
சுடுகலத்தோல்
புலிகள் தங்களின் சுடுகலங்களிற்கு சுடுகலத்தோல் பூண்டிருந்தார்கள். ஆனால் இத்தோல்கள் சுடுகலனிற்கு முற்றுமுழுதாக பூணப்படவில்லை. மாறாக ஏ.கே. வகை துமுக்கிகளின்(Rifle) பிடங்கு மற்றும் உந்துகணை செலுத்தியின் சுடுகுழல்(barrel) ஆகியவற்றிற்கு மட்டுமே பூணப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு பூணப்பட்ட தோல்கள் நெடு வரியும் கிடைமட்ட வரியுமாக இருந்தது.
→பிலிறுந்தம் – சொல் வழங்கியவர் தமிழ்த்திரு இராமகி அவர்கள் ஆவார்.
‘ஆர்.பி.யீ சூட்டாளர் ஒருவரின் தோளில் உள்ள உந்துகணை பிலிற்றுந்திய கைக்குண்டு செலுத்தியின் சுடுகுழலிற்கு சுடுகலத்தோல் பூணப்பட்டுள்ளதைக் காணவும். முதுகில் வெற்றிக்கொடியையும் சுருட்டி வைத்துள்ளார்.’

ஆர்.பி.யீ உதவியாளர் ஒருவரின் வகை-56இன் பிடங்கிற்கு(butt) சுடுகலத்தோல் பூணப்பட்டுள்ளதைக் காணவும்’
ஆர்.பி.யீ உதவியாளர் ஒருவரின் வகை-56 இன் கைப்பற்றில்(hand grip) சுடுகலத்தோல் பூணப்பட்டுள்ளதைக் காணவும்’
இவ்வாறு பூணப்பட்டுள்ள சுடுகலத்தோலானது வரி உருமறைப்பு(camouflage) கொண்ட துணியால் செய்யப்பட்டது ஆகும்.
கவனி: இவருடைய செலுத்தியின் வெந் (Breech)- இல் ஒரு தோல்(skin) போடப்பட்டுள்ளது.
புலிகளின் படைக்கலங்களின் அணிய விரிவுகளை கண்டீர்களா? அற்புதம்!