×

ஓவியர் புகழேந்தியின் போர்முகங்கள் ஈழப் போர் ஓவியங்கள்

1) உயிராயும் பிணமாயும்

உள்ளில் மரித்து வெளியே துளிர்த்து கானலின் கரையில் நீயும் நானும்

2) சித்திரவதை

திசைகளைக் கேட்டேன் தேம்புகின்றன

3) வேதனை

ஒவ்வொரு விளிம்பிலும் விசும்பும் கண்ணீர்

4) மரண வேதனை

இப்பொழுதேனும் பாடு உயிர்ப்பின் பாடலை

5) தொடரும் சுவடுகள்

இன்னொரு போராளியின் காலில் என் செருப்புகள் ஏறும்

6) பெண்ணின் சிதைவு

இனவெறி தனது கால் வைக்கும் இடமெல்லாம் மிதிபட்டுக் கசியும் தாயின் முலைகள்

7) பயணம் தொடரும்

உதறுவதற்கு இன்னும் ஓரிரு கனவுகள் …

8) விழ விழ எழுவோம்

வீழும் அருவி ஆறாய் விரியும்

9) வெறி

தகர்க்கப்பட்டது எங்கள் வீடு அல்ல நாடு

10) சிந்தனையில் மூழ்கி

எங்கே தொலைஞ்சது என் வியர்வையும் வாழ்க்கையும்

11) காத்திருப்பு

இழப்பதற்கு முடிவெடுத்தோம் பெறுவதற்காக

12) எதிர் நோக்கி

எந்த இன்றுக்கும் உண்டு நாளை …

13) குட்டிமணி கண்கள்

உனது கோர நகங்கள் நீளுமுன் உயிர்த்திருந்த அந்த விழிச் சுடரில் ஒளிவார்த்துக் கொண்டவை ஒன்றிரண்டு அல்ல… இந்தக் கண்களாலும் இருபதாம் நூற்றாண்டைப் பார்க்கலாம்

14) அலைவு

அடிமைத்தனத்தின் வெட்கம் சுமந்து அங்கும் இங்குமாய்…

15) பதுங்கு குழி – 1

எங்களைக் காக்க அல்ல எங்கள் தேசத்தைக் காக்க

16) பெருமூச்சு

பதுங்கு குழியும் பிதுங்கு விழியுமாய் எத்தனை காலம்…?

17) பதுங்கு குழி – 2

நாங்கள் புதைபடாத குழிகளும் உண்டு.

18) யாழ் வெளியேற்றம்

சிறகு விரித்து விதையொன்று அலையும் முளைக்க ஒருபிடி மண் தேடி

19) யாழ் நூலகம் எரிப்பு

ஆயிரம் ஆயிரம் புலவர்களை, எழுத்தாளரை ஆய்வாளரை பலிகொண்ட இனவெறித் தீ புலமைகளையும் வித்தகங்களையும் ஆய்வுகளையும் கூட…

20) வல்வை படுகொலை

பிணவாடை வீசும் தென்திசை காற்றில் அசோகமரத்துக் கிளைகள் துளிர்த்தன

21) செம்மணி

புதைக்கப்பட்ட கடைசிச் சொற்களை வேர்களாய் நீளும் எம் தூரிகைக் கேட்கும் மவுனம் காக்கும் மனச்சாட்சிக்கு முன்பு எரியும் வண்ணங்களில் முழங்கிக் காட்டும்

22) திலீபன்

பசித்தது…அவனே உணவானான்

23) விதைக்கப்பட்டவர்கள்

நாளைய பிஞ்சு முகங்கள் முகர்ந்து பார்க்கும் ஒவ்வொரு பூவிலும் உங்கள் உயிரின் வாசம்…

24) பிரபாகரன்

மறுக்கப்பட்ட மனித விடுதலை தெற்கில் ஒரு புள்ளியில் முளைத்தது

25) திணறல்

சாவை எதிர்பார்த்து உயிர் வாழும் ஆசையோடு…

26) அழுத்தம்

விழுங்க முடியாத துயரங்களை போர்க்காலத்தில் விழுங்குவது எப்படி?

27) உறுதி

எங்கள் மண்ணில் போரின்உறுதியை விடஎங்கள் பெண்ணின் உறுதிவைரமானது

28) போர்

குண்டு விமானம் தாங்கும் வானம் குனிந்திருக்க விடமாட்டான் எங்கள் எதிரி

29) குமுறல்

எதிரிகளிடமிருந்து காப்பாற்றுமா எங்களை வெறும் கைகள்?

30) நிதானம்

எதிரி பதற்றமாய் இருக்கலாம்… நாங்கள் நிதானமாய் இருப்போம்

31) தளிர்

குருதியில் புதைந்தது போதித் துளிர் இல்லையா?

32) எதிர்காலம்

காயம் சுமக்குமோ இனி வரும் காலமும்?

33) சித்திரவதை

சட்டத்துக்குட்பட்ட சம உரிமை

34) கொலைக் கயிறுகள்

மறுதலிக்கப்படுகிறது இயல்பான வாழ்வு மட்டுமன்று இயல்பான சாவும்

35) செஞ்சோலை

புகைமூட்ட மற்றதொரு பொழுதில் மலர்வதற்கே அரும்பிய செஞ்சோலை அரும்புகள்! இனவெறித் தீயில் கருகினவோ கனவுகளோடு அந்தக் கண்களும்?

36) முறிந்த பேனா

முறிந்து கிடப்பது மூச்சடைத்து முடிந்ததுஎழுத்துரிமை

37) சிதைவு

வீழ்ந்து கிடப்பது பட்டாசு வெடித்த காயத்தால் அல்ல

38) வெறி

தமிழச்சியின் பிணத்தைக் கூட கசக்கிப் பிழிந்த சிங்கள இனவெறிக் கைகள்!

39) உடைப்பு

துண்டு துண்டாய் எங்களைச் சிதைத்தாய்… இரு இரு… துண்டு துண்டாய் சிதறும் இலங்கை…

40) இனவெறி

ஒரு காலத்தின் குறியீடானது எங்கள் மண்ணில் பிணமும் இரத்தமும்…

41) உயிர்க் கல்லறை

கூடும் தொட்டிலும் புகைகிற கோலம் குழவியும் காயம்படுகிற காலம் மானுடம் அவாவும் விடுதலை வெளியை மரணம் முற்றுகை இடுகிற காலம் நாடுகள் உண்டு! மனிதர்கள் எங்கே? மௌனங்கள் உண்டு! நியாயங்கள் எங்கே?

42) நிமிர்வு

அடங்குவோம் என்று நினைக்காதே… காயங்களோடும் நாங்கள் நியாயம் கேட்போம்!

43) வடு

காயங்கள் மறையலாம்… தழும்புகள் மறையாது…

44) விதைகள்

ஆயுதங்களை ஏந்துவார்கள் உன் ஆயுதங்களால் துளைக்கப்பட்டவர்கள்…

45) பழி

குண்டு கொடுத்தது புத்தனை ஈன்ற நாடு கொன்று முடித்தது புத்தனை வணங்கும் நாடு…

46) உறுதி

குண்டுகளால் அழிக்கப்பட்டவள் அல்ல – உருவாக்கப்பட்டவள். போரால் குலைக்கப்பட்டவள் அல்ல –உறுதியாக்கப்பட்டவள்

47) களம்

இவள் கவலை ஒரு குழந்தையின் எதிர்காலம் அல்ல – ஒரு தாய் மண்ணின் எதிர்காலம்

48) அமைதி

அடர்த்தெழு குருதி வெளியில் குற்றுயிரும் குலையுயிருமாய் அமைதி… வீழ்த்தியது சிங்கத்தின் கொலைவாளா? அசோகச் சக்கரத்தின் ஆரங்களா?

49)சுவடுகள்

துருவம் வரைக்கும் தொடரும் சுவடுகள் சுவடு ஒவ்வொன்றிலும் தொலையாக் கனவுகள் திரும்பி வருகையில் கனவு மெய்க்குமோ? கரித்துண்டாய் உன் காணி கிடைக்குமோ?

50) பாய்ச்சல்

நீ போரை நிறுத்தலாம்… எங்கள் போராட்டத்தை நிறுத்த முடியாது…

51) போராளி

வீரன் பிறந்து கொண்டே இருப்பான்… விடுதலை பிறக்கும் வரை…

52) முள்ளிவாய்க்கால் மே 18 2009

நொடிப் பொழுதில் எரிந்து சாம்பலானது – ஐம்பதாயிரம் தமிழ் உயிர்களா? உலகின் மனச்சாட்சியா?

53) உடைப்பு

ஒரு காலத்தில் அகப்பை பிடித்த கை

54) வேர்

என் கைகளில் துப்பாக்கி தந்தவன் எதிரி

55) காவல்

துப்பாக்கி என்னை பாதுகாத்தது துப்பாக்கியை நான் பாதுகாத்தேன்

56) சிறகு

தாய்க்கோழி விரித்த சிறகாய் இருந்தது தோளில் சுமந்த எறிகணைகள்!

57) இயக்கம்

தொடர்பில் இருக்கிறோம் தொடர்ந்து…

58) மண்

என் தோழர்களின் பிணங்கள் விழுந்த மண்

59) தேவை

போருக்கான தேவை இருக்கும் வரை போரும் இருக்கும்.

60) துரோகம்

துல்லியம் காட்டும் தொலைநோக்கியில் தெரியாமல் போனவை – முதுகுக்குப் பின் நின்ற துரோக முகங்கள்!

61) பாய்ச்சல்

ஓரே நேரத்தில் மண் விடுதலையும் பெண் விடுதலையும்

62) கனல்

தோளில் போராட்டமும் கண்களில் விடுதலையுமாய்…

63) ஆணை

கீழே போடுவதற்காக நாங்கள் துப்பாக்கி ஏந்தவில்லை

64) சந்திப்பு

சமமாய் நின்றே சந்தித்தோம் – சமரையும் சாவையும்

65) காத்திருப்பு

காத்திருக்கிறோம் காலத்துக்காகவும் ஈழத்துக்காகவும்

66) காலம்

மானுடம் தனது விடுதலை வெளியை மரண முற்றுகையில் மீட்கிற காலம்

67) வஞ்சினம்

கொலை செய்கிறவனை சாகடிப்பது கொலையல்ல…

68) புயல்

வீராங்கனைகள் நெற்றியில் முத்தமிட்டு குருதிப் புயலில் விடுதலையின் கொடி!

69) திடம்

கருவி அல்ல எங்கள் உறுதி காப்பாற்றும்.

70) கடமை

முதுமை ஒரு தடையல்ல

71) களம்

பதுங்கி இருப்போமே தவிர ஒதுங்கி இருக்க மாட்டோம்

72) பதிவு

ஒளிப்படத்தில் பதிவானது இருண்டிருந்ததைப் பார்த்தாளோ அவள்?

73) பயணம்

போராளிகளையும் தாங்கி போராட்டத்தையும் தாங்கி.

74) இசை

விடுதலைக்கும் மரணத்துக்குமான இடைவெளியில் பனைமரமே! உன் வேர்களுக்கும் குருத்துகளுக்கும்இந்தா… என் இசை!

75) தோய்ச்சல்

காயம் சுமக்காத தேசம் விடுதலை பெறாது.

76) பதுங்கு குழி

மண் துளைத்து இறங்கும் மரணத்தின் வெடி முழக்கத்தை தாங்குமோ? தாலாட்டில் இனிததிர்ந்த இளஞ்செவிப்பறைகள்!

77) தொடர்

முள்ளிவாய்க்காலும் முடிவல்ல முள்வேலிக் கம்பியும் முடிவல்ல.

78) கண்ணீர்

மண்ணிழந்து மகன் இழந்து விரிந்த வெறுங்கையில் இறுதியாய் விழுந்தது ஆற்றாத கண்ணீர்.

79) வலிமை

இளைஞரிடம் காணப்பட்ட முதிர்ச்சியும் முதியோரிடம் காணப்பட்ட இளமையும் எங்கள் வலிமையானது

80) குமுறல்

என்றென்றும் நான்குழந்தையாக இருக்க மாட்டேன்

81) வடு

எதிர்காலம் வடு அழியாது

82)  உண்மை

நாங்கள் சாகடிப்படுவது பயங்கரவாதிகள் என்பதால் அல்ல தமிழர்கள் என்பதால்

83) பலிபீடம்

இனஒழிப்புப் போரின் வெற்றிக்கொடி… ஜெயஹே, ஜெயஹே, ஜெயஜெயஹே!

84) எதிர்கொள்ளல்

மரங்களின் இரத்தத்திலும் தலைநிமிரும் மண்

85) ஏக்கம்

விடியலுக்கான காத்திருப்பு

86) தாக்கம்

குண்டுகள் உடைத்த மனம்

87) விடுதலை

ஒரு பயிருக்கு எத்தனை விதைகள்

88) உயிர்த்தெழுதல்

நினைக்கிறாயா எங்கள் பிணங்கள் போராடாது என்று.

89) கொடூரம்

வீசுகிறவனுக்கு தெரிவதில்லை குண்டுகளின் கொடுமை.

90) கனல்

வளைத்து வர நெருப்பு நடுவில் எங்கள் இருப்பு

91) உந்தல்

போர்தான் தீர்வா போரின் வலிக்கும் துன்பத்துக்கும்?

92) வெறி

நீ கொல்வது தமிழனை அல்ல – புத்தனை.

93) மீளாமை

தப்பிப் பிழைத்தோம் போரில். செத்துக் கொண்டிருக்கிறோம் பின்னால்…

94) வைராக்கியம்

துயரத்தின் கண்ணீர் அல்ல இது உறுதியின் கண்ணீர்

95) காத்திருப்பு

போரில் ஓய்ந்திருக்கிறோம் என்று நினைக்காதே… களைத்திருக்கிறோம்

96) தொடர்ச்சி

போரின் தோல்வி போராட்டத்தின் தோல்வி அல்ல.

97) உடைப்பு

ஒடுக்குமுறை உன் வழி உடைத்தெழுதல் என் வழி

98) மண்

தலைகள் விழலாம் தாயகம் விழாது

99) காயம்

நினைவுகள் சுமந்த காயம் ஆறுவதில்லை

100) நம்பிக்கை

அமைதி ஒரு நாள் துப்பாக்கியைச் சுடும்

101)  தளிர்

புதைக்கப்பட்ட தொப்புள் கொடியிலிருந்து

102) வெளிச்சம்

விடிந்துதான் ஆகவேண்டும் இரவு…

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments