
பூரணம் என்பதற்கே முழுமை அடைந்தது என்பதுதான் பொருள்.
அதனை”வாலறிவன்” என்கிறார் வள்ளுவர் அப்படிப்பட்ட நிலை எய்திய ஆதி பகவனை அவ்வாறு குறிக்கிறார், அவர். தமிழ் பெளத்த காப்பியமான (மகாயானம்) மணிமேகலையிலேயே 27/112 ல் ஆசீவகர் ” வரம்பிலறிவனிறை நூற் பொருள்” எனும் தொடரில் “வரம்பில்லாத அறிவு உடையவன் எமது தலைவன்” என்று . கூறப்படுகிறது. .. இது மற்கலியைத்தான் குறிக்கிறது என்பது பின்னர் 27/ 165ல் ” மற்கலி நூலின் வகையிது வென்ன ” என்ற தொடர் மூலம் பெறப்படும்.
இதனால் பூரணரும் மற்கலியும் ஒருவரே என்று கருத வைத்திருக்கும். அவ்வாறு கருதுவதற்கு ஈழத்து பண்டைய கல்வெட்டு ஆதாரங்களும் வலுச்சேர்ப்பதாக அமைகிறது, அது பகவத மொகலி கோதம சமண புத்த என மற்கலியையே குறிப்பதை காணலாம்.மேலும் ஈழத்து கல்வெட்டுக்கள் இந்த பூரணருடைய பாதாரவிந்தத்திற்கு சுமந கூடம் எனும் சிவனொளிபாதமலை உச்சியில் வழிபாட்டு தலத்தை ஆரம்பித்து வைத்ததாக கூறப்படுகின்ற சுமந சமண் என்ற தெய்வம் ஈழத்து பாண்டிய அரசகுல வழிவந்த அபய என்ற அரசனின் பத்து புதல்வர்களுள் மூத்தவராக இருந்த தம ரஜ என்ற அரசர் என்பது தெரியவந்துள்ளமை ஊடாக இந்த பூரணர் என்பவர் மற்கலியாகவே இருக்கக்கூடிய வாய்ப்புக்களே பெரும்பாலும் காணப்படுகின்றது,இந்த மற்கலி பற்றிய ஆய்வு ஈழத்து கல்வெட்டுக்கள் ஊடாக ஈழத்து பாண்டியகுல வேந்தனாகிய கமணி உதி என்பவரையே குறிப்பதும்,இவரே ஈழத்துக் கல்வெட்டுக்களில் முதன்முதலாக தெவநபிய கமணி உதி என அழைக்கப்பட்டு உள்ளமையும் ஆனால் இத்தகைய கமணி உதிக்கு ஈழத்தில் எங்கும் ஆலயம் எதுவும் அடையாளம் காணப்படாமல் இந்த பூரணர் என்பவரது ஆலயம் மாத்திரமே முதன்மை படுத்தப்பட்டு உள்ளமை இந்த மற்கலிதான் பூரணர் என்பதை வெளிப்படுத்துகின்றது.இந்த மற்கலி என்பவர் துறவு பூணுவதற்கு முன்பாக பாண்டியகுல வேந்தராக இருந்த தருவாயில் அவருக்கு அபி அநுரதி என்ற பட்டத்திற்குரிய இளவரசியும் மற்றும் சுமந தெவி என்ற பெண்ணும் மனைவியராக இருந்தனர் என கல்வெட்டுக்கள் கூறுவதால் இந்த இருவருமே பூரணை பொற்கலை என வழங்கப்படுவதாக கருதலாம்.
அவ்வாறான பூரணரது பல் பேழை ஈழத்தில் மிகவும் புனிதம் நிறைந்ததாக பண்டைய காலத்தில் அநுராதபுரத்தில் இருந்த வழிபாட்டுத் தலமாக திகழ்ந்து இன்று கண்ட தலதா மாளிகையில் வைத்து வணங்கப்படுவதை காணலாம்,இத்தகைய பூரணர் பிறந்தது ஈழத்தில்த்தான் அதனால் சிங்கள மக்களும் புத்தர் இலங்கையில்த்தான் பிறந்தார் என்ற கருதுகோளை காவித்திரிவதை இன்று காணமுடிகின்றது,அந்த புத்தர் பூரணர் என்ற மற்கலி என்பவரே அவர் ஆசீவகம் எனும் பழந்தமிழகத்தில் தோன்றிய அகிரியாவாத தத்துவ அறிஞர் என்பதைத்தான் அவர்களுடைய அறிவுக்கு எட்டுவதற்கு தடையான புராண இதிகாச கதைகள் எனும் பலமான சுவற்றை எழுப்பி வைத்துள்ளார்கள்.அவரே தாம் வழிபடும் ஜயநாயக்க என்ற ஐயனார் என்பதை அவர்களால் அறியமுடியாதுள்ளது,இந்த பூரணரையே தமிழ் பெளத்த காப்பியமான மகாயான பெளத்த மணிமேகலை பிறவிப்பிணி மருத்துவன் என்பதோடு அவரே இந்த ஈழத்து பாண்டிய அரசகுலமாக விளங்கிய வழுதி பரம்பரையினருக்கும் மாறன் பரம்பரையினருக்கும் இடையே தோன்றிய மணியாசனம் தொடர்பான போரைத் தவிர்ப்பதற்காக எழுந்தருளியவர் என கூறுகிறது,இதன் மூலமாக பழந்தமிழகத்தில் கிமு 6 தொடக்கம் மிகமிக ஆழமாக வேரூன்றியிருந்த ஆசீவக வழிபாட்டு ஐயனார்களை மகாயான பெளத்தம் தமது பெளத்த மதத்திற்குள் ஏற்றுக்கொண்டு தமது வழிபாட்டுக்குரியவர்கள் ஆக்கிக்கொள்வதையும் அதன் பின்பாக அந்தந்த வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மகாசேனன் காலத்தில் முழுமையாக மகாயானத் தலங்கள் என்ற நிலையை அடைந்து ஈழத்தின் வடகிழக்கு மாத்திரமல்ல,ஈழம் முழுமையாக அந்த மகாயான பெளத்தம் கடைப்பிடிக்கப்பட்டதையும் காணமுடிகின்றது,அந்த தமிழ் பெளத்த அடையாளங்களே இன்றைய வல்லிபுர பொற்சாசனமாகினும் புத்தர் சிலைகளுமாக தென்படுகின்றவை.
ஆனால் இந்த மகாயான பெளத்திற்கு முன்பாக இருந்த பாதாரவிந்த பாதபீடிகைகளாயினும் பண்டைய கல்வெட்டுக்கள் நாணயங்கள் சுவர் ஓவியங்கள் அனைத்தும் ஆசீவகம் சார்ந்தவையே,இவற்றை மகாவம்சம் பெளத்த சின்னங்களாக உரைப்பதற்குரிய நூல் கிபி 6 இல் எழுதப்பட்டது,அதுவும் மணிமேகலை போன்று ஆசீவகத்தை தன்னுள் உள்வாங்கிக் தமது தொன்மையை அக்காலத் தேரவாதமாக மாற்றுவதை காணமுடிகின்றது,மேலும்
பூர்ண கஸ்யபாவின் கருத்துக்கள் ஒரு சில அயல் மத நூல்களில் மட்டுமே கிடைக்கும் . அவை அணுக்கொள்கைகளுக்கு இணக்கமானவை. ஆனால் அவை புரிந்து கொள்ளப்படாமல் கிண்டல் செய்யப்பட்டன. ( இப்பவும் எதிர் மதத்தை அப்படித்தான் மதவாதிகள் செய்வர்
பூரணர் தன்னை அனைத்தும் அறிந்தவர் என்று அறிவிப்பதாக புத்த நூல்களில் வழக்கம்போல கிண்டல் உண்டு. அத்தகைய கிண்டல் தமிழ் புத்த காப்பியமான மணிமேகலையிலேயே உள்ளது . மணிமேகலை மெய்யியல் கருத்துக்களை ஆசீவக வாதியான ஒரு முதியவரிடம் ( புராணர் ) கேட்கிறார்.( புராணர்- என்ற சொல்லுக்கு உரைகளில் முதியவர் எனப்பொருள் தரப்படுகிறது. இதுவே ஓலைச் சுவடியில் பூரணர் என்றும் முன்பு இருந்திருக்கலாம்)
மணிமேகலை தான் சந்தித்த முதியவரிடம் (?) மற்கலி நூலில் உள்ள ஆசீவகக் கருத்துக்களை எல்லாம் கேட்டு முடித்தவுடன் அவரிடம் ” சொற்றடுமாற்றத் தொடர்ச்சி ‘ இருந்ததாகக் கூறி விட்டு அடுத்ததாக நிகண்ட வாதி நோக்கிச் செல்கிறார்.. முதியவர் என்பதால் அவர் தடுமாறி தடுமாறி சொன்னது மணிமேகலைக்குப் புரியவில்லையா?
( சொற்றடுமாற்றத் தொடர்ச்சி என்றது பூர்வோத்திர விரோதமுள்ள ஆசீவக மதத்தோன் கூற்றை – என்று உ வே சா அவர்களே குறிப்புரை எழுதி மணிமேகலையின் நிராகரிப்புக்கு காரணத்தைக் கூறுகிறார்)
பூரணர் , ஒருவரின் நற்செயல்கள் மற்றும் தீய செயல்கள் ஒரு விளைவையும் (அணுத்திரளாகவும் வெறும் பொருளாகவும் மட்டுமே கருதப்படும் உடல்- உயிர் இணைந்த மனிதரிடம்) சேர்ப்பதில்லை எனக் கருதினார். அதனால் கொலை செய்தாலும் அதன் தீமை அல்லது விளைவு ஒருவரை அடைவதில்லை என்று அவர் கூறிவிட்டதாக அவருக்கு மறுப்புரைக்கும் அவரைப் புரிந்துகொள்ளாத புத்த மத நூல்களில் குறிப்புகள் உள்ளன
நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உருவாக்கும் என்ற புத்த மதத்துக்கும் நற்குணங்கள் நற்செயல்கள்தாம் ஒருவரின் வீடுபேற்றுக்கு வழி என்னும் சமண சமயத்துக்கும் நல்லதால் புண்ணியம் உண்டாகும் கெட்டதால் பாவம் உண்டாகும் என்ற பிற்கால வேத பிராமணீய மதத்துக்கும் பூரணரின் கருத்து பொருந்தவே இல்லை அல்லது அதனை அம்மதத்தார் புரிந்து கொள்ளவும் இல்லை ஏனெனில் அவை அணுக் கொள்கைகளில் கவனமின்றி மனித வாழ்வியல் வழிபடல் நோக்கில் சென்று விட்டன.
அப்படியானால் அவர் சொன்னதை எப்படி புரிந்து கொள்ளலாம்? அல்லது கொல்லலாம் ? என்று கேட்டால் ஒரு பதில் ஏற்கனவே குறிப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஒரு கொலை செய்தால் அது அவரின் உடலில் உள்ள எந்த அணுவையும் பாதிக்காது. ஏனென்றால் அது வெறும் பொருள்தான். தற்கால அறிவியல்படி ஒருவரின் உடலில் உள்ள அணுக்களில் சுற்றும் எலெக்ட்ரானிடம் ஒருவர் செய்யும் கொலை எந்த நிறை மாற்றத்தையும், மின்னூட்டத்தில் மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
மேலும் மணிமேகலையில் 27/ 165ல் ” மற்கலி நூலின் வகையிது வென்ன ” என்று வரி உள்ளது..27/112 ல் ” வரம்பிலறிவனிறை நூற் பொருள்” என்றும் உள்ளது ஆனால் நூலின் பெயர் என்ன என்று அவ்வரிகளில் இல்லை..அதை நவகதிர் என்ற பெயரால் உ வே சா தான் அழைக்கிறார்..
இது போன்றே ஒரு சூழலில் நீலகேசியில் “என்றலு மற்கலிதானே இறையினி , ஒன்பதுவாங்கதிர் யாமுடையன ” என்ற வரிகளில் நூலின் பெயரில் “ஒன்பது’ என்ற சொல் இருக்க அதை தமிழ்த் தாத்தா “நவ” என்று மாற்றினாரா? இல்லை, இப்போது இல்லாத அந்த அழிக்கப்பட்ட அறிவியல் நூலின் உண்மைப் பெயர் என்ன?
2.வீடுபேறு அடைதல், வினை தீர்த்தல் , எழுநிலை தாண்டிய உயர் யோக நிலை அடைதல் , மோக்ஷம், வைகுந்தம் போதல் இவற்றோடு இப்போது கைலாஸாவும் போகலாம்.இதெல்லாம் அணுகொள்கையை மக்கள் மறந்தபின் ஏற்பட்டவை.
3. பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் இந்த அணுக்கொள்கை அடிப்படையில் தான் ஒரு கொலை உடலைத்தான் கொல்கிறது ஆன்மாவை அல்ல என்று சொல்வதாகக் கருதலாம்..வைணவம் மற்றும் வேதாந்தத்தின் பூரணர் பகவான் கிருஷ்ணர்தான் என்றும் அறியலாம்.
4. திருவிளையாடல் படத்தில் “புரிந்தது புரியாததுதெரிந்தது தெரியாதது, பிறந்தது பிறவாதது அனைத்தும் அறிவோம்” என்று சிவ பெருமான் கூறுவதால் சைவ சமயத்தின் பூரணர் சிவபெருமானேதான்

ஆசீவகத்தின் கோட்பாடுகள் என்று நீலகேசியில் முன்வைக்கப்படும் தத்துவங்களை நாம் முதலில் பார்ப்போம்:-
ஃ, ஆசீவகத்தின் தலைவர் நிறைவான அறிவுடையவர். ஆகவே அவரைப் பூரணர் என்று அழைக்கிறோம். அவர் பேச்சும் செயலும் அற்றவர்.
ஃ, அவர் மூப்பும், இறப்பும் அற்றவர். அவரது தோற்றமும் மறைவும் வானவில்லின் தோற்றம் மறைவுப் போன்று, அவை அறியவும் விளக்கவும் முடியாதவை.
ஃ, அவர் வெளிப்படுத்தியதே, ‘ஒன்பது ஒளிக்கதிர்கள்’ என்ற ஆசீவகத்தின் மறை நூல். அவை ஒக்கலி, ஓகாலி என்ற இரு தேவர்களால் அருளிச் செய்யப்பட்டவை.
ஃ, உலகின் அடிப்படை மூலப் பொருள்கள் ஐந்து. அவை மண், புனல், அனல், காற்று, உயிர் ஆகியவை. அந்த ஐந்தும் வேறு வேறு அணுக்களால் ஆனவை.
ஃ, இந்த ஐந்து உருப்படிகளும் வேறு வேறு இயல்புடையவை. ஆயினும், பண்பற்றவை.
ஃ, மண்ணுக்கு தொடுவுணர்வு, சுவை, நிறம், மணம் ஆகியவை மட்டுமே உண்டு. ஓசை என்பது கிடையாது. ஆனால், நீருக்கு குளிச்சியும், தீக்கு வெப்பமும், காற்றுக்கு ஓசையும், உயிருக்கு உணர்வும் உண்டு. இவையும் மூலப்பொருட்களின் அணுக்களுடைய குணங்களே அன்றி, அவற்றின் சேர்க்கையாலான பொருள்களின் பண்புகள் அல்ல.
ஃ, உலகில் இருப்பது எதுவும் அழியாது. இல்லாதது எதுவும் புதிதாக பிறக்காது. ஆயினும், அவை நீரின் மேல் பதப்பது போல மேற்பட வெளியிலும் தெரியும்; நீரில் அமிழ்ந்துக் கிடப்பவை போல மறைந்தும் இருக்கும்.
ஃ, கணங்கள் உண்டு எனினும், தொடர்ச்சியான காலம் என்ற ஒன்றை ஆசீவகர்கள் ஏற்பதில்லை.
ஃ, ஆசீவகர்களின் ஒழுக்கமுறை, இன்பத்தையே நோக்கமாகக் கொண்ட உலகியல் ஒழுக்கமுறையே. இதுவே பகுத்தறிவுக்கு ஏற்ற ஒழுக்கம்.
இந்த கோட்பாடுகளின் மீது நீலகேசி முன்வைக்கும் எதிர்வாதங்களைப் பார்ப்போம்:-
ஃ, தலைவர் வாய் திறவாத போது, உங்கள் ஒன்பது ஒளிக்கதிர்கள் என்ற மறைநூல் தோன்றிய வகை எது? மற்ற இரு தேவர்கள் அருளியது எனில், அவர்கள் நிறையறிவு பெற்றவர்களா? பெற்றவர்கள் எனில், அவர்கள் எப்படி வாய் திறந்துப் பேசினார்கள்? பெறாதவர்கள் எனில், மறைமொழியின் வாய்மை குறைப்படாதா ?
ஃ,நம் போன்றவர்களே அன்பின் காரணமாக மற்றவர்களுக்கு உதவ முன்வரும் போது, நிறை அறிவுடைய தலைவர் மற்கலி செயலற்று இருந்தது ஏன்?
ஃ,செயலற்று இருந்தல் நிறை அறிவுக்கு அறிகுறி ஆகுமெனில், பேசத் தெரியாதக் குழந்தைகள், செவிட்டூமைகள், மரங்கள், குன்றுகள், நிறை அறிவு உடையவையா?
ஃ,அவர் உறுப்பசைவு கூட இல்லாதவர் எனில், அவர் உயிரற்றவரா? அல்லது பாசாங்குக்காரரா?
ஃ, பேசாத அவர், ஐந்து மெய்ப்பொருள்களின் இயல்பு, இருவினை இயல்பு ஆகியவற்றுக்கு விளக்கம் அளிப்பாரா ?
ஃ, செயலற்ற அவர் வாழ்வில் சிற்றின்ப வேட்கை புகுந்தது எவ்வாறு?
ஃ, மூலப் பொருள்களில் மண்ணுக்கு மட்டுமே நிறம், சுவை, மணம், தொடுவுணர்வு உண்டென்கிறீர்கள், அடுத்த மூன்றுக்கும் அவை இருப்பதால், அவையும் மண்ணாக கருதப்படுமா ? அப்படியாயின், மூலப் பொருள்கள் இரண்டாக அல்லவா இருக்க வேண்டும்? மேலும், இவ்வுணர்ச்சிகளை உணரும் பொறிகளும் மண்தானா?
ஃ, புலன் அறிவுக்கு உட்பட்டவற்றில் இருளும் ஒன்றாக இருக்கையில், அதை ஏன் பொருளாக சேர்க்கவில்லை.
ஃ, மூலப் பொருள்களுக்கு இயல்பு உண்டு என்று கூறியபின், பொருள்களுக்கு பண்பு இல்லை என்று கூறுவது எவ்வாறு ?
ஃ, மெய்ம்மையின் மாறாத்தன்மை பற்றிக் கூறுகிறீர்கள், பொன் அணிகலன் ஆவதும், வெண்கலம் கிண்ணம் ஆவதும் மாறுதல் இல்லையா? இலக்கணத்தில் சொற்கள் கூட வேற்றுமையிலும், தொகையிலும் மாறுகின்றன.
ஃ, வளர்ச்சிமுறை வகையில் நீங்கள் நான்கு கூறுகளை ஒப்புக் கொள்கிறீர்கள். அவை வளர்ச்சியின் கட்டாயத் தன்மை, வளர்ச்சியின் படிமுறை, வளர்ச்சியின் உச்ச எல்லை நிலை, வளர்ச்சியின் கால அளவு ஆகியவை. மாற்றம் இல்லை என்று கூறும் நீங்கள், மேற்கூறிய இவ்வளவு மாற்றங்களையும் வகைப்படுத்திக் கூறுவது எவ்வாறு பொருந்தும் ?
ஃ, உயிர்கள் நானூறு யோசனை உயரம் என்றும், அதற்கு ஏற்ற நீள அகலம் உடையது என்றும் கூறுகிறீர்கள். இவ்வளவு பெரிய உயிர்கள் சிறிய அளவுள்ள உடலில் அமைந்திருப்பது எவ்வாறு ?
ஃ, எல்லா உயிர்களும் வீடு பேறு அடைந்து விட்டால் உலகியல் வாழ்வு தொடராதே என்ற கேள்விக்கு பதிலாக, வீடு பேறுக்குப் பின்னும் உயிர்கள் மீண்டும் உலகியல் தொடக்க நிலை எய்தும் என்ற ‘மண்டல வீடு பேறு’ கொள்கையை மேற்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், இது உயிர்கள் எண்ணற்றவை என்பதன் முழு இயல்பை அறியாமல் நீங்கள் தரும் விடையாகும்.
ஃ, மண்ணும் நீரும் கீழ் நோக்கிச் செல்பவை என்றும், தீயும் உயிரும் மேல் நோக்கிச் செல்பவை என்றும் கூறுகிறீர்கள். தீ எரிநிலையில் கிழ் நோக்கியும் செல்லக்கூடியது என்பதை நீங்கள் கவனிக்க வில்லை. உயிர்கள் தொடர்ந்து மேல் நோக்கிச் செல்பவையானால், அவை சந்திர மண்டலத்தையும், விண்மீன் மண்டலத்தையும் அடைய வேண்டும் அல்லவா ? பக்கவாட்டில் செல்வதாக நீங்கள் கூறும் காற்று, உடலில் மேலும் கீழும் செல்வதை நீங்கள் கவனிக்கவில்லை.
¬ஃ, காலமில்லை என்று கூறும் நீங்கள், வளர்ச்சியின் கூறுகளுள் காலப்போக்கை ஒன்றாகக் கூறுகிறீர்கள்.
ஃ, காரண காரியத் தொடர்பை மறுக்கும் நீங்கள், நோன்பும் தவமும் செய்வது ஏன் ?
ஃ, தோற்றம் மறைவு ஆகியவை காரணமின்றி இயல்பாக நிகழ்பவை என்கிறீர்கள். அதற்காக தலைவரின் தேற்றமே காரணமற்ற ஒன்று என்று விளக்க முன்வருகிறீர்கள். அதற்கு நீங்கள் கூறும் உவமையாகிய வானவில் விளக்கமே, காரணகாரிய வகையில், உங்கள் அறியாமைக்குச் சான்றாகிறது. மேகங்களின் மீது சூரியனின் கதிர்கள் பட்டு, வானவில் தோன்றுகிறது என்பதை நீங்கள் அறியவில்லை.
ஃ, இப்படி தனது எதிர் வாதங்களால் வெற்றிக் கொண்ட நீலகேசி, பூரணரை சமணநெறி மூலம் தேற்றினாள் என்று முடிகிறது.