×

ஈழத்தீவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் மற்றும் வரலாற்று ஆதார ஆய்வுகள்,

ஈழத்தீவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் மற்றும் வரலாற்று ஆதார ஆய்வுகள்,

நமது தமிழ் மொழியின் தோற்றம் கி.மு. 600-ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக, 1969 மற்றும் 1984-ஆம் ஆண்டுகளில் அனுராதபுரம் மற்றும் கண்டி அகழ்வாராய்ச்சிகளின் போது, ​​அசோகர் காலத்தை விடப் பழமையான தமிழி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதாவது பாளி நூல்கள் குறிப்பிடுகின்ற அசோகனுடைய காலத்து பெளத்தமத வருகைக்கு முன்பாகவே இவை இங்கே புழக்கத்தில் இருந்ததற்கு ஆதாரமாக காணப்படுகின்றன.

இந்த அகழ்வாராய்ச்சிகள், முன்னாள் தொல்பொருள் பணிப்பாளர், டாக்டர் சிரன் தெரனியகல அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 1988 ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்து மட்பாண்டத் துண்டுகளும், அனுராதபுரத்தில் உள்ள சல்கஹவத்த ASW 88 (88) அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகளும், கார்பன் 14 மற்றும் வெப்ப ஒளிர்வு காலக்கணிப்பு முறையைப் பயன்படுத்தி காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அனுராதபுரம் மற்றும் கண்டி அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்து மட்பாண்டத் துண்டுகள் கி.மு. 600-500 காலகட்டத்தைச் சேர்ந்தவை என்றும், உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே கி.பி. 8-13 அளவான காலத்திலேயே சிங்கள மொழி தோற்றம் பெறுகின்றது. அதன் பெரும்பாலான சொற்கள் பாளி,தமிழ்,சமற்கிருத மொழிச் சொற்களை கொண்டு உருவாகிறது. அதன் செம்மையான வடிவம் கி.பி. 14 முதலே நிகழ்கிறது.இக்கால கட்டத்திலேயே தென்னிந்திய பகுதிகளிலும் பல மொழிகள் தோற்றம் பெறுகின்றன. அவை கன்னட, தெலுங்கு,மலையாள மொழிகளாக மாற்றம் பெறுகின்றன. அவை போன்றே சிங்கள மொழியும் பல்லவர் கால வட்டெழுத்து வடிவத்தில் பாளி, சமஸ்கிருத,தமிழ் சொற்களை கொண்டு சமகாலத்தில் தோன்றுகின்றது. எனவே பண்டைய ஈழத்தமிழ் சமூகம் கடைப்பிடித்த ஈழப்பாகத மொழிக்கும் சிங்கள மொழிக்கும் முடிச்சு போடுவதனால் கூட வரலாற்று ரீதியாக எந்தவித தொடர்பும் ஏற்படாது, இரண்டும் வெவ்வேறான வரலாற்று காலகட்டத்தைச் சேர்ந்தவை. தமிழிக்கும் பல்லவர்கால வட்டெழுத்துக்கும் இடைப்பட்ட காலத்தை வலிந்து திணிப்பவை.

எனவே நமது பண்டைய தமிழ் சமூகம் கடைப்பிடித்த ஆசீவகம் தீவு முழுவதும் பிரபலமடைந்தது காணப்பட்டதுடன், அத்துறவிகளுக்கு மன்னர்களும் குடிமக்களும் பாளிகளை அமைத்துக் கொடுத்தார்கள். அந்த காணிக்கைகளும் நன்கொடைகளும் குகைகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஈழப்பரதனாகிய தமிழன் அமைத்துக் கொடுத்தது என கூறுகின்ற கல்வெட்டு அநுராதபுரத்தில் காணப்படுகின்றது. அதேபோன்று கதிர்காம ஈழத்து பாண்டிய அரசர்களது கல்வெட்டுக்கள்,நாணயங்கள் போன்றன அப்பாழியை வழங்கியவரின் பெயர், அவரது வம்சாவளி, என்ற வாக்கியமும் எழுதப்பட்டிருந்தன.

இவை அக்காலத்தில் ஈழத்தமிழ் சமூகம் பயன்படுத்திய ஈழப்பாகத மொழியில் எழுதப்பட்டிருந்தன. அவற்றில் மீன் குறியீடுகளும் ,சமணம் குறித்த சொல்லாடல்களும்,தமிழுக்கே உரிய சிறப்பெழுத்துக்களும், தமிரையே குறிப்பாக உணர்த்தும் அன்விகுதி கொண்டு விளங்குகின்றன. உதாரணமாக உதிரன், கபதிகசாஅன்,தசபிட்டன்,மஹசாத்தன் போன்றனவும், தமிழுக்கே உரிய சிறப்பெழுத்துக்கள் கொண்ட ணாகன். வேள்,மகன்,மருமான்,பருமகன்,பருமகள்,மருமகன்,பூதி,வேள்பூதன்,மல்லன்,போன்ற தமிழ் பெயர்களும் கொட்டிக் கிடக்கின்றன, இவற்றோடு நாக வழிபாட்டு,சமண வழிபாட்டு குறியீடுகளோடு கூடிய மீன் இலட்சனைகளும் தீசன் திசை போன்ற பெயர்களும் கூட சமண மதத்தையே பிரதிபலிக்கின்றன. எனவே இவை, பாளி நூல்கள் உரைக்கின்ற மஹிந்த தேரர் இங்கு வருவதற்கு முன்பே இந்த மொழி ஈழத்தில் இருந்ததற்கான தொல்பொருள் சான்றுகளாக உள்ளன. இவற்றில் பெரும்பாலாவை அனுராதபுர,கதிர்காம இராச்சியங்களில் காணலாம். இந்தக் குகைக் கல்வெட்டுகள், பேராசிரியர் செனரத் பரணவிதான அவர்களால் ‘சிலோனின் கல்வெட்டுகள் தொகுதி 1’ என்ற பெயரில் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

பேராசிரியர் செனரத் பரணவிதான தனது ‘சிலோனின் கல்வெட்டுகள் தொகுதி 1’ என்ற நூலில், இந்தக் குகைக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சங்கத்திற்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட மொழி, இலங்கையின் பண்டைய சமூகத்தால் பயன்படுத்தப்பட்ட மொழி என்றும், அது ஒரு வெளிநாட்டிலிருந்து நமக்கு வந்த மொழியோ அல்லது பௌத்த மதத்தின் வருகையால் நமக்கு வந்த மொழியே அல்ல என்றும் அவரே குறிப்பிடுகிறார்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments