

இதற்கு ஆதாரமாக ஒரு கல்வெட்டை 8 ஆண்டுகளுக்கு முன் நான் கண்டறிந்தேன். (படம் 2). அந்த கல்வெட்டு ராயப்பனூர் பாளையத்தின் வரலாற்றை உறுதிப்படுத்துகிறது.

அந்தப் புகழ்பெற்ற பாளையக்கார காங்கேயமுடையார் குடும்பத்தின் வழித்தோன்றல்கள் இன்று மிக எளிய மக்களாக ராயப்பனூரிலேயே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்களிடம் இன்னும் ஒரு பொக்கிஷம் பாதுகாப்பாக இருக்கிறது.

ஆம், தன் முன்னோர்கள் 300 ஆண்டுகளுக்கு முன் போரில் பயன்படுத்திய ஈட்டி, வாள், பீரங்கி ஈட்டி, கட்டாரி, சூரிகை, கோடாரி போன்ற போர்க்கருவிகளை இன்றும் தங்கள் தெய்வமாகக் கருதி, தங்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்து பராமரித்து வருகின்றனர். (படம் 1, 3, 4).

ஒரு காலத்தில் மகதை மண்டலத்தையே கட்டி ஆண்ட ஒரு பரம்பரை, இன்று எளிமையாக வாழ்ந்தாலும், தங்கள் வீர வரலாற்றை மறக்காமல், அந்த ஆயுதங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்தி வருவது நெகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது.

இது வெறும் இரும்பு ஆயுதங்கள் அல்ல. இது நம் ஆறகழூர் மண்ணின் வீரத்தின் சாட்சி. இந்த அரிய பொக்கிஷங்களை அரசு முறையாக ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.

வரலாற்றை மீட்டெடுப்போம்

 

guest
0 Comments