×

ஈகைத்தாயின் விடுதலைப் பற்ருறுதி

ஈகைத்தாயின் விடுதலைப் பற்ருறுதி

12-2003: கிளிவெட்டி மேன்கமம் வெளி வயல் நிலங்களது வரட்சியைச் செழுமைப்படுத்தும் கங்கை. ஊர் மக்களது உடலுழைப்பில் நெற்கதிர்கள் அறுக்குவித்து இருக்கும் சூழல் விவாசாயப் பொருளாதார வாழ்பைப் புலப்படுத்தும் களனிகள். இச்சிற்றூர் மக்களது ஆலயம். இவைகள் அனைத்தும் இனிதான வாழ்க்கை வட்டத்தினுள் வாழும் மக்களாகவும். செல்வச் செழிப்புள்ள வளமான மக்களாகவும் வாழவைத்தன.

இம் மக்களது உரித்தான வாழ்க்கைக்குள் இராசமணி அம்மா தன் கணவர் அருளம்பலம், ஏழு  புத்திரர்கள், மூன்று புத்திரிகளுடன் இன்புற்று இனிது வாழ்ந்தார். சொந்த மண்ணில் சொந்த வீட்டில் தன் கணவனோடு உயிரொன்று வாழும் ஒவ்வொரு கணமும் அம்மாவின் நெஞ்சை நிறைத்தது. தன் கணவர் பிள்ளைகளோடு வாழும் வாழ்வைப்போல சிறப்பான வாழ்வு வேறில்லை என்பதே அம்மாவின் மனவுலகில் வேர்பதித்த எண்ணங்களாக இருந்தன. எப்போதும் குடும்பமாக இணைபிரியாத வாழ்வையே வாழ்ந்து வருவோம் என்கிற நம்பிக்கைகள் அம்மாவிடம் அப்போது  செறிந்தே கிடந்தன.

அம்மாவின் இனிய குணவியல்புகள் உறவினர் அயலவர் என அனைவரும் அம்மாவை விருப்ப பூர்வமாக அரவணைத்தார்கள். இவ்வற்புதமான மகிழ்வான சூழலில் தம் ஊர் பாராம்பரியத்துடன் வாழ்ந்து  வந்த அம்மாவும் அவ்வூர் மக்களும் நெருக்கடிகளைத் துன்பங்களைத் சுமந்த வண்ணம் ஆபத்துக்களையும் எதிர்கொள்ள ஆரம்பித்தார்கள்.. கபிலன் சிற்றூர் மக்களது தமிழ்தேசிய எழுச்சியின் மத்தியில் சிங்களப்பேரினவாதம் தலைதூக்கத் தொடங்கியது. எதையுமே போராடித்தான் தம்மை நிலைப்படுத்திக் கொண்டார்கள் இம் மக்கள். மிகப்பழமை வாய்ந்த கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலய வளவினுள் இயற்கையாகவே வளர்ந்து மிகப்பெரிய விருட்சமான ஆலமரத்தினை மையப்படுத்தி பௌத்த ஆலயமாக்குவதன் மூலம் தமது பௌத்த சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்பை மேற்கொள்ள 1978 இல் முனைந்தது சிங்கள இனவாதம்.

அதனை எதிர்த்துத் தமிழ்தேசிய உணர்வுமிக்க இளைஞர்களான கிருபராஜா குமாரதுரை  துரைநாயகம்  தங்கராசா இன்னும் இருவர் ஒன்றினைந்து ஜந்நூறு மக்களின் எழுச்சிமிகு ஒத்துழைப்புடன் இரவோடு இரவாக அவ் மரத்தினை இல்லாமல் செய்து அதில் தம் பராம்பரியமான பிள்ளையார் சிலையொன்றை நிலைநிறுத்தினார்கள். இன்னும் அப்பிள்ளையார் சிங்களமத ஆக்கிரமிப்பை எதிர்த்து நிமிர்வுடன் இருக்கும் குறியீடாகவேயுள்ளது.

இவ்வரலாற்று வியக்கதக்க புதுமையான நிகழ்வுக்குப்பின் தமிழரின் பூர்வீக பூமியான புலச்சேனையை தெகிவத்தை ஆக மாற்றிய சிங்களவர்கள் சிங்களப்படையின் துணையோடு சில சிற்றூர்களை எரித்து நாசம் செய்ததில் அம்மாவினது ஊரும் பாதிப்புக்குள்ளாகியது.  அம்மா தன் குடும்பத்தோடு அயல் கிராமமொன்றில் சில வாரங்கள் தம் பாதகாப்புக் கருதி வாழ்ந்த பின்னர் மீளவும் சொந்த வீட்டுக்கே சென்று வாழ்ந்த வரலானார்.  காலங்கள் ஓடின. தமிழ்தேசிய விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாகி தமிழரின் இராணுவப்பண்பை வெளிப்படுத்தும் சூழ்நிலை மூதூர்பகுதியில் 1985 இல் உருவாகியது.    இக்காலகட்டத்திற்தான் சிங்கள ஊர்காவற்படையினர் ஊருக்குள் நுழைந்து இளம் பெண்பிள்ளைகளைப் பிடித்துச்சென்றனர்.

இவ்வேளையில் தளபதி கணேசின் போராளிகளான குண்டுக்கணேஸ், விஜித், நந்தன் ஆகியோரினது விரைந்த துணிகரச் செயற்பாட்டால் மீட்டு எடுக்கப்பட்டனர். அதன்போது போராளிகளின் துப்பாக்கி ரவைகளில் இரு ஊர்காவற்படையினர் மாண்டு போனதுடன், ஒரு ஊர்காவற்படை உறுப்பினர் உயிருடன் பிடிக்கப்பட்டார். மணியன்னனின் மகன் ஊர்காவற்படையினரின் கத்திக்குத்துதலில் கொல்லப்பட்டுள்ளர்.

இவற்றுக்கு ஒரு தனி வரலாறு உண்டு. இவ்வரலாற்று நெருக்கடி மிகுந்த காலகட்டத்திற்தான் ஊர்மக்கள் இடம்பெயர்ந்தார்கள். இம் மக்களோடு அம்மா குடும்பத்தினரும் இடம்பெயர்ந்து சம்பூர்ப் பாடசாலை அகதிமுகாம் வாழ்வினுள் வாழத்தொடங்கினார்கள். அம்மா தன் குடும்பத்தினருடன் கிடுகு வேலிகளுக்குள்ளே இருந்து கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தவர்.

அவலங்களைத் தாங்கிய அகதிமுகாம் வாழ்வு அம்மாவிற்குப் புதியது.   அம்மாவின் கணவர் தம் சந்ததியினர் காலங்காலமாக ஓர் வருமானத்தைப் பெறவேண்டுமென்பதற்காக அணு அணுவாக அரும்பாடு பட்டுச்சேர்த்து உருவாக்கிய பட்டியை மகன் ஜெயக்குமாரின் உதவியுடன் சாவாறு பொன்னாங் கேணிப்பகுதியில் வைத்துப் பராமரித்து அங்கேயே நாட்களைக் கழித்து வந்தார். இது இப்படியிருக்க மேன்கமம் ஊருக்குள் தம் வீடுவளவுகளைப் பார்க்கச்சென்ற கனகசுந்தரம், கைலாயநாதன், பெரியதம்பி ஆகியோர் சிங்களப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட செய்தியால் அம்மாவுக்குத் தன் ஊர் செத்துப்போய்க் கிடந்த மாதிரி ஓர் உணர்வு ஏற்பட்டது.

தன் ஊர் சின்னாபின்னமாக்கப்பட்டு அழிந்து கிடக்கின்ற கவலையுடன் அம்மா ஏனைய பிள்ளைகளுடன் சம்பூரில் வாழ்ந்து வரும்போது மகன் கணேசராசா மூலம் விடுதலைப்புலிகள் உறவு ஏற்பட ஆரம்பித்தது. தாக்குதல் தளபதி கஜேந்திரன் முதன் முதலாக அம்மாவின் அரவணைப்பிற்குள் வந்த பின் மூதூர் அரசியல் பொறுப்பாளர் டொமினிக், அம்மாவிடம் வந்து செல்ல இயக்க உறவு மேம்படவே தொடங்கியது. அம்மாவின் மகன் கணேசராசா உள்ளுர்ப் பயிற்சியைப் பெற்று இயக்கப்பணிகளுக்குச் சென்றுவருப்மோதெல்லாம் அம்மாவினது ஒத்துழைப்பு இருக்கும். ஒர சில மாதங்களின் பின் முழுநேர உறுப்பினராகி யாழ்ப்பாணம் சென்று அடிப்படைப் பயிற்சியைப் பெற்று மீள ஊர்வந்து சேர்ந்தார்.

இவ்வேளையிற்தான் அம்மாவின் மகன் ஜெயக்குமார் பொன்னாங்கேணியில் சிங்களப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வால் அம்மா துயரத்தின் அழுத்தங்களிலிருந்து விடுபட்டு வரும் சில மாதங்களின் பின்னர் சிங்களப்படையினரின் கடற்கலங்களால் ஏவப்பட்ட செல் தாக்குதலால் கணவர் அருளம் பலம் இறால் குழிக்கங்கை மண்ணில் சாவு அடைந்தார். கணவரை இழந்த அம்மாவின் கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அம்மாவினது உறவினர்களும், உரித்தாரிகளும், ஊர்மக்களும் அழுது புலம்பும் மரணஓசை அவ்விடத்தில் கேட்டது. தன் கணவனது இறுதிச் சடங்கை இறால்குழி மண்ணில் செய்துவிட்ட சம்பூர் வந்து சேர்ந்தார் அம்மா. தமிழரின் நியாயமான அர்பணிப்பு நிறைந்த போராட்டத்தை முடக்கவும், தமது நலன்களுக்குச் சாதகமான ஓர் அரசியல் இராணுவ அடித்தளத்தை இடவும் இந்தியப்படை தமிழ்த்தேசத்தை ஆக்கிரமித்தது.

இக் காலப் பகுதியில் போராளிகளின் அரவணைப்பில் அம்மா தன் குடும்பத்தோடு, தன் ஊர் மக்களோடு சொந்த ஊருக்கு வந்து விதவை வாழ்வை வாழ ஆரம்பித்தார் அம்மாவின் மனதில் அன்றும் கூட கணவரது நினைவுகளும்,  மகனது இளமையான கட்டான தோற்றமும்தான் அரங்கேறியது. எவ்வளவோ அன்புறவுகள் சுற்றியிருந்தாலும் தன்னைச் சுற்றி வெநுமையுணர்வு வலையாக விரிவதை  உணர்ந்தார் அம்மா. மகன் கணேசராசாவின் வருகை அம்மாவின் அப்போதைய வெறுமைக்கு ஓரளவு அறுதலளித்தது. தமிழ்த்தேசியம் இந்தியப்பொறிக்குள் சிக்குண்டு போகாமல் பாதுககாக்க விடுதலைப் புலிகள் முனைந்த போது போர் மூண்டதனையடுத்து அம்மாவின் ஊருக்குள் இந்தியப்படையினரின் நடமாட்டங்கள் அதிகரிக்க போராளிகளின் நகர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன.

03ஆம் கொலனி முகாமில் இருந்த போராளிகளான பவான், றொபின், கோடீஸ், ரடேஸ்அம்மான், சுருளி, கெரில்லா, ரூபன், தவம், ராஜேஸ், சட்டா, வேலாயுதம், மீசைராசா, தவநேசன், சங்கிலி, புவிராஜ், மருமகன், அன்ரன் பேனாட், பட்டாவி, அகிலன், அண்ணா சிவனேசன், சுதாகர் ஆகிய போராளிகள் தாக்குதல், உணவுப்பொருட்கொள்வனவு, பிறதேவைகள் என ஊருக்குள் வந்து செல்லும் போது எல்லாம் அம்மாவினது வீடும், அம்மாவின் மகள் விஜயலட்சுமி, மகளது கணவர் சிவலையர் வீடும்தான் அனைத்து உதவிகளையும் செய்து வந்தது.

இவர்களுடன் கந்தசாமி, சித்திரவேல் ஆகியோரும் உதவினார்கள். மருமகன் சிவலையர் தன் வண்டியில் பொருட்கள் கொண்டுவந்து கொடுப்பார். சிவலையரின் மனைவி (அம்மாவின் மகள், வீட்டில் தங்கிச் செல்லும் போராளிகளுக்கான உணவு சமைத்துக்கொடுத்து அரவணைத்தார். மறுபுறம் அம்மாவும் உணவுப்பொருட்களைச் சிறிது சிறிதாகச் சேர்த்து சேமித்துத் தன் வீட்டில் வைத்துக்கொடுப்பதும், இரவில் வரும் போரளிகளுக்கு அயலவரான அபிராமியின் துணையாடு சமைத்துப் பசியைத் தீர்ப்பதும் வழமையாகியது. இந்தியப்படையினரின் இராணுவ அழுத்தங்கள் அம்மா குடும்பத்தாரை மிகப்பெரும் நெருக்கடிகளுக்குள்ளும் சிக்கலுக்குள்ளும் உள்ளானியது.

அம்மாவின் மருமகன் சிவலையர்   கைது செய்யப்பட்டு பத்து மாதங்கள் சிறையில்  இருந்த விடுதலையாகி பின் அவர், 03 ஆம் கொலனி முகாம் போராளிகளுடன் தன் நாட்களைக் கழித்தார். மகன் கணேசராசா விலகி வீட்டில் இருக்கும் காலத்தில் காய்ச்சல் வந்த மயக்க மடைந்த மூதூர் வைத்தியசாலையில்  சேலைன் ஏற்றிய நிலையில் இருக்கும்வேளை இந்தியப் படையால் கைதுசெய்யப்பட்டார்.

திருமலை மத்தியசிறைச்சாலையில் ஒன்பது மாதங்கள் தடுப்பில் இருந்;து விடுதலையானார். இந்தியப் படையின் கைக்கூலியான ரமணன் அணியினர் அபிராமி ஆலயத்தலைவருக்கு அடித்து முரண்பட்ட சம்பவத்தில் அம்மாவின் மகன் பேரின்பராசா ரமணன் அணியினருடன் கடுமையாக முரண்பட்டார். இச்சம்பவத்தைப் பயன்படுத்தி பேரின்பராசா ரமணானால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி வுNயு முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

ஒரு சில மாதங்களில் பின்னர் பேரினபராசா ஒரு யு.மு, ஒரு பிஸ்டல் ஆகிய ஆயுதங்களை களவாக எடுத்துக்கொண்டு இயக்கத்திடம் வந்து சேர்ந்தார். அவ்நாளில் இருந்து சத்தியன் என்கிற பெயருடன் பவான் தாக்குதல் அணியில் இணைந்த செயலாற்ற ஆரம்பித்தார். இரவில் ஊருக்குள் வரும் இந்தியப்படையினரின் அம்மாவின் வீட்டை மையப்படுத்தி பதுங்கியிருந்த நாட்கள் பல. அம்மாவை முகாமுக்கு அழைத்து விசாரணை செய்து அச்சுறுத்திய போதும் அம்மாவினது தளாராத மனவுறுதியையும் அதனால் வந்த துணிவும் அப்போது போராளிகளுக்கு பக்க துணையாக இருந்தது.போராளிகள் எந்த நேரமும் சன்றால் உடன் தேனீர் கொடுத்து விட்டு சமைக்க ஆரம்பித்து விடுவார்fs; அம்மா அயலவரான அபிராமியுடன் தன் கடைக்கட்டிகளான சூட்டி, சின்னச்சத்தியன் ஆகிய 5 வரையும் வெளிக்காவலுக்கு விட்டுவிடுவார். அம்மா காணும் போராளிகளிடம் தன் கையால் போராளிகளுது கன்னத்தில் வாஞ்சையோடு தடவியபடியே முதல் கேட்பது ‘சாப்பிட்டு விட்டிர்களா?’

இந்தியப்படையினரின் திடீர் திடீரென வரும் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தும் தாக்கதலைப் போராளிகளான பவான், நடேச அம்மான், பிரதீப், கெரில்லா, மருமகன், வேலாயுதம், அன்ரன், சிவனேசன், றொபின், சத்தியன் ஆகியோர் மேற்கொண்டார்கள். அதாவத 58 சந்தியில் பகல்வேளையில் உலாவந்த இந்தியப்படையினர் மீதும் மேன்கமம் கொலனிப் பாலத்திற்கு மிக அண்மைளிலிருந்த இந்தியப்படையினரைப் பின்வாங்கி ஓடச்செய்தார்கள். இதனால் பிரதான வீதிகளில் மட்டும் இந்தியப் படை உலாவரும் சூழலாக மாறியது. இக்காலத்தினுள் சுட்டார் வீரச்சாவு அடைந்தார்.

நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் பகல் அம்மாவிடம் போராளிகள் வந்தபோது அம்மா தன் கையால் பலாப்பழம் வெட்டி அதிலுள்ள சுளைகளை எடுத்துக்கொடுக்க போராளிகள் சுவைபடச் சாப்பிட்டுவிட்டுத் தாக்குதலுக்குச் சென்றார்க்ள. அப்போது எதிர்பாராத நிலையில் சண்டைக்களம் மாறியிருந்ததனால் சக்கர வெட்டையில் நடேஸ் அம்மானும், மீசைராசாவும் வீரச்சாவு அடைந்தார்கள். ஏனைய போரளிகள் ஒருவரையொருவர் தோளிலே தொட்டு வார்த்தைகளின்றி ஆறுதல்படுத்தினார்கள். அவர்களது கண்களில் தெரிந்தது சோகம். அச்சோகத்தினுள் அம்மாவின் மனமும் கலந்து இரந்ததனால் அம்மாவினால் மனம் வைத்துச் சாப்பிடக்கூடமுடியாமல் அன்று இருந்தது.இந்தியப்படை 32 மாதங்காளாகத் தமிழ் மக்களுக்கக் கொடுத்த பல துன்ப துயரச்சுமைகளிருந்து விடுபட்டு ஊர்மக்கள் அமைதியான, நிம்மதியான சூழலில் வாழ ஆரம்பித்தார்கள்.

தன்பிள்ளைகள், பேரப்பிள்ளைகளோடு வாழும் நிலைகண்டு அம்மாவினத முகம் பூரிப்பில்பூத்தது. இருப்பினும் அவரது முகத்தில் எல்லையற்ற சோகம் தெரியவந்தது. 90மத்தியபகுதியில் அமைதிச்சூழல் போர்க்களச் சூழலாக மாறியதும் மீளவும் ஊர்மக்களோடு அம்டாவும் இடம்பெயர்ந்து கங்கை மணலாறு ஊரில் சில நாட்கள் வாழ்ந்தபின் பச்சனூர் அகதிமுகாமிற்கு சென்று வாழ ஆரம்பித்தார்.

இவ் நெருக்கடியான காலப்பகுதியில் தாக்குதல் ஒன்றுக்கக வெடிமருந்து நிரப்பிய கேன்களை எடுத்துவரச்சென்றபோது 03ஆம்கொலணிப் பாதையில் சிங்களப்படையினர் பதுங்கித்தாக்குதல் மேற்கொண்ட சமயம் அம்மாவின் மகன் சத்தியன் வீரச்சாவு அடைந்தார். இத்தகவலைப் போராளி றொபின் அம்மாவிடம் சொன்னவேளை அம்மாவை அறியாமலே கண்களும், மனமும் கலங்கின.

ஆனாலும் ஏனைய போராளிகளைப் போல்தான் தன் பிள்ளையும் என்று சொல்லியபடி தன்னை அமைதிப்படுத்தினார். அம்மா. தமிழினம் வாழவேண்டும்> தமிழினத்தை வாழவைக்க வேண்டும். என்பதற்காகவே போராளிகள் தம்மை அர்பணித்து போராடுகின்றார்கள் என்கிற அரசியல் விளக்கங்களைப் பெற்றப் புரட்சிபரத் தமிழ்தேசிய அரசியலில் ஊறிநின்றார். அம்மா அவரடன் விடுதலைப்போர் தொடர்பாகத் தவறாகக் கதைத்தால் கடுமையான கண்டிப்பிற்குள்ளக வேண்டிய நிலையே அவர்களுக்கு நேரிடும்.

அம்மா இனி இழப்பதற்கு எதுவுமே இல்லை என்று அவரின் மனது மரத்துப்பபோய்விட்க்கூடிய இழப்புகளை அடுத்தடுத்த அம்மா சந்தித்தார்.அம்மாவின் இன்னொரு மகன் குமாராதுரை பாலு என்கிற பெயரில் ஆனையிறவு போர்களத்தில் 91 இல் வீரச்சாவு இத்தகவலை கட்டைப்பறிச்சானில் கடமையாற்றிய முன்னனிப் போராளி கண்ணதாசன் வாயால் பெற்றுக்கொண்ட அம்மா எல்லாப் பிள்ளைகளைப் போலதான் தன்ப்ளளையும் என வழமையான ஆற்றத்தக்க வார்த்தையைச சொன்னார்.கங்கவேலியில் திருமணம் செய்த மகன் யோகநாதன் 93 இல் விறகு எடுக்க வண்டியில் காட்டுக்கள் சென்ற போது அகத்தியதாவனம் பகுதியில் வைத்து சிங்களப்படையால் சுட்டுக்கொள்ளப்பட்டார். அம்மா தன் கணவனை இழந்த பின் உறவும்> நிழலும் ,ஆறுதலும் அப்போது பிள்ளைகள்தான் என எண்ணியிருந்த அம்மாவிற்க தொடரும் துயரம் கல்லையும் கரைத்திடச் செய்தது.

அம்மா தன்கடைசிப்பிள்ளைகளான மோகனச்சந்திரன், சூட்டி ஆகி இருவர்களையும் செல்லம் கொடுத்த தன் தாய்மையின்  உச்ச பாசவலைக்குள் அரவணைத்து 95 இல் தன் ஊரில் வாழ்ந்து வந்தார். விடுதபைப்போரரங்கு மிகப் பெரிய வரலாற்றச் சமர்களைச் சந்தித்து.அச்சமர்களில் வெற்றி பெற்று விடுதலைப்புலிகள் இராணுவ மேலாண்மைபலத்துடனும் மேலோங்கியிருந்தார்கள். அம்மாவின் கடைக்குட்டி மோகனச்சந்திரனும் விடுதலைப்புலியாக இணைந்த 98 இல் கடலில் வீரச்சாவு அடைந்தார். ஈழத்தமிழரின் விடுதலைக்கான வரலாற்றிலே தனக்கான தடத்தைப் பதித்தச்சென்றார்.

அவரது கடைசிச்செல்லப்பிள்ளை மேஜர் சின்னச்சத்தியன் இதனைக் கேள்விப்பட்ட அம்மாவுக்கு தலைதலையாக அடித்து அழவேண்டும் போல இருந்தது. அவரை அறியாமலே கண்ணீர் பெருகி வழிந்தது. அவரின் மனதினுள் கவலை வளர்ந்த ஆழமாகபரவிற்று.மகன் சத்தியனைக் காணச்சென்று வரம் சம்பூர்ப்பக்கம் செல்வதனை முற்றாகவே நிறுத்திக் காண்டார். கடலில் வீரச்சாவு அடைந்தனால் படகில் சென்ற வரம் கடற்பயணங்களை மேற்கொள்ளாது விட்டுவிட்டார்.கண் பார்வை குறைந்து, முகச்சுருக்ககளில் பெரும் வியர்வையடன், விழியோரம் வழியும் நீர் கலந்த 72 வயதான நிலையில் அம்மா தன் கடைசி மகள் சூட்டியுடன் ஊரில் வாழ்ந்து வருகிறார். அம்மாவிடம் இயல்பாகவே காணப்பட்டு வந்த நகைச்சவைச் சுபாவம் – வாழ்வின் துன்ப துயரங்களைச் சகித்தக் கொள்ளக்கூடியதாகவிருந்தது. மகள் விஜயலட்சுமியின் மகன் பாலா என்ற கடற்புலிகளால் செயலாற்றிவரம் தன் பேரணை அம்மா சந்தித்த சமயம் உன் மூன்று மாமாக்களும் கௌரவமாக இருந்து இறுதிவரை செயலடபடு எனச்சொல்லித் தன் விடுதலைக்கான பற்றுறுதியை வெளிப்படுத்தினார்.

விடுதலைப்போராட்டம் தமிழீழம் என்னும் கருத்துகளை விதையூன்றிய காலமிது என்பதால் அம்மாவினது மனவுலகம் பக்குவம் அடைந்த நிலையில் இருந்து போராளிகளை அணைத்துச்சென்ற, செல்கின்ற ஒரு தாயாக இருந்தது. அவர்களுடைய நியாயமான தொண்டுகளுக்கு உதவக்கூடியவராக இருந்தார். அம்மா செய்த தியாகங்களை அளப்பரியது. சிங்களத்தின் அநீதியை அராஜகத்தை எதிர்த்துப் போராடி வீரச்சாவ அடைந்த மாவீரர்களுக்குள் அம்மாவின் மூன்று பிள்ளைச்செல்வங்களும் கலந்தார்கள். சிங்களத்தின் இனவெறியாட்டத்தினால் தன் கணவன், இரண்டு பிள்ளைகள் என மூன்று சொந்த,  இரத்த, பாச உறவககை அம்மா இழந்தே இருந்தார். இவைகள் அம்மாவினது சிந்தை அனு ஒவ்வொன்றிலும் கலந்திருந்தது அவரது நெஞ்சைத்து அதிர்வுகளாக இருக்கின்றன. அந் நிலையிலும் அவரின் அபாரா மனவுறுதி, வைராமுடைய நெஞ்சு அனைத்தும் தனித்தவம் மிக்க ஒருவராகவேயுள்ளார்.தங்களைத் தாங்களே மதிப்பவர்களை, அனைவரும் மதித்தே தீர வேண்டும்.- பெஞ்சமின் டிஸ்ரேலி அரிய எண்ணங்களில் ஈடுபட்டுள்ள ஆன்மா, சிறிய கடமைகளைச் சிறப்பாக ஆற்றும். – ஹேரியட் மாரட்;டீனோ அந்த வகையில் அம்மாவினது மேன்மையான தியாகத்தை தமிழ் இனமுk; தமிழ்த் தேசமும் கௌரவிக்கின்றது.

v தங்களைத் தாங்களே மதிப்பவர்களை, அனைவரும் மதித்தே தீர வேண்டும்.- பெஞ்சமின் டிஸ்ரேலி

v அரிய எண்ணங்களில் ஈடுபட்டுள்ள ஆன்மா, சிறிய கடமைகளைச் சிறப்பாக ஆற்றும். – ஹேரியட் மாரட்;டீனோ

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments