×

சந்ததிகள் சந்திக்கின்றன!

சந்ததிகள் சந்திக்கின்றன!

சருகும், தளிரும் சந்தித்துக் கொண்டன.
தலைவனின் பாதையில் சங்கமமாயின.
உதிரப்போகும் பழுத்த இலையின், குருதிக்கலன்கள் குமுறத் தொடங்கின.
பொக்கைவாயை மெல்லத்திறந்து, ‘புதிய வேதம்’ தளிருக்குரைத்தது.

” இந்த மண்ணை எதிரியின் கையில் எப்படிக் கொடுத்து இருப்பது மகளே! மரத்தடிநிழலில் அகதியென்றாகி மடிவது இன்னும் எத்தனை காலம்? காலை விடியும் நேரம் வந்தது; கையில் உனக்குக் கருவியைத்தந்தது.

நட, நட மகளே! நானும் வருவேன். நாட்டினுக்காக- உயிரையும் தருவேன்”.

– புதுவை இரத்தினதுரை

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments