×

தமிழீழத்தில் புரட்சிகர ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை

தமிழீழத்தில் புரட்சிகர ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை

தமிழீழத்தில் புரட்சிகர ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை எமது விடுதலை இயக்கம் எத்தனையோ சோதனைகளுக்கு. எத்தனையோ நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து தேசிய சுதந்திர இலட்சியத்தை முனைப்புடன் முன்னெடுத்து வருகிறது. நீண்டதும் கடினமானதுமான இந்த விடுதலைப் பயணத்தில் நாம் எமது முதன்மையான எதிரியாகிய சிங்கள அரசையும் அதற்கு முண்டுகொடுக்கும் சர்வதேச நாசகார சக்திகளையும் மட்டும் எதிர்த்துப் போராடவில்லை. எமக்கு மத்தியில், எமது விடுதலைக் களத்தில், மக்களின் விடுதலை என்ற எமது போர்வையில், ஆயுதமேந்தி எதிர்ப்புரட்சி சக்திகளாக உருவெடுத்த எட்டப்பர் கோஷ்டிகளுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டிய . துர்ப்பாக்கிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்.

ஏன் இந்த முரண்பாடுகள் எழுந்தது? இந்த சூழ்நிலை தோன்றியமைக்கும் அவை மோதலாக வெடித்ததற்கும் காரணமென்ன? நாம் ஏன் இந்தக் கடும் நடவடிக்கையை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டோம். இதனால் எமது சோசலிசப் புரட்சிகர இலட்சியங்கள் பாதிப்படையுமா? எமது தேசிய விடுதலைப் பயணம் பின்னடையுமா? இந்தக் கேள்விகளுக்கு வரலாற்று ரீதியாக. தர்க்க ரீதியாக உண்மை விளக்கங்களை அளிக்க நாம் கடமைப் பட்டுள்ளோம்.

எமது இயக்கமானது காலத்தின் கோலத்திற்கு ஏற்ப காளான்போல் முளைக்கவில்லை. இயக்கத்திற்கு ஒரு நீண்ட, புரட்சிகர வரலாறு உண்டு எமது இயக்கத்தின் வரலாறுதான் தமிழீழத்தின் ஆயுதப் போராட்ட வரலாறாக. பரிணாமம் பெற்றிருக்கிறது. நாம் இன்று ஒரு வரலாற்று சக்தியாக, வரலாறு படைக்கும் சக்தியாக வளர்ச்சி கண்டுள்ளோம்.

எமது விடுதலை இயக்கத்தின் தனித்துவமும் மகத்துவமும் எமது ஒழுக்கத்திலும் இயக்கத்தில் இழையோடும் கட்டுப்பாட்டிலும்தான் தங்கியிருக்கிறது. இந்த சீரிய தார்மீகப் பண்புகளை வித்திட்டு வளர்த்த பெருமை எமது இயக்கத் தலைவர் பிரபாகரனையே சாரும். தமிழீழத்தில், ஆயுதப் புரட்சி இயக்கத்திற்கு அத்திவாரமிட்டு இன்றுவரை, இயக்கக் காலத்திலிருந்து போராளிகளின் நல்லொழுக்கத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து, தேச சுதந்திரப் போராட்டத்தை ஒரு புனிதமான பணியாக, ஒரு உன்னதமான கருமமாக பேணி வளர்ப்பவர் எமது தலைவர். பிரபாகரனின் மிகவும் கண்டிப்பான ஒழுங்கு விதிகளால் நெறிப்படுத்தப்பட்ட எமது இயக்கமானது வீரம். தியாகம். விடுதலையுணர்வு போன்ற உயரிய இலட்சியப் பண்புகளுக்கு இலக்கணமாக அமைந்தது. இந்தத் தனித்தன்மையானது ஏனைய விடுதலை அமைப்புகளிலிருந்து எம்மை வேறுபடுத்தி இனம்காட்டியதுடன் விடுதலைப் புலிகளுக்கும் ஏனையோருக்கும் மத்தியில் முரண்பாட்டைவளர்த்தது.

83 ஜூலை இனப் பூகம்பம் தமிழீழ அரசியல் அரங்கை என்றுமில்லாதபடி உலுப்பியது. அதனால் வெடித்தெழுந்த விடுதலையுணர்வும் ஆவேசமும் புதிய இளம் பரம்பரையை பற்றிக் கொண்டது. ஆயுதப் போராட்ட களத்தில் குதிக்க ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணிதிரண்டனர். இந்தப் புரட்சிகர சூழ்நிலை சில எதிர்ப் புரட்சி சந்தர்ப்பமாக அமைந்தது. மக்களால் ஒதுக்கப்பட்டு, சீரழிந்து சிதறுண்டு தமிழகத்தில் பதுங்கியிருந்த ஒரு சில குழுக்கள் தமிழீழ சூழ்நிலையை தமது விரிவாக்கத்திற்குப் பயன்படுத்தின. திரண்டுவந்த அலைபோல வலைவீசி, இளைஞர்களுக்கு செத்துப்போன இந்த அமைப்புகள் புத்துயிர்பெற்று எழுத்தன.

பழையதும் புதியதுமாக எண்ணற்ற விடுதலை அமைப்புகள் தோற்றம் கொண்டன. எந்தவித விசாரணையுமின்றி, தேர்வுமுறையின்றி, கட்டுப்பாடுகளின்றி நடைபெற்ற, இந்தப் படை திரட்டலில் ஏதுமறியாத அப்பாவி இளைஞர்களோடு காடையர்கள், கள்ளர்கள், தெருச் சண்டியர்கள், கொலைகாரர்கள் போன்ற சமூக விரோத சக்திகள் விடுதலை அமைப்புகளில் சேர்ந்து ‘போராளிகள்’ என்ற முகமூடியை அணிந்துகொண்டன. திடீர் வீக்கமும், விரிசலும் பெற்ற இந்த அமைப்புகளில் ஆயுத மோகமும், இராணுவ வாதமும், அராஜகமும் தலை தூக்கின. புரட்சிகர ஆயுதப் போராட்ட களம், ஆயுதம்தரித்த அராஜகவாதிகளின் தளமாக மாறியது. தமிழீழத்தில் அரச பயங்கரவாதத்தோடு தமிழ்ப் பயங்கரவாதமும் கைகோர்த்துக் கொண்டது. அத்தோடு, ஏகாதிபத்திய நாசகார ஈசகார சக்திகளின் தாசர்களாக திரைமறைவில் இயங்கிவந்த சில தமிழ்ப் பிரமுகர்களும் இந்தப் பயங்கரவாத விடுதலை அமைப்புகளின் ஆலோசகர்களாக ஊடுருவல் செய்தனர். இந்த அமைப்புகளின் திடீர் எழுச்சியும் இராணுவ வளர்ச்சியும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தின. இதனால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழீழ மக்களும் விடுதலைப் புலிகளுமே.

வீட்டுக் கொள்ளை, வழிப் பறிக்கொள்ளை, கோவில் கொள்ளை, பாடசாலைக் கொள்ளை, கூட்டுறவுக் கொள்ளையாக தமிழீழம் எங்கும் அராஜகச் செயல்கள் தலைவிரித்தாடின. திருட்டுத் தொழிலை புரட்சிகரப் போராட்ட நடவடிக்கையாக தழுவிக் கொண்டன சில இயக்கங்கள். பொது ஸ்தாபனங்கள் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டதால் சிவில் நிர்வாகம் ஸ்தம்பிதமடைந்தது. போதாக் குறைக்கு பொது மக்கள் பகிரங்கமாக மிரட்டப்பட்டனர். தாக்கப்பட் டனர். இழிவுப்படுத்தப்பட்டனர். சாதாரண குடும்பப் பிரச்னைகளுக்கு எல்லாம் துப்பாக்கி தீட்டப்பட்டது.

வடக்கிலிருந்து வெடித்துக் கிளம்பிய இந்த அராஜகம் கிழக்கிலங்கைவரை பரவி இஸ்லாமியத் தமிழ் மக்களையும் சீண்டியது. இஸ்லாமிய வர்த்தகர்கள் கொள்ளையடிக்கப்பட்டனர். கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். துப்பாக்கி முனையில் இம்சைப் படுத்தப்பட்டனர். மார்க்சீயவாதம் பள்ளிவாசல் பிரச்னை களில் தலையிட்டது. இயக்கங்களின் இந்த அடாவடித் தனத்தால் தமிழ்-இஸ்லாமிய கலவரங்கள் வெடித்தன. கைதேர்ந்த சிங்கள அரசும் இதற்கு தூபம் போட்டது.

‘புரட்சிகர’ இயக்கங்களுக்கு தஞ்சம் கொடுத்த தமிழ் நாட்டிலும் நடவடிக்கைகள் தலைதூக்கச் செய்தன. கள்ளக்கடத்தல், ஆட்கடத்தல், கொள்ளை கொலையாக தமிழகத்திலும் வன்முறை தாண்டவமாடியது. இதன் ஒட்டுமொத்த விளைவாக தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு என்றுமில்லாதபடி களங்கம் ஏற்பட்டது.

இயக்கப் பயங்கரவாதத்தின் உச்சகட்டமாக சில அமைப்புகள் சித்தரவதை முகாம்களையும், கூடங்களையும் அமைத்துக்கொண்டன. கேள்விகள் எழுப்புவோர். விமர்சனம் செய்பவர்கள் ,இயக்கத்தைவிட்டு வெளியேற விரும்புபவர்கள்,
துரோகிகளாக
முத்திரை குத்தப்பட்டனர். அப்பாவிகளான இந்த இளம் போராளிகளுக்கு சித்திரவதை முகாம்களில் நிகழ்ந்த கதி மிகவும் பயங்கரமானது. காட்டுமிராண்டித்தனமாக இந்தக் கொடும் செயல்களும், குரூரக் கொலைகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிகவும் கறைபடித்த ஒரு அத்தியாயமாகும்.

தமிழீழ மக்கள் விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்பட்டனர். விடுதலை அமைப்புகள் எதிரியோடு போராடுவதை முற்றாகத் தவிர்த்து மக்கள் விரோத யுத்தத்தில் இறங்கியதால் சுதந்திரப் போராட்டம் திசை திரும்பும் ஆபத்தான கட்டம் எழுந்தது.

இந்த நெருக்கடியான சூழ்நிலை எமது விடுதலை இயக்கத்திற்கு பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் அமைந்தது. எமது விடுதலைப் போராளிகளோ சிங்கள இராணுவ முகாம்களை முற்றுகையிட்டு, ஆயுதப் படைகளோடு சதா சமரிட்டு, களத்தில் இரத்தம்
சிந்திக்கொண்டிருந்தனர். எமது முற்றுகையால் விடுவிக்கப்பட்ட பிரதேசமாக வட பிராந்தியம் மாறிவந்தது. இந்தச் சூழ்நிலையால் வடக்கில் சுதந்திரமாக நடமாடமுடிந்த ஏனைய இயக்கங்கள் போராட்ட பழுவை எம்மீது சுமத்திவிட்டு, எமது இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முற்று முழுதாக இறங்கின எமக்கெதிராக மிகவும் கீழ்த்தரமான, விசமத்தனமான பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டதுடன் எம்மோடு மோதி எம்மை இராணுவ ரீதியாக ஒழித்துக் கட்டவும் துணிந்தனர்.

எமது போராளிகளை மிரட்டுவது, துப்பாக்கியால் குறி வைப்பது, தூஷண வார்த்தைகளால் திட்டுவது. எமது ஆதரவாளர்களை தாக்குவது, கடத்துவது. பணம்பறிப்பது இப்படியாக நாளுக்கு நாள் ஆத்திரமூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன.

ஒரு இயக்கம், நிராயுதபாணிகளாக நின்ற எமது இளம் போராளிகளை கடத்திச் சென்று. சித்திரவதை செய்து, கண்டம் துண்டமாக வெட்டி, நிலத்தில் புதைத்தது. இன்னொரு இயக்கம், எமது ஆதரவாளர்களான வயோதிப தந்தையையும் அவரது மகனையும் பகிரங்கமாக சுட்டுக் கொலை செய்தது. மற்றொரு இயக்கம் இரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு எமது இயக்கத்தின்மீது பழியைச் சுமத்தியது.

நாம் பொறுமையை இழக்கவில்லை. மிகவும் நிதானமாக, சகிப்புத்தன்மையுடன் நிலைமையை சமாளித்து மோதலை தவிர்த்துக்கொண்டோம். முதலில் நாம் இந்த முரண்பாடுகளை பேச்சுக்கள் மூலம் களைய முயன்றோம். ஈழத் தேசிய விடுதலை
முன்னணியுடன் கூட்டுறவை ஏற்படுத்த இந்தப் பிரச்னைகளை எழுப்பினோம். தமிழகத்தில் இயங்கிய ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைமைகள் எமது முறையீடுகளை அசட்டை செய்தன. அத்தோடு தமது இயக்க உறுப்பினர்களின் அடாவடித்தனத்தை நியாயப்படுத்தவும் முற்பட்டன. இதனால் இயக்கக் கூட்டுறவு அர்த்தமற்றதாகியது.

இதற்கிடையில்,டெலோ இயக்கத்திற்கும் தமிழீழத்தில் எமக்கும் மத்தியில் நிலைமை படு மோசமடைந்தது. இதன் முரண்பாடு உச்சகட்டமாக கூர்மையடைந்து வந்தது. எமது மூத்த உறுப்பினர் இருவர் கடத்தப்பட்டும், எமது தளபதிகளில் ஒருவர்சுட்டுக் கொல்லப்பட்டதுமான சம்பவங்கள் எமக்கும் டெலோவுக்கும் மத்தியில் மோதலாக வெடித்தது. இறுதியில் ‘டெலோவினர் நிராயுதபாணிகளாக்கப்பட்டு, தமிழீழ அரசியல் அரங்கிலிருந்து அந்த இயக்கம் தடை செய்யப்பட்டது.

டெலோவின் அட்டகாசம் அடங்கியது. மிகவும் ஆபத்தான. பிற்போக்கான அராஜகக் கும்பலிடமிருந்து ஆயுதப் பறி முதல் செய்யப்பட்டதை தமிழீழ மக்கள் பெரிதும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து விடுதலை இயக்கம் சிங்கள முப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட பெரும் படையெடுப்பை வெற்றிகரமாக முறியடித்தது. இச் சம்பவங்களை அடுத்து தமிழீழத்தில் அமைதியும் ஒழுங்கும் ஓரளவு நிலைநாட்டப்பட்டது. இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக்கொண்டதாலும் சமூக விரோதச் செயல்கள் குறைந்ததாலும் மக்கள் மத்தியில் பெரும் நிம்மதி ஏற்பட்டது. ஆனால் இந்த நிம்மதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடு தலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப். குட்டையைக் குழப்பியது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கட்டுப்பாடின்மையும், கறைபடிந்த வரலாறும் எமது மக்களுக்கு தெரியாததல்ல. மார்க்சீயம், புரட்சி என்று சிவப்புச் சாயம் பூசிக்கொண்டு மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த இந்த அமைப்பு டெலோவுக்கும் எமக்கும் ஏற்பட்ட மோதலை அடுத்து எமது இயக்கத்திற்கு எதிராக திட்டமிட்ட ஒரு சித்தாந்த யுத்தத்தில் குதித்தது. எம்மை ‘பாசிஸ்டுகள்’ என்றும் சி.ஐ.ஏ. கைக்கூலிகள் என்றும் மிகவும் மோசமான முறையில் வசைபாடத் தொடங்கியது.

பொய்ப் பிரச்சாரத்தில், உண்மைகளை திரித்துக் கூறுவதில், செய்திகளை மிகைப்படுத்தி தம்பட்டம் அடித்துக் கொள்வதில் ஈ.பி. இயக்கம் தனக்கே உரித்தான மேதாவிலாசத்தைக் கொண்டது என்பது யாவரும் அறிந்த விசயம். பத்திரிகை அறிக்கை மூலம் இராணுவ முகாம்களை அழிப்பதிலும் கடற்படைத் தளங்களை தவிடுபொடியாக்குவதிலும் இவர்களுக்கு நிகர் வேறுயாருமல்லர். இதனால் இவர்கள் எமக்கெதிராகப் புனைந்துவிட்ட புராணக்கதைகளை மக்கள்செவிசாய்க்கவில்லை. சர்வகலாசாலை மாணவன் ஒருவன் கடத்தப்பட்டதாக எம்மீது பழி சுமத்தி இவர்கள் பின்னணியில் நின்று நடத்திய உண்ணாவிரதமும் ஊர்வலமும் பிசுபிசுத்துப் போயிற்று. மக்களின் ஆதரவு எமக்குப் பின்னால் மலைபோல வளர்ந்துள்ளதால் ஈ.பி.யின் பிரச்சாரத் தில்லுமுல்லுகள் எடுபடவில்லை. இதற்கிடையில், இந்த மக்கள் புரட்சிவாதிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு சிகரம் வைக்குமாற் போல இரு கொலைச் சம்பவங்கள் கிழக்கிலங்கையிலும் தமிழ் நாட்டிலும் நிகழ்ந்தன. கிழக்கிலங்கையில் இஸ்லாமியத் தமிழரை தொடர்ச்சியாகத் துன்புறுத்திவந்த ஈ.பி. தோழர்கள் திருகோணமலையில் ஒரு இஸ்லாமிய ஆசிரியரைக் கடத்திச்சென்று சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவம் திருகோணமலை இஸ்லாமிய மக்களை கொதிப்படையச் செய்து கிளர்ந்தெழ வைத்தது.

தமிழகத்தில் சூளைமேட்டில், தெருச்சண்டையில் ஈடுபட்ட ஈ.பி.யின் இராணுவத் தளபதியும் அவரது தோழர்களும் மக்கள் கூட்டம்மீது இயந்திர துப்பாக்கிகளை பிரயோகித்து ஒரு இந்தியப் பிரஜையை சுட்டுக்கொன்றனர். இந்தக் கொலைச் சம்பவம் இந்தியா அடங்கிலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுபோன்று தமிழ்நாட்டு கிரிமினல் சட்டத்தையும் நடவடிக்கைகள் ஒழுங்கையும் அத்துமீறி நடைபெற்று வந்த இயக்கங்களின் தமிழ்நாட்டு மக்களிடையே எமது விடுதலைப் போராட்டத்திற்கு இருந்தவந்த ஆதரவையும் அனுதாபத்தையும் வெகுவாகக் குறைத்தது. சூளைமேட்டுக் கொலைச் சம்பவத்தை அடுத்து தமிழ் நாட்டுப் பொலிசார் எமது இயக்கம் உட்பட சகல அமைப்புகளிடமிருந்தும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். ஈ.பி.யின் இந்த பயங்கரவாதச் செயல் ஈழத் தமிழர் சுதந்திர இயக்கத்திற்கு கரிபூசுவதாக அமைந்தது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எமது இயக்கத்திற்கு எதிராக மிகவும் கீழ்த்தரமான பொய்ப் பிரச்சாரத்தை நடத்திவந்தது ஒருபுறமிருக்க எமது இயக்கத்தை இராணுவ ரீதியாக ஒழித்துக்கட்டவும் சதித் திட்டம் தீட்டியது. இச் சதித் திட்டத்திற்கு டெலோ. புளொட் போன்ற அமைப்புகள் உடந்தையாக இருந்தன. ‘முற்போக்கு முன்னணி” என்ற போர்வையில் இந்த மூன்று அமைப்புகளும் ஒரு இரகசியக் கூட்டணியை அமைத்து எமது இயக்கத்திற்கு எதிராக செயல்படத் தொடங்கின. இவர்களுக்குப் பின்னால் ‘சனநாயக முன்னணி’ என்ற கோஷத்துடன் சந்திரகாசன் அணியினர் இயங்கினர்.

இந்த நாசகாரத் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத்தோடு, டெலோவிலிருந்து சிதறியோடி தமிழ் நாட்டில் பதுங்கியிருந்த இளைஞர்களை ஈ.பி. அமைப்பு ஆயுதமயப்படுத்தி தமிழீழத்திலுள்ள தனது முகாம்களில் குவித்துவந்தது. ஈ பி யின் மக்கள் இராணுவ சீருடையுடன் டெலோவினர் மீண்டும் தமிழீழத்திற்குப் படை எடுத்தனர்.

அடுத்ததாக. எமது விடுதலை வீரர்கள் இராணுவத்துடன் சதாமோதி தமது வெடிமருந்து சக்தியை நீர்த்துவரும் அதேவேளை, ஈ.பி. இயக்கம், எதிரியோடு மோதுவதைத் தவிர்த்து, பெருமளவு ஆயுதங்களை சேகரித்து பதுக்கி வந்தது. எமது வெடிமருந்து சக்தி விரயமாகும்வரை காத்திருந்து, திடீரென எதிர்பாராதவிதத்தில் முதுகில் குத்துவதுதான் இவர்களது சதித் திட்டம்.

எமது இயக்கம் மீது திடீர் இராணுவத் தாக்குதல் நடத்தி, எம்மை அழித்துவிடுவதற்கு தயாரிக்கப்பட்ட சதித் திட்டத்தின் முழு விபரங்களும் அடங்கிய ஆவணம் ஒன்று எம்வசம் சிக்கியது. இந்தியாவிலுள்ள ஈ.பி.யின் தலைமையகத்திலிருந்து அமீன் என்பவரால் மக்கள்இராணுவத்தின் இரண்டாவது பொறுப்பாளர் சுரேஸ் என்பவருக்கு இந்த இரகசிய ஆவணம் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த சதித் திட்டத்தின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு.

விடுதலைப் புலிகள் மீது மின்னல்வேக அதிரடித் தாக்குதல் நடத்தி எமது அமைப்பை முற்றக அழித்துவிடுதல்.

பதுக்கிவைத்திருந்த ஆயுதங்களை எடுத்து, தயார் நிலைக்கு கொண்டுவந்து, அதிரடிப் பிரிவுகளுக்கு பகிர்ந்தளித்தல்.

எல்லா பிரதேசங்களிலுமுள்ள விடுதலைப் புலிகளின் தளங்களையும் கண்காணித்து திடீர் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தறிதல்.

விடுதலைப் புலிகளின் இராணுவ முகாம்களை திடீரென தாக்கி அவற்றை முற்றாக சிதைத்து விடுவதற்காக தயார் நிலையில் இருத்தல்.

அதிரடித் தாக்குதலை மேற்கொள்ளும் சமயம் விடுதலைப் புலிகளின் முகாம்களை,எதிரியின் முகாம்களாக கருதி அவர்களது தகவல்தொடர்புகளை துண்டித்தல், விடுதலைப் புலிகளின் முக்கியமான தளபதிகளை கொலைசெய்து இயக்கத்தை நிலைகுலையச் செய்தல்.

விடுதலைப் புலிகளின் தகவல் தொடர்பு நிலையங்கள் மீது தாக்குதலை நடத்தி அவற்றை நிர்மூலமாக்குதல்.

இத் திடீர் தாக்குதலை நடத்தி முடித்து, விடுதலை புலிகள் அமைப்பை நாசம்செய்த பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப். ஒற்றுமையையும் சமாதானத்தையும் விரும்புவதாகவும் தற்பாதுகாப்பிற்காகவே இந்த தாக்குதல் நடவடிக்கை எடுத்ததாகவும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தல்.

இந்தச் சதித்திட்டமானது ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் முகமூடியைக் கிழித்து அதன் கோரமான உண்மையான முகத்தை காட்டுகிறது. பாசிஸ்டுகள், யார்? பதவிவெறி பிடித்தவர்கள், பயங்கரவாதிகள் யார் ? என்பதை இந்தக் கொலைகாரத் திட்டம் அம்பலமாக்கியிருக்கிறது. கார்ல் மார்க்ஸின் சுலோகங்களை எழுப்பும் இந்தக் காக்கைவன்னியர்கள் மக்களின் விடுதலைக்காகப் போரிடுவதற்கு ஆயுதம் ஏந்தவில்லை. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக களத்தில் இரத்தம் சிந்தி மகத்தான தியாகங்களைப் புரிந்துவரும் மக்கள் போராளிகளான எம்மை ஒழித்துக் கட்டவே இவர்கள் ஆயுதம் தரித்தனர். தேச சுதந்திரத்தை ஒரு புனித இலட்சியமாகக் கொண்ட புரட்சிகர இயக்கத்தை அழித்துவிட்டு சிங்கள அரசுடன் சமரசம் செய்துகொள்வதே இவர்களது நாசகார நோக்கம். ஆகவேதான், இந்த எட்டப்பர் கோஷ்டியை நாம் நிராயுதபாணிகளாக்கத் தீர்மானித்தோம் இவர்களது ஆயுதங்கள் பறிக்கப்படாவிட்டால் நிச்சயமாக எமக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும். திருப்பப்பட்டிருக்கும் அவை என்பது திண்ணம்.

ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டம் என்பது அதியுயர்ந்த அரசியல் போராட்ட வடிவம். விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக உயிரைத் தியாகம் செய்யும் உன்னத போராட்ட வடிவம் இது. இரத்தம் சிந்தும் இந்தப் புரட்சிப் போராட்டத்தை உண்மையான புரட்சிவாதிகளால்தான் முன்னெடுக்க முடியும். ஒழுங்கும் கட்டுப்பாடும், தன்னலமற்ற தியாக உணர்வும், மனிதாபிமானமும் மக்கள் நேயமும் இந்தப் புரட்சிவாதிகளின் தார்மீகப் பண்புகளாக அமையவேண்டும். தர்மத்தை ‘நிலைநாட்டவே நாம் இந்த ஆயுதப் போராட்டத்தில் குதித்துள்ளோம். இந்த தர்மயுத்தத்தில் அதர்மத்தைப் பேணும் அராஜக வாதிகளுக்கு இடமில்லை. இந்தத் தீய சக்திகளால். எமது புனித போராட்டம் களங்கப்படுவது ஒருபுறமிருக்க இந்த சக்திகளை நாம் ஆயுத பாணிகளாக வளரவிட்டால் எமது விடுதலை இலட்சியத்தை நாம் அடைவது சாத்தியமில்லை.

எம்து ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல், பொருளாதார விடுதலையை இலட்சியமாகக் கொண்ட உண்மையான புரட்சிகர அமைப்புகளுடன் நாம் கைகோர்த்துப் போராடத் தயார். இந்தப் புரட்சி வாதிகளை எம்மோடு அணிசேர்ந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். இந்த. நெருக்கடியான வரலாற்று சூழ்நிலையில் ஒரு தேசிய சுதந்திர இயக்கமாக நாம் எமது போராட்டத்தை நெறிப்படுத்தி முன்னெடுப்பது அத்தியாவசியமாகும்.

-விடுதலைப்புலிகள் இதழ்
பிப்ரவரி 1987.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments