×

களத்தில் மிகப்பெரும் சாதனைகளை செய்த விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவர் பிரிகேடியர் தீபன்.

#பிரிகேடியர் தீபன்

களத்தில் மிகப்பெரும் சாதனைகளை செய்த விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவர் பிரிகேடியர் தீபன்.

அவர் பல போரியல் சாதனைகளை செய்திருந்தாலும், அதில் மிக முக்கியமானதாக நான் கருதுவது, பல ஆண்டுகளாகயாழ் குடாநாட்டில் இருந்த படைகளை கிளாலி-நாகர்கோவில்-முகமாலை முன்னரங்க நிலைகளில் தடுத்தி நிறுத்திவைத்திருந்ததைத்தான்.

இதன் பின்னே இருக்கும் தரவுகளை உங்களுக்கு தருகிறேன்.அதிலேயே நீங்கள் இது எத்தகைய போரியல் சாதனைஎன்பதை புரிந்து கொள்ளலாம்.
#இதன் வரலாற்று பின்னணி
1999-2009 காலப்பகுதியில் யாழ். குடாநாட்டில், சிங்கள தரைப்படையின் மூன்று படைப்பிரிவுகள் நிலை கொண்டிருந்தன. ஒரு படைப்பிரிவு என்பது 10000-15000 படையினரை கொண்டது.

பல்வேறு தகவல்களின் அடிப்படையில் யாழ்குடா நாட்டில் அன்று குறைந்தது 40000 படையினர் இருந்தனர் என்றுதெரியவருகிறது.

அதேநேரம் கிளாலி-நாகர்கோவில்-முகமாலை முன்னரங்க நிலைகளில் இருந்த விடுதலை புலிகளின் படையணி சுமார்3000 போராளிகள் தாம்.
தளபதி தீபன் போரியல் ரீதியில் மிக நுட்பமான முறையில் தமது முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை (Forward Defense Line) அமைத்திருந்தார்.
#இலங்கை இராணுவம் கைப்பற்ற எடுத்த முயற்சிகள்
2000 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் ஆனையிறவை கைப்பற்றிய பின், இந்த கிளாலி-நாகர்கோவில்-முகமாலை எனும்நீண்ட முன்னரங்க பாதுகாப்பு நிலைகள் உருவாக்கப்பட்டது.

அன்றிலிருந்து 2009 ஜனவரி மாதம் வரை விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இந்த பகுதிகள் இருந்தன.
இலங்கை இராணுவம் பூநகரியையும்,பரந்தனையும் கைப்பற்றிய பிறகு, புவியியல் ரீதியில் இவைகளை தக்கவைப்பதுகடினம் என்பதால் தளபதி தீபனின் படைகளை தேசியத் தலைவர் பின்வாங்குமாறு பணித்தார்.

ஆனால் இந்த இடைப்பட்ட காலங்களில் கிளாலி-நாகர்கோவில்-முகமாலை நீண்ட முன்னரங்கு பாதுகாப்புஅடுக்குகளை கைப்பற்ற சிங்களத் தரைப்படை பல தடவைகள் முயற்சி செய்திருந்தது.
இந்த பகுதிகளை கைப்பற்றுவதற்காகவே சிங்களத் தரைப்படை பல சமர்களை நடத்தியிருந்தது. ஆனால் சிங்களத் தரைப்படையின் அனைத்து முயற்சிகளுமே தோல்வியிலேயே முடிந்தன.
அவற்றில் மிக முக்கியமானவை சில.

#First battle

2001 ஏப்ரல் மாதம் இலங்கை இராணுவத்தினால் நடத்தப்பட்ட தீச்சுவாலை நடவடிக்கை.
#Second battle
2006 ஆம் ஆண்டு 55ம் டிவிசன் பெரும் முன்னேற்பாடுகளுடன் மீண்டும் கைப்பற்ற முனைந்தது.
சில மணித்தியாலங்களிலேயே 55 வது டிவிசனின் சிறப்பு அதிரடிப்படையினர் (Elite Commandos) 250-300 பேர்கொல்லப்பட்டனர். சுமார் 800 பேர் காயமடைந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதுவும் தோல்வியில் முடிந்தது.

#Third battle
இது 2007 இல் நடந்தது.தோல்வியில் முடிந்தது.
#Fourth battle
இது 2008 ஏப்ரல் மாதத்தில், பல மாத தயார்படுத்தலுக்கு பிறகு சிங்களத் தரைப்படையால் பெரும் படைத்துறை நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டது.
53ம், 55ம் டிவிசன் படையணிகள் தமது சிறப்பு படையணியையும், எந்திரமயப்படுத்தப்பட்ட காலாட்படை (Mechanized Infantry) கொண்டு இந்த பெரும் முன்னேற்ற நடவடிக்கையினை நடத்தின.
சிங்களத்தின் 53வது மற்றும் 55 வது படைப்பிரிவுகள் பல மாதங்களாக விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளபிரதேசத்தை, நிலம் மற்றும் கடலாலும் தாக்குவதற்குத் தயாராக இருந்தனர். அவற்றில் சில இரவு நேரசெயற்பாடுகளாகவும் இருந்தன.

உண்மையில், இந்தச் சமர் ஆனையிறவு, மற்றும் பூநகரி இரண்டையும் கைப்பற்றப் புதிதாக பரீட்சித்துப் பார்க்கப்பட்டஆயுதங்களைக் கொண்டும், தாக்குதல்களுக்குத் தயாராக அமைக்கப்பட்ட காலாட்படைப் பிரிவுடன் நன்கு தயார்ப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது. மற்றும் நன்கு தெரிவு செய்யப்பட்ட வான்வழி படையணி(Airmobile Brigadei) மூலம்தொடங்கப்பட்டது. சிங்களத்தின் நம்பிக்கை வானின் படைப்பிரிவாக இது கருதப்பட்டது.
பல மணி நேர கடுமையான சமரிற்குப்பின், 175 இற்கும் மேற்பட்ட அப்பாவி சிங்கள இளைஞர்களை முகமாலையில் பலி கொடுத்துவிட்டு தளம் திரும்பியது, பொன்சேகாவின் சிங்களப் படை. அதே நேரம் எமது தரப்பில் 25 போராளிகள் சிங்கள ஆக்கிரமிப்பினை முறியடித்த இச்சமரில் தம்முயிர் ஈந்தனர்.
பல மணித்தியால சமரிற்கு பின்னர் சுமார் 175 படையினரின் இழப்புகளோடு இலங்கை இராணுவம் பின்வாங்கியது.
தளபதி தீபன் அவர்களின் போரியல் சாதனைகளின் மிக முக்கியமான பகுதியை மிக சுருக்கமாக தந்திருக்கிறேன்.

க.ஜெயகாந்த்
மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

<a href=”https://telibrary.com/wp-content/uploads/2021/09/p1.pdf”>Artikel1</a>
<a href=”https://telibrary.com/wp-content/uploads/2021/09/p2.pdf”>Artikel1=2</a>
<a href=”https://telibrary.com/wp-content/uploads/2021/09/p3.pdf”>Artikel13</a>
<a href=”https://telibrary.com/wp-content/uploads/2021/09/தமிழீழ-கட்டுமான-நிதி-வெற்றிக்கான-கூட்டுழைப்பு-2001.pdf”>தமிழீழ-கட்டுமான-நிதி-வெற்றிக்கான-கூட்டுழைப்பு-2001</a>

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments