
ஈழத்து மெய்யியல் சார் கல்வெட்டுக்களில் காணப்படும் சிறப்பு பதங்களுக்கான ஆய்வு
பருமக (இது அனைவரையும் குறித்த பொதுச்சொல் இதன் ஆரம்பகால கல்வெட்டுக்கள் பருமகன் என்று குறித்தன,பின்பாக பருமகந் என குறித்ததை காணக்கூடியதாக உள்ளது, இதன் பெண்பால் பருமகள்,இவை யாவும் பின்பாக மறைந்து பருமக என்ற பதமானது.
(1) பருமக ஸுமந புத பருமக திஸஹ லெணெ,(சுமந மகன் திஸ) உபஸக இது அக்கால மெய்யியலின் முதற்படிநிலை இதன் பெண்பால் உபஸிக என்பதாகும்.
(2) ஜோதிதேரஹ மஹஸுதஸநெ உபஸக திஸய தேரஹ நாக லெணெ(சுமந மகன் திஸ)
இதஸ்கித தெரஹ ஸதிவிஸரிய ஸுமந குத்தஸ ஜித கனக ரகிய உபஸிக திஸய லெணெ, குத்த இது உபஸக என்ற மெய்யியல் நெறியின் உபஸக என்ற நிலைக்கு அடுத்த நிலை இதன் பெண்பால் ஸமணிய என்பதாகும்.
(3) பருமக ஸுமந புதஹ சுடஸுமநஹ பத திஸகுத்தஹ லெணெ.
திஸ சமணிய லெணெ. தத்த இது குத்த என்ற படிநிலைக்கு அடுத்த உயர்ந்த நிலை
(4) ஜோதிஸ்ந தேரஸ அதிவஸிக பத ஸுமந தத்த தேரஸ லெணெ.
இவை இவ்வாறாக குறித்த ஒரு நபரையே அவரது படிநிலைகளை பொறுத்து பருமக,உபஸக/உபஸிக,குத்த/ஸமணிய,தத்த என்றும் அதனிலும் மிக உயர்ந்த தேரஸ என்றும் அழைக்கின்றன. அடுத்து மிக முக்கியமான விடயமும் ஒன்றுளது, அது பருமக ஸுமந புதஹ சுடஸுமநஹ பத திஸகுத்தஹ லெணெ.
அதாவது பருமக ஸுமந மகனும் சுடஸுமந என அழைக்கப்படுபவனுமாகிய பத திஸகுத்தனுடைய பாழி என்பது இதன் பொருளாகும். ஆக சுடஸுமந என்பது இளஞ்ஸுமநன் என்பதாகும்,இதனை சூட்டி /குட்டி எனவும் இன்றை தலைமுறையினர் கூட அழைக்கும் வழக்கம் உள்ளது. ஆகவே இந்த ஸுமந என்பவரது மகனாகிய திஸ என்பவர் குத்த என்ற நிலைக்கு உயர்ந்து பத என்ற தகுதிக்கும் வந்தபின் அவரை சுடஸுமன ,இளஞ்ஸுமநன் என விளித்ததை காண்கிறோம், ஆக இதே போன்றவைதான் சுட நாக,சுடி திஸ,குட கோதம சமணெ என்பன போன்ற பதங்களின் பொருளும் என அறிந்து கொள்ளலாம்.