×

ஈழத்து பண்டைய கல்வெட்டுக்கள்

ஈழத்து பண்டைய கல்வெட்டுக்கள் அனைத்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒன்றோடு

ஈழத்து பண்டைய கல்வெட்டுக்கள் அனைத்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒன்றோடு ஒன்று மிகநெருங்கிய தொடர்புமிக்கவை ,அவை கூறும் தகவல்கள் ஊடாக அவற்றுக்குடையே உள்ள உறவுவழி தொடர்புகளையும் கண்டறிய முடியும் , அந்த வகையில் IC – 373 (வெடுக்குநாறிமலை) “மஹ சமுத்த புத குத்த ஸ லெணெ,ஸகஸ” பருமக பமதத்த குத்தஹ மஹகுத்த(ஹ) லெணெ” என்கிறது.ஆக இந்த மஹ குத்தஹ என்பவருக்கு கற்படுக்கையை அவருடைய தந்தையாகிய மஹசமுத்த என்பவர் தானமாக வழங்கியுள்ளார். (தத்த என்பவன் மஜிம ரஜ என்ற கமணி அபய மகன் கமணி திஸ என்பவனை குறிப்பதாக கீழ்க்காணும் கல்வெட்டு தெரிவிக்கிறது IC1045 ஸகஸ பமண மொகலி புத பருமக மஜிம புத ததஹ லெணெ,இதில் பமண மொகலி என்பவர் தெவநபி கமணி உதி என்ற வேந்தர் ஆகும்.அவர் மகன் மஜிம என்பவர் தெவநபி கமணி அபயன் ஆகும், அவர் மகனாகிய தெவநபி கமணி திஸ என்பவரையே இந்த கல்வெட்டு ததஹ(தத்தஹ)என்கிறது.இந்த மஜிம ரஜ கமணிதிஸ என்பவருடைய தந்தை என்பதை மேலும் ஆணித்தரமாக நிறுவும் இந்த கீழ்வரும் கல்வெட்டை காணுங்கள்,  கமணி திஸஹ பிதஹ நியத மஜிம ரஜஹ ச நியத கமணி திஸஹ’ஆகவே இந்த கமணி திஸ என்பவரின் தந்தையே மஜிமரஜ என்பவர், இவரை தெவநபி கமணி அபய எனவும் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.ஆதலால் இந்த வெடுக்குநாறிமலை கல்வெட்டு குறிக்கும் பம’’தத்த ‘’குத்தக மஹகுத்தக என்பவன் தெவநபி கமணி திஸ என்பவனையே குறிக்கிறது,ஆகையால் அவனது தந்தயாகிய மஜிமரஜ என்ற தெவநபி கமணி அபயன் என்பவனே மஹசமுத்த என்பவனாகும் என்பது இதன் மூலம் புலனாகிறது,அதனை IC – 373 (Vedukkunarimalai) “மஹ சமுத்த(மஜிமரஜ) புத குத்த ஸ (கமணிதிஸ)லெணெ,ஸகஸ” பருமக பம’’தத்த’’ குத்தஹ மஹகுத்த(ஹ) லெணெ” என்ற கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.ஆகவே இந்த மகாசமுத்த,மஜிமரஜ,தெவநபி கமணி அபய என்ற வெவ்வேறு பெயர்களில் விளிக்கப்பட்டவன் தெவநபி கமணி உதி என்ற பாண்டிய வேந்தனுடைய மகனாகிய கமணி அபயன் என்பவன் என்பதும் இந்த கல்வெட்டுக்கள் மூலம் உறுதியாகிறது.

இவனது தீக்கை பெயராக விளங்கிய மஜிம என்பதை கொண்டு விளங்கும் கல்வெட்டாகிய ‘’ ஸகஸ பமண மொகலி புத பருமக மஜிம புத ததஹ’’ என்ற கல்வெட்டு ஊடாக இந்த மஜிம என்பவர் தெவநபி கமணி அபய என்ற பாண்டிய வேந்தர் என்பதையும் அவருடைய தந்தையாக குறிப்பிடப்படும் பமண மொகலி என்பவர் தெவநபி கமணி உதி என்ற பாண்டிய வேந்தர் என்பதையும் அவரே மற்கலி கோசாலர் என்பதையும் கண்டு கொள்ள முடிந்ததோடு ,இந்த மஹசமுத்த என்பவர் மஜிம என்ற தெவநபி கமணி அபய என்பதையும் கண்டுகொள்ள முடிந்தது,அத்தோடு இந்த கமணி அபய மகன் கமணி திஸ என்பவனே வெடுக்குநாறிமலை கல்வெட்டு குறிக்கும் பமதத்த குத்தஹ மஹகுத்தஹ என்ற மஹசமுத்த புத அதாவது கமணி அபய மகன் கமணி திஸ என்பதையும் கண்டுகொள்ள முடிந்தது, ஆகவே இந்த மஹசமுத்த என்பவனே தமிழக மாங்குளம் கல்வெட்டு உரைக்கும் கணி நந்தஸிரிய, என்ற ஆசீவக விண்ணியல் வியக்கனுக்கு கற்படுக்கை அமைத்துக் கொடுத்த பணவன், கடலன்,வழுதி என்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகும்

‘’இவனையே ஈழத்துக் கல்வெட்டுக்க்கள் கமணி அபய,மஜிமரஜ,மஹசமுத்த என்றும் விளிக்கிறது.இவனது தந்தையான கமணி உதி என்பவரே மற்கலி கோசாலர் என்ற பாண்டிய வேந்தர், இந்த பாண்டிய வேந்தர் சகோதரன் தமரஜ என்பவர்தான் சுமந சமண் (சமன்) என்ற தெய்வமாக ஈழத்தில் வழிபடப்படுபவர், இந்த சுமந சமண் மகன் மகாதிஸ மகள் ஆகிய அபி சவெர என்ற ஆசீவக துறவு பெண்ணைத்தான் மகாவம்சம் துட்டகாமிணி என்ற புனைவு அரசனது தாயாகிய விகாரமாதேவி என புனைந்து கூறுகிறது,ஆனால் இந்த அபி சவெர என்ற பாண்டியகுல இளவரசி கமணி திஸ என்ற பாண்டிய வேந்தருடைய காலத்தைச் சேர்ந்தவர், இந்த கமணி திஸ மகனாகிய திஸ என்பவனுக்கு இவள் அத்தை முறையானவள், அத்தோடு இந்த அபி சவெர என்பவளுக்கு கல்வெட்டு ஆதாரங்கள் வாயிலாக எந்தவொரு மகனோ,மகளோ இருந்ததற்கு எந்தவித ஆதாரங்களுமில்லை, இவளது வரலாற்றுக்காலம் வேறு அவளை துட்டகாமிணி தாயாக விபரிக்கும் மகாவம்ச வரலாற்றுக் காலகட்டம் வேறு, துட்டகாமிணி என்பவன் வரலாற்று அரசன் அல்ல,அவன் மகாவம்ச இதிகாச புராண கதாபாத்திரம்.அதில் இந்த பெருமதிப்புற்குரிய அபி சவெர என்ற இளவரசி விகாரமாதேவி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வட இந்திய புராணங்கள் போன்றே பாலியல் சார்ந்த மிகவும் இழுக்கான செயலுக்காக தன் சொந்த மகனான துட்டகாமினி பாத்திரம் ஊடாக காவியம் படைத்துள்ளார் மகாநாம தேர, இவரொரு வட இந்திய மரபைச் சேர்ந்த துறவியாக விளங்கியதால் அந்த இழிவான கதாபாத்திரத்தில் இவ்வாறு புனைந்து தமது பாணியிலேயே எழுதியுள்ளார்.வட இந்திய புராணங்கள் இந்து மதத்திலும் ஒருத்திக்கு ஐந்து கணவன் என்ற கதாபாத்திரம் கொண்டவை.

தள் போன்ற புராணக்கதைதான் இதுவும், மேலும் IC 338 to 341 வரையான பெரியபுளியங்குளம்,வவுனியா கல்வெட்டுக்கள் ‘’ரஜ நக ஜித ரஜ உதி ஜய அபி அநுரதி ச ரஜ உதி ச கரபித ஸ இம லெணெ,சதுதிஸ ச ஸகய அகத அநகத பஸூவிகாரயெ அபரிமித லொகத்துய ஸதந ஸித ஸுகயெ ‘’ என்ற கல்வெட்டு மூலமாக இந்த உதி மஹரஜ துணைவியாகிய அபி அநுரதி அதாவது பட்டத்திற்குரிய இளவரசி அபி அநுரதி என்பவள் ஓர் நாக அதாவது வேள் குல அரசருடைய மகள் என்பதை வெளிப்படுத்துகிறது,இதே போன்றுதான் இந்த உதி மஹரஜ புதல்வன் கமணி அபய என்ற பாண்டியகுல வேந்தன் துணைவியும் பட்டத்து இளவரசியுமாகிய அபி கண என்பவளும் வேள்குல நாக அரசனுடைய மகளாக இருப்பதையும் இந்த கமணி அபய அபி கண ஆகியோரது மகளுக்கும் அபி அநுரதி என அழைத்ததையும் காணமுடிகின்றது,அத்தோடு இந்த நாக(வேள்)குல இளவரசிகளுக்கு பிறந்த மகனுக்குத்தான் ஆய் (அய) என இளவரசன் பட்டம் சூட்டுவதையும் ,இத்தகைய மகளுக்குத்தான் இளவரசி(அபி)(ஆய்இ) என பெயரிடுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்த அநுரதி என்ற அபயன் தாய் மற்றும் தனது மகள் அநுரதி பெயரிலேயே இன்றைய அநுரதபுரம் என்ற நகருக்கு பெயர் வழங்குவதும் இங்கு நோக்கத்தக்கது.ஆகவே இந்த ஆய்குல வழிவந்த ஈழத்து பாண்டியகுல அரசர்கள் தமது பட்டத்திற்குரிய இராணிகளாக வேள்குல பெண்களையே மணப்பதும் அந்த வேள்குல(நாக) அரசர்களுக்கு இந்த ஆய்குல பாண்டியகுல அரசர்களே வேந்தர்களாக இருந்தமையும் பண்டைய பழந்தமிழக வரலாற்று ஏனைய அரசர்கள் கடைப்பிடித்த மரபையே இவர்களும் கைக்கொண்டு விளங்கியதை இது எடுத்துக்காட்டுகிறது,அத்தோடு இந்த வேள்குல அரசர்களே இந்த ஆய்குல வேந்தர்களுடைய படைத்தளபதிகள் ,தனாதிபதிகள்,போன்ற முக்கிய பெரும் பதவிகளில் விளங்குவதும் இங்கு நோக்கத்தக்கது.

 

guest
0 Comments