
கப்டன் சந்தியா உட்பட ஏனைய (52) மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
20.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதி நோக்கி “ஜெயசிக்குறு” நடவடிக்கைப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட பாரிய முன்நகர்வு முயற்சிக்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் சந்தியா உட்பட ஏனைய (52) மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
20.08.1997 அன்று உலங்கு வானூர்திகள் மற்றும் ஆட்டிலறி பீரங்கிகளின் சூட்டாதரவுடன் டாங்கிகள் மற்றும் கவச ஊர்திகளின் துணையுடன் புளியங்குளத்தை கைப்பற்றுவதற்காக சிறிலங்கா படையினரால் பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து உள்நுழைந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் பல மணிநேரம் தீரமுடன் களமாடி படை நடவடிக்கையை முற்றாக முறியடித்தனர்.
இதன்போது சிறிலங்கா படையினரின் இரு முதன்மை போர் டாங்கிகள் தாக்கியழிக்கப்பட்டதுடன் மேலும் இரு டாங்கிகள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டன. 73 மி. மீட்டர் பீரங்கி பொருத்தப்பட்ட கவச ஊர்தி ஒன்று உட்பட பெருமளவான ஆயுதங்கள் மற்றும் படைய கருவிகள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.