×

” அருச்சுனா ஒளிக்கலைப் பிரிவு “

1986 ஆம் ஆண்டு தமிழீழ கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட எமது ஒளிப்படைகலையின் முதல் வித்து வீரவேங்கை அருச்சினாவின் பெயர் தாங்கி பல போராளிகளின் தடங்களைப் பதித்து செயற்படுகின்றது.

கேணல் கிட்டு யாழ்மாவட்டத் தளபதியாக இருந்த காலத்தில் உருவாக்கிய பல்துறை சார்ந்த பணிகளில் இந்த ஒளிப்படப்பிடிப்புப் பணியும் ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டிருந்தவரே வீரவேங்கை அருச்சுனா.

எமது பிரிவின் தந்தையாகிய நின்று கேணல் கிட்டு காட்டிய பாதையில் அருச்சுனாவின் சுவடுகளில் நடந்து தங்கள் உயிர்களைக் கொடுத்து வராலாற்றின் பதிவுகளை எங்களிற்குத் தந்து சென்ற இன்னும் பல மாவீரர்களின் நினைவுகளுடன் கூடிய ஆண்மபலத்துடன் இவ் ஓளிக்கலைப்பிரிவு நிமிர்ந்து உண்மைக் காட்சிகளை உலகெங்கும் கொண்டுசென்றது என்பதில் ஐயமேதுமில்லை.

எமது போராளிகள் போர்க் கலையில் மட்டுமன்றி சகல் கலைகளிலும் சகல கலா வல்லவர்களாக திகழ வேண்டுமெனும் எமது தேசியத் தலைவரின் சிந்தனைப் பிரதிபளிப்புக்களில் ஒன்றே இந்த ஒளிக்க்கலைப்பிரிவு.

ஆயிரம் சொற்கள் எழுதி தெளிவுபடுத்த முடியாத ஒரு செய்தியை ஒரு ஒளிப் படத்தின் மூலம் சொல்லிவிடலாம் என்னும் கோட்ப்பாட்டுக்கமைய எமது தாயக விடுதலைப் போரின் உண்மைத் தன்மையையும் தாயக நிலவரங்களையும் வெளிக்கொண்டு வரும் முகமாக எமது படங்களை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. ஆகவே இன்றைய உலக தகவல் பரிமாற்ற வேகத்திற்கு இணையாக செயற்பட வேண்டியுள்ளது. அதனை நிறைவு செய்ய அயராது உழைப்போம். மாவீரரை மனத்திருத்தி.

தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட அருச்சுனா புகைப்படப் பிரிவு இன்று காலத்தின் மாற்றாத்தால் யார் யாரோ கைகளில் சற்று மாறுபட்ட வடிவங்களில்…

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments