×

சோழ மன்னன் ஒருவன் 12000 இலங்கையரைத் சிறைபிடித்தானா?’

சோழ மன்னன் ஒருவன் 12000 இலங்கையரைத் சிறைபிடித்தானா?’

வரலாற்று அறிஞர்களின் கூற்றின் படி, சேர [கேரள] மற்றும் பாண்டிய [மதுரை] மன்னர்களின் செல்வாக்கு இலங்கை மேல் கிருஸ்துக்கு முன்பிருந்து கி பி மூன்று வரை இருந்துள்ளது. அப்போது தமிழ்தான் இலங்கை மொழியாக திகழ்ந்தது. அதன் பின்பாக ஏற்பட்ட களப்பிரர் ஆட்சியின் விளைவாக பிராகிருத மொழி தோற்றமும் பாலி நூல்களின் தோற்றமும் நிகழ்ந்தன. இந்த கி.பி மூன்று வரை கேரள மக்கள் பேசிய மொழி தூய தமிழாகும். பின்பு காலப்போக்கில் சேர நாட்டுத் தமிழ் மொழியுடன் சமஸ்கிருதம் கலந்து, மலையாளம் என்ற தனி மொழி பிறந்தது. இத்தகைய நிலையில் இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையில் உள்ள தூரம் ஆக 30 கிலோமீட்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கலாநிதி ஒபேயசேகர [Dr Obeysekere ] இலங்கைக்கும் கேரளத்திற்கும் உள்ள தொடர்பை பத்தினி தெய்வ வழிபாடு    [கண்ணகி வழிபாடு] மற்றும் தாய் வழி அமைப்பு [matrilineal system] மூலம் அலசுகிறார்.

மேலும் அவர் இந்த தாய் வழி அமைப்பு தெற்கு சிங்களவர்களிடமும் முன்பு இருந்து என்றும் ஆனால் பின்பு அது தந்தை வழி அமைப்பாக மாற்றம் பெற்றது எனவும் கூறுகிறார். [According to Dr Obeysekere, the matrilineal system existed in the Sinhala-speaking South also, but was supplanted by the patrilineal system]. மேலும் அவர், பத்தினி தெய்வ வழிபாடு இங்கு கேரளத்து தமிழ் மொழி பேசும் வஞ்சி பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார். அப்போது இலங்கையில் பத்தினி தெய்வ வழிபாடு மேலோங்கி காணப்பட்டதை இதன் மூலமாக அறியலாம். குறிப்பாக இன்றைய கண்டி தலதா மாளிகை பெரகரா விழா தெலுங்கு நாயக்க அரசர்களுடைய காலத்திலேயே பெளத்தமத சடங்காக மாற்றம் பெற்றது. அதற்கு முன்பாக அது பத்தினி தெய்வ வழிபாட்டு பரிகார விழாவாக மாத்திரமே விளங்கியது .ஆகவே இந்த கி.பி 5 ஆம் நூற்றாண்டு முதல் எழுதப்பட்ட பாலி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விஜயன் முதல் துட்டகைமுனு வரை, எல்லாளன் உட்பட, மொத்தம் 396 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் கற்பனையான மன்னர்கள் போலவே தோன்றுகிறது. இக்காலத்தில் அரசர்கள் இல்லை என்பதல்ல. அவர்களின் பெயர்கள், இலங்கை ஆட்சிக்கு ஒரு பௌத்த சாயலைக் கொடுப்பதற்காக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தேவநம்பிய திஸ்ஸா என்பது இந்தியப் பேரரசர் அசோகரின் பிரதி அல்லது நகல்.

அசோகனும் தேவநம்பிய திஸ்ஸ என்ற இரண்டாவது மகன். தேவநம்பிய திஸ்ஸ 40 வருடங்கள் ஆட்சி செய்ததாக இலங்கை வரலாற்று நூல் கூறுகிறது. அசோகர் இந்திய மரபுப்படி 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அசோகன் மாதிரி, ‘தேவானம்பிய’ என்ற அடைமொழியுடன், இலங்கையில் திஸ்ஸ மட்டுமே இடுந்தாரென இலங்கை நூல் கூறுகிறது. அசோகனுக்கும் திஸ்ஸவுக்கும் இருந்ததாகக் கூறப்படும் நட்பு தமிழ்நாட்டில் இருந்த நட்பின் நகல் என்று இலகுவாகக் கூறலாம். அந்த நட்பு தமிழ்ப் புலவர் பிசிராந்தியாருக்கும், கிள்ளி என்ற பெயரால் அழைக்கப்பட்ட, தமிழ் மன்னன் கோப்பெருஞ்சோழனுக்கும் இடையே இருந்தது போல, நேரில் காணாமலேயே நட்பு கொண்டனர்.

என்றாலும் அசோக மன்னன் திஸ்ஸனுடனான நட்பைப் பற்றிய எந்தப் பதிவையும் தனது கல்வெட்டுக்கள் எதிலும் பதியவில்லை என்பதும், மற்றும் எந்த அசோகன் வாழ்ந்த மண்ணின் வரலாற்றில் அல்லது புராணத்திலோ குறிப்பிடவில்லை என்பது முக்கியமாகும். மாறாக சங்ககால சங்கப்பாடல்களில் முதுமையினால் ஏற்படும் துன்பம், வேதனை, அவமானம் இவைகளை மக்கள் விரும்பாமல் ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்று வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் அன்று இருந்தது. அதனை ஆசீவக மரபு என அழைப்பர்.அதன்படி சோழ மன்னன் இறக்க முடிவு செய்து மேலும் சிலருடன் வடக்கு நோக்கி அமர்ந்தான். மன்னர், தான் இறப்பதற்கு முன், தனது இந்த கவிஞர் நண்பர் தன்னைப் பார்க்க வருவார் என்று நம்பினார். கவிஞர் இதை உணர்ந்து அந்த இடத்திற்கு விரைந்தார், ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மன்னர் தனது கவிஞர் நண்பரைக் காணாமல் இறந்துவிட்டார். பிசிராந்தையார் தனது உணர்ச்சிவசப்பட்ட அரச நண்பரின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுக் கல்லைக் கண்டு, அங்கேயே வடக்கு நோக்கி அவரும் அமர்ந்து இறந்தார்.

இது இவ்வாறிருக்க பாலி நூல்கள் கூறுகின்ற வசபாவின் [வசபனின்] மகன் வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் [Vankanasikatissa] அவனுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். மகாவம்சத்தில் வசபாவின் மாமா மற்றும் மாமன் மகள் பற்றிய ஒரு கதை உள்ளது. வங்கனாசிகதிஸ்ஸ இராசவலியில் வன்னேசினம்பாபா [Vannesinambapa] ஆகும். இவனது காலத்தில் சோழ நாட்டு மன்னன் ஒருவன் படையுடன் வந்து பன்னிரண்டாயிரம் பேரைத் தன் நாட்டிற்கு சிறைபிடித்து அழைத்துச் சென்றதாக இராசவலிய கூறுகிறது. இந்த மன்னனைப் பற்றிய ஒரு கதை இராவலியில் காணப்படுகிறது, இது இராமாயணத்தில் உள்ள ஒரு கதையை ஒத்ததாகவும், தமிழில் உள்ள பொற்கை குலசேகர பாண்டியனைப் பற்றிய மற்றொரு கதையைப் போலவும் உள்ளது. இருப்பினும், மற்ற இரண்டு வரலாற்று நூல்களிலும் இது தொடர்பாக எதுவும் கூறவில்லை. கி.பி 3ஆம் நூற்றாண்டு (கி.பி. 201) முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டு (கி.பி. 501) வரையிலான காலகட்டம் தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இந்தக் காலகட்டத்தைப் பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தக் காலகட்டத்திற்கு முன்பு இலங்கை மீது படையெடுக்கும் திறன் கொண்ட ஒரு சோழ மன்னன் இருந்தான் என்றால் அது சங்ககால பாடல்களின் ஊடாக இரண்டு பேரைக் கூறுகின்றன.

அவர்களில் ஒருவன் முதலாம் கரிகாலன் இவன் கி.மு 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவன். இவன் அப்போது இலங்கையின் மாந்தையில் பழந்தமிழக பேரரசனாக வீற்றிருந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மீது போர் தொடுக்க இலங்கையின் குணகடல் வழியாக வந்திறங்கி மாந்தையை கைப்பற்றுவதற்காக வரும் வழியில் இடையில் அன்றைய வெண்ணிப்பறந்தலை என்ற இடத்தில் நெடுஞ்சேரலாதனோடு போர் புரிகையில் புறப்படும் அடைந்தமையால் அது தனது சேர குலத்திற்கு இழுக்கு என்பதை உணர்ந்து அங்கேயே வடக்கிருந்தான். அதனை கண்ணுற்ற அவனது படைத்தளபதி உள்ளிட்ட அவனது உற்ற துணையாகும் வடக்கிருந்து இறந்த பொழுது அதற்காக சோழன் கரிகாலனின் அமைக்கப்பட்டுள்ளன கல்லறைதான் இன்று எல்லாளன் சமாதி என அழைக்கப்படுகின்றது.

அதற்கான பெயரிலுள்ள பட்டிமாகர என்பதன் பொருள் பட்டி என்பது இன்றும் தமிழர்களை இழிவாக கூறப்பயன் படுத்தப்படுகின்ற கேரள சொல், மாகர என்பது மாநகரம் எனவே அது சேரலாதனுடையது என்பதை கூறாமல் கூறுகிறது. இப்போர் இடம்பெற்றது கி.மு 275 இல் இதற்கும் துட்டகாமினி என்ற புனைவு அரசனுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. மேலும் துட்டகாமினி என்பவன் பற்றிய பாலி நூல்களில் தீபவம்சத்தில் முக்கியமானவர்கள் தேவநம்பிய தீசன் மற்றும் மகிந்த தேரர் ஆகியோர் காணப்படுவதுடன், அங்கே ஒப்பற்ற மன்னனாக எல்லாளன் விவரிக்கப்படுகிறான். துட்டகாமினியை அல்ல. அதில் துட்டகாமினிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

ஆனால் மகாவம்சத்தின் முக்கிய ஆளுமை உள்ளவராக துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி இருப்பதுடன் இங்கும் எல்லாளனை சிறந்த முறையில் சித்தரிக்கப்படுகிறது. என்றாலும் இளவரசர் அபயா (தீபவம்சம் இறக்கும் போது ஒரே ஒரு முறை ‘துட்டகாமணி’ என்ற அடைமொழியைப் பயன்படுத்தினார்) முப்பத்திரண்டு மன்னர்களைக் கொன்று இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார் எனக்கூறுகிறது.ஆனால் இளவரசன் அபயா எல்லாளனைக் கொன்றதாக மகாவம்சம் போல் கூறவில்லை. ஆகவே, எல்லாளன் முதுமையால் இறந்திருக்கலாம்? அவருக்குப் பிறகு முப்பத்திரண்டு துணை மன்னர்கள் அல்லது தலைவர்கள் ஆட்சி செய்து இருக்கலாம்?. இளவரசர் அபயா அவர்கள் மீது போர்தொடுத்து, அரசைக் கைப்பற்றி இருக்கலாம்?.

அங்கு, பல துணை அரசுகளுடன், பல தமிழ் இளவரசர்களும் இருந்ததே உண்மையான கதையாக இருக்க வேண்டும். மூத்தசிவ, சிவா, மகாசிவ, சேனா, குட்டா போன்ற பெயர்கள் தமிழ்ப் பெயர்கள். அப்படியே, திஸ்ஸ, சுரதிஸ்ஸ கூட தமிழர்களாக இருக்க வேண்டும். ஆனால் இந்த துட்டகாமினி பற்றிய மகாவம்ச மகாநாகன் தேவநாம்பிய தீசனுடைய தம்பி வழியாக ஓர் தொடர்பை புகுத்தி தேவநம்பிய தீசனுக்கும் அபயவுக்கும் ஓர் உறவை மகாநாமா பயன்படுத்தி மகாவம்சத்தில் ஒரு கதையை புகுத்தினார் என்பதே உண்மையாக இருக்கலாம்.மகாவம்சத்தின்படி துட்ட காமினி (துட்ட கைமுனு) தன் தந்தையின் உயிரியல் மகன் அல்ல.

அவர் இறக்கும் நிலையில் இருந்த ஒரு துறவியின் மறுபிறவியாக இருந்தார். அதாவது, அந்த துறவி தான் இறந்ததும், உடனடியாக துட்டகாமணியின் தாயான விகாரா தேவியின் கருப்பையில், தானாகவே கருவாக மாறினார். அதாவது ஒரு ஆணின் அல்லது கணவனின் துணை இல்லாமல், தானாகவே விகாரா தேவியின் வயிற்றில் கருத்தரித்தார். ஆகவே இந்த துட்டகாமினி ஓர் உண்மையான வரலாற்று மாந்தர் கிடையாது.

அதுவோர் கற்பனைக் கதாபாத்திரம் ஆகும்.மேலும் அக்கால பகுதியில் இலங்கை சேர அரசர்களுடைய ஆட்சியின் கீழேயே விளங்கியது என்பதைத்தான் சேர மன்னன் செங்குட்டுவனுடைய வரலாறும் உரைக்கிறது. இவன் அசோகரும்,கரிகாலனும் இறந்த பின்பாக கி.மு 250 தொடக்கம் பழந்தமிழக பேரரசனாக விளங்கியவன். அக்காலப்பகுதியில் அவனது தம்பியான ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்பவன் இலங்கையின் சேரநாட்டு இளவரசராக துணை அரசனாக வீற்றிருந்தவன். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்து விழாச் செய்த போது, மன்னனின் அழைப்பின் பேரில், இந்திர விழாவிற்கு வந்திருந்த அரசர்களில் இலங்கை அரசனான கஜபாகு என்றழைக்கப்படும் அரசன் இவன்தான். இவர்களுடைய ஆசீவக நெறி சார்ந்தசமண பெயராக அது இருக்கக்கூடும்.

ஏனெனில் இதனை கூறுகின்ற சிலப்பதிகாரம் கூட ஓர் ஆசீவக நூலாகும். எனவேதான் தமிழ்நாட்டில் இருந்த தமிழ் மன்னர்களுக்கும் இலங்கை மன்னர்களுக்கும் அன்றைய கால கட்டத்தில் பகை ஒன்றும் இருக்கவில்லை. இலங்கை மன்னர் கஜபாகு தென்னிந்தியாவின் தமிழ் மன்னர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார். தீபவம்சமும் மகாவம்சமும் அதைப் பற்றி மௌனமாக இருக்கின்றன. கஜபாகு என்ற மன்னன் இன்றும் இலங்கையில் நிலவி வருகின்ற பத்தினி வழிபாட்டை கொண்டு வந்தவன். அப்போது பெளத்தமதம் இலங்கையில் இருக்கவில்லை எனவேதான் தீபவம்சமும், மகாவம்சமும் கஜபாகு மன்னனைப் பற்றி அதிகம் சொல்லவில்லை. இந்த கஜபாகுவின் காலத்தில் இவர்களது அண்ணணான சேரன் செங்குட்டுவன் தமது தாய்வழியில் சோழ நாட்டோடு மிகவும் நட்புறவோடு விளங்கியதை சங்ககால பாடல்கள் மூலமாக அறியலாம்.

அன்றைய காலத்தில் பழந்தமிழகம் வலிமைமிக்க சேர மன்னனின் கீழ் இருந்தன, பன்னிரண்டாயிரம் கைதிகளை அழைத்தும் வந்தான். இதனை கஜபாகு ஒரு பூதத்துடன் சோழ நாட்டிற்குச் சென்றான் என்று இராசவலிய கதை கூறுவது முற்றிலும் விசித்திரமாக உள்ளது. அதுமட்டும் அல்ல, அந்த பூதத்துடன் சோழநாட்டிற்கு நடந்து போவதற்கு கடல் பிரிந்து, பைபிள் கதை போல், வழி கொடுத்தது. இந்த புனைகதை தென்னிந்தியாவில் உள்ள தமிழ் அரசுகளுக்கும் இலங்கையில் உள்ள அரசுக்கும் இடையே நிலவிய நல்லுறவை தவறாக சித்தரிக்கும் துறவியின் முயற்சியாக இருக்கலாம்.? இதற்கு நேர்மாறாக தமிழ் ஆதாரங்களில் கஜபாகு பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உதாரணமாக, சிலப்பதிகாரம் 151 – 163:

“பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து நித்தல் விழாவணி நிகழ்கென் றேவிப் பூவும் புகையும் மேவிய விரையும் தேவந் திகையைச் செய்கென் றருளி வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவ னின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர்”

என்று அவரை ‘கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்’ என்று பெருமையுடன் கூறுகிறது.

கஜபாகு மன்னன் பத்தினி தேவியின் கொலுசுகளையும், நான்கு தேவாலய முத்திரைகளையும், வலகம்பாவின் (மற்ற இரண்டு வரலாற்று நூலிலும் வட்டகாமினி) காலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட புத்தரின் பிச்சைக் கிண்ணத்தையும் [இது புத்த மதத்தில் ஒரு புனித நினைவுச்சின்னம்] மீட்டு தன்னுடன் கொண்டு வந்ததாக இராசவலிய வெற்றியுடன் கூறுகிறது. என்றாலும் கஜபாகுகாமினியின் காலத்தில் பத்தினி வழிபாடு இலங்கைக்கு வந்ததாக மறைமுகமாக ஒப்புக்கொண்டு, தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில், (சிலம்பு. 30 : 160, உரைபெறு கட்டுரை 3) கூறப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறது.

செங்குட்டுவன் வஞ்சிமா நகரத்தில் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்துக் குடமுழுக்குச் செய்தபோது அந்த விழாவுக்குத் தான் இவன் வந்திருந்தான். பிற்காலத்து நூலாகிய இராசவலிய, சோழ அரசன் ஒருவன் இலங்கைக்குச் சென்று போர் செய்து சிங்களவரைச் சிறைப்பிடித்து வந்து காவிரியாற்றுக் கரை கட்டுவித்தான் என்றும், பிறகு கஜபாகு அரசன் சோழ நாட்டுக்குப் போய்ச் சிங்களவரைச் சிறைமீட்டுக் கொண்டு வந்தான் என்றும் கூறுகிறது. இச்செய்தியை மகாவம்சம் கூறவில்லை. பழைய தமிழ் இலக்கியங்களும் கூறவில்லை.

எனவே, இச்செய்தி நம்பத்தக்கதன்று. இதன் உண்மையான வரலாறு இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய மாந்தையை கைப்பற்ற எடுத்த முயற்சியில் அந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வெண்ணிப்பறந்தலை என்ற இன்றைய அநுராதபுர பகுதியில் வடக்கிருந்து இறக்க அவனுக்காக கரிகாலன் அமைத்த கல்லறைதான் எல்லாளன் கல்லறை என இன்று அழைக்கப்படுகின்றது. அவனது காலத்தின் பின்பாக இந்த பழந்தமிழக பேரரசனாக விளங்கிய சேரன் செங்குட்டுவனுடைய காலத்தில் அவனது தம்பியாக இலங்கை துணை அரசனாக விளங்கிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்தான் சமண பெயராக உள்ள இந்த கஜபாகு என விளிக்கிறது. எனவே இதன் மூலமாக பண்டைய சங்ககால பகுதியில் ஆசீவகம் தவிர்ந்த வேறு மதங்கள் இலங்கையில் மாத்திரமல்ல அது பழந்தமிழக நிலப்பரப்பில் காணப்படவில்லை. அக்கால பகுதிக்குரிய சங்ககால பாடல்களும் இந்த ஆசீவக நெறியைக் தவிர்ந்த வேறெந்த நெறி குறித்தும் கூறவில்லை.

(இப்படம் சேர அரசர்கள் போர்க்களத்தில் ஆடுகின்ற துனங்கைக்கூத்து)

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments