×

விடுதலைப் போராட்டத்தில் பங்களித்த மக்கள் அனைவரும் மாமனிதர்களே!

எமது மக்கள் போற்றப்படவேண்டியவர்கள், கெளரவிக்கப்பட வேண்டியவர்கள், தேசிய போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களின் பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்கு தோள்கொடுத்து வரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மனவுறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.

நீண்டகாலமாகவே போராட்டத்தின் பெரும் பளுவைப் பொதுமக்களே சுமந்து வருகிறார்கள். சாவும், அழிவும், பசியும், பட்டினியும், இரத்தமும், கண்ணீருமாக எமது மக்கள் எதிர்கொண்ட தாங்கொண்ணாத் துன்பத்தைச் சொற்களில் சித்தரிக்க முடியாது.

உலகில், எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் ஒடுக்குமுறையின் நெருப்பில் குளிப்பது பொதுசனங்களே. ஏனென்றால் அடக்குமுறையாளர்கள் போராளிகளை அழிப்பதில் காட்டும் தீவிரத்தை விடப் பொதுமக்களின் ஆன்மீக உறுதியை உடைக்கவேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள். ஆனால் இந்த முயற்சிகள் ஒரு பொழுது வெற்றியளிப்தில்லை.

மக்களின் விடுதலை உணர்வை அடக்குமுறையால் அழித்துவிட முடியாது. உலக வரலாறு பகரும் உண்மை இது. ஏனென்றால், விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக, உயிர் மூச்சாக இயங்குகிறது. மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சத்தியும் அதுவே.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.  “எனது மக்களின் விடுதலைக்காக” நூலிலிருந்து

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments