×

1995 யாழ்ப்பாண இடப்பெயர்வும் செம்மணி மனித புதைகுழியும்….

1995 யாழ்ப்பாண இடப்பெயர்வும் செம்மணி மனித புதைகுழியும்….

#வரலாற்றை_கடத்தல்
பூவும் நடக்குது
பிஞ்சும் நடக்குது
போகும் இடம் அறியாமல்
என்ற ஈழத்துக் கவிஞனின் வரிகளின் நினைவுகளுடன் இன்றுடன் பல வருடங்கள் ஆகிவிட்டன.

1995 ஆம் ஆண்டு ஆக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி இரவோடு இரவாக யாழ்ப்பாணம் வெறிச்சோடிக் கோண்டிருந்தது.பின்னேரம் 6 மணியிருக்கும். நாவக்குழி்பாலம் உடைக்கப்பட போகின்றது. இரவுக்குள் நாவற்குழிப் பாளத்தை தாண்ட வேண்டும்்என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது. சந்திரிகா அம்மையாரின் சமாதானப் புறா பறக்கப்பட்டமையால, 1994ல் ஆரம்பமான முன்னேறிப் பாய்ச்சல் ராணுவ நடவடிக்கை 1995 ல் உக்கிரம் அடைந்தது. யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் அதியுச்ச நடவடிக்கையினால் யாழ்ப்பாணம் முழுதும் பலத்த குண்டு வீச்சுகளுக்கு உள்ளாகியிருந்தது. விமானக்குண்டு வீச்சும் தொடர்ச்சியாக இருந்தது. பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் முடங்கியிருந்தது.

அன்று 500,000 க்கு அதிகமான சனத்தொகை உடைய யாழ்ப்பாணம் முழுவதுமாக கண்டி்A 9 வீதியில். நினைத்துப் பார்க்க முடியாத சன நெரிசல் 6ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவனாக எனது குடும்பமும் நகர்கிறது. ஆமை வேகம். 1 மணித்தியாலத்தில் கடக்கக் கூடிய நாவக்குழியை கடக்க விடியற் காலை 6 மணி. பாதி வழியே சொந்தங்களை கைவிட்டவர்கள தமது சொந்தங்களின் பெயர்களை கத்திய வண்ணம். பெற்றோரை பிரிந்த குழந்தைகள், அழு குரல்கள். இரவு முழுவதும் பரா லைட்டுகளின் வெளிச்சத்தில் விமானங்களின் குண்டு வீச்சுக்கள், கீழே விழுந்து பதுங்க முடியாத அளவுக்கு சனக்கூட்டம். சன நெரிசலில் மங்கியவர்கள், மயங்கி இறந்தவர்கள், வைத்தியசாலைக்கு செல்ல முடியாது அவதிப்பட்டவர்கள். தமிழர்களாய் நாம் பட்ட சொல்லென்னா துன்பங்கள்…..அடுக்கிக் கொண்டே போகலாம்.

50 நாள் யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணம் முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டில் வர அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமானதுங்க அவர்கள் 1996 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதமளவில் இடம்பெயர்ந்த மக்களை யாழ்ப்பாணத்திற்கு வருமாறு அறிவித்தார். அதன் அடிப்படையில் இடம் பெயரந்த மக்களுக்கு 2 தெரிவுகள் மட்டுமே இருந்தது. ஒன்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள வன்னியை நோக்கிச் செல்வது. மற்றையது படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வருவது. இந்த தெரிவிலே கணிசமான யாழ்ப்பாண மக்கள் படையினரின் கட்டுப்பாட்டிற்கு வந்தார்கள். பலர் வன்னியை நோக்கிச் சென்றார்கள்.

இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டிற்கு வருகின்ற போது நான் தரம் 7ல் கல்வி கற்கின்றேன். பாடசாலைகள் எதுவும் இயங்கவில்லை. அப்படியாக வந்த எம் யாழ்ப்பாண பெற்றோருக்கு அச்சமும் மன சஞ்சலமும், ஏனெனில் வீதிக்கு வீதி சொதனைச்சாவடிகள், முற்று முழுதாக சிவில் நிர்வாகம் அற்ற படையினரின் நிர்வாகம். இதிலும் போராளிகள் மற்றும் மாவீர்ர் குடும்பங்களுக்கு மரண பீதி. இவ்வாறு வந்து கொண்டிருந்தவர்களை விசாரணை என கூட்டிச் சென்று மூடப்பட்ட சோதனை அறையினுல் சோதனை. சொதனைக்குச் சென்றவர் வெளியே வரும் மட்டும் அடுத்ததாக நிற்பவருக்கும் முன்னுக்குச் சென்றவருக்கும் மரண பயம். இந்நேரத்தில் காணாமல் ஆக்கப்பட்வர்கள் பலர்.

இவ்வாறு யாழ் குடநாட்டை அடைந்த மக்கள் 1996 முதல் 2002 ல் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் கைச்சாத்திட்ப்படும் வரை

1. தொடர்ச்சியாக சுற்றி வளைப்புக்கள் ( Round up) இந்த வசனத்தை கேட்டாலே பயம்
2. சுற்றி வளைப்புக்களின் போது தலையாட்டி – யாருக்கு எப்போது தலையாட்டுவான் என்ற பயம்
3. தலையாட்டி தலையாட்டினால் அவர் உடனடியாக படையினரின் கட்டுப்பாட்டில அழைத்துச் செல்லப்படுவார்.
4. ஊடக தணிக்கை – யாழ் குடாநாட்டில் என்ன நடக்கின்ற்து என எவருக்கும் தெரியாது
5. இரவு 6.00 மணியுடன் ஊரடங்கு
6 இரவில் படையினரின் தேடுதல் மற்றும் வன்முறைகள் இவ்வாறாக அடுக்கிக் கொண்டே செல்ல முடியும்

வீதிக்குச் சென்றவரை காணவில்லை என்றால் அவர் காணமல் ஆக்கப்படவரின் பட்டியல் தான். இந்த இன அழிப்பின் ஆறாத வடுவே செம்மணி மனித புதைகுழி. சாதாரணமாக இறந்த உடல்கள் தகனம் செய்யப்படும் இந்து மயானத்திலே 584 எழும்புக்கூடுகள்ஙகண்டு பிடிக்கப்படுகின்றது. இது புவி சார் அகழ்வாராய்ச்சியுமல்ல, தொல்லியல், மானுடவியல் மற்றும் மொழி சார் அகழ்வாராய்ச்சியுமல்ல, எமது தமிழ் மக்கள் பல எண்ணிக்கையாக காணாமல் ஆக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு படு கொலை செய்ப்பட்ட ஒரு இன அழிப்பின் ஆதாரம்.

இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விடயம் பல வருடங்கள் கடந்தும் நாம் இவற்றை எமது அடுத்த சந்ததிக்கு எவ்வளவு தூரம் கடத்தியிருக்கின்றோம்?

 

guest
0 Comments