2001 ஆம் ஆண்டு முதல் ஐ.நா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள், தமிழ்த் தலைவர்கள், தமிழ் அமைப்புகள்/கூட்டமைப்புகள், மற்றும் உலகெங்கும் செயலாற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகள் ஆகியோர் தமிழின அழிப்பினை தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழின அழிப்பிற்கு எதிரான நீதிகோரல் மற்றும் தீர்வு தொடர்பாக வழங்கிய கோரிக்கைகள், கடிதங்கள், அறிக்கைகள், விருப்பமனு ஆகியவை இங்கே பட்டியலிடப்பட்டுள்ளுன.
ஐ.நா. மன்றத்தின் பொதுச்சபையில் “இனவழிப்புக் குற்றம்” என்று தலைப்பிட்ட தீர்மானம் 96 (டிசம்பர் 1946), “உலகின் ஏதோவொரு மூலையில் நடந்தேறும் இனவழிப்பு குற்றமானது சர்வதேச சட்டத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தியுள்ளது.
மேலும், 2005 ஆம் ஆண்டு, மனிதநேய அடிப்படையில், சர்வதேச அரசியல் ஒப்புமையின் பால், உலகில் நடந்தேறும் போர்க்குற்றங்கள், இனவழிப்பு, இனசுத்திகரிப்பு மற்றும் மாந்தநேயக் குற்றங்களின் பொழுது, ஐ.நா மற்றும் உறுப்பு நாடுகள் தலையிடுவதற்குரிய விதிமுறைகளை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
எமது அரசியல் சட்ட ரீதியிலான, ஜனநாயக முறையில், அமைதி வழியில் என்றுமே தொடர்ந்தும் பயனித்து வருகிறது. அதோடு, சர்வதேச அரசியல் கதவுகளையும் மனித உரிமை அமைப்புகளின் கதவுகளையும் தொடர்ந்தும் நாடி வந்துள்ளதையும் ஆவணப்படுத்தும் நோக்கிலேயே இங்கே ஐ.நா. மற்றும் அதன் துணை அமைப்புகளிடம் கையளித்த கோரிக்கைகளை வரிசைப்படுத்தியுள்ளோம்.
மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.
12 March 2001
13 February 2001 – Arabic13 February 2001 – Chinese
13 February 2001 – French13 February 2001 -Russian
13 February 2001 -Spanish
13 February 2001
17 August 2001
30 January 2001