×

மொழிபெயர் தேயம் காக்கும் தமிழ்கெழு மூவர் 

மொழிபெயர் தேயம் காக்கும் தமிழ்கெழு மூவர் 

வானவன் என்றால் தேவன் அதில் உள்ள நெடில் எழுத்தாகிய தே என்பதனை குறில் ஆக எழுதினால் தெவன்,அந்த அந்த தமிழி அன் விகுதியை பிராகிருத வடிவமாக எழுத முடியாது ஏனெனில் பிராகிருத மொழியிலல் அன் விகுதி கிடையாது. அதன் வடிவில் ந என்ற எழுத்தே அன் விகுதிக்கு இணையானது ஆகவே இந்த வானவன் என்ற தமிழ் சொல் தேவன் என்ற பொருளில் அதுவே பிராகிருத வடிவமாக தெவந என்று திரியும், இனி அந்த பிய என்ற சொல் பிரியமானவன் என்ற பொருளைத்தரும், அதாவது தேவனுக்கு பிரியமான(அன்) அதுவே பிராகிருத வடிவில் பிய என்பதாக திரிகின்றது. இந்த பிராகிருத மொழி மொழி என்பது தமிழில் இருந்து மொழி பெயர்ந்த தேச மொழி அந்த மொழிபெயர் தேசத்தையும் கட்டியாண்டவர்கள் எமது பண்டைய சேர சோழ பாண்டிய அரசர்கள்.அதனையே மொழிபெயர் தேயம் காக்கும் தமிழ்கெழு மூவர் என சங்ககால பாடல்கள் உரைக்கின்றன.

மேலும் இவ்வாறான தெவநபிய என்ற பெயருக்கு இணையான பெயரைச் சூடிக்கொண்ட சங்ககால தமிழ் அரசர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற தேடலில் அதற்கு இணையான வானவன்,வானவரம்பன் என்ற தெய்வீக பெயரைச் சூடிக்கொண்ட சேர அரசர்கள் வரலாற்றில் காணப்படுகிறார்கள். அவர்களில் கொல்லிமலையைத் தன் நாட்டோடு கொண்டிருந்த வானவன் ஆமூரைத் தாக்கி ஆமூரை ஆண்ட கொடுமுடி என்பவனிடம் தோற்றோடிய வானவன் கோடியர் என்னும் யாழிசைப் பாணர்களைப் பேணிப் பாதுகாத்த குதிரைப்படைத் தலைவன் வானவன் கோட்டைக் கொத்தளங்களை நொறுக்கிய வானவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் தோற்ற இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனாகிய வானவன்  குடகடலில் பிற கப்பல்கள் செல்லாவண்ணம் தன் மரக்கலங்களை ஓட்டி வாணிகம் செய்த (கடல் பிறக்கு ஓட்டிய சங்குட்டுவனாகிய) வானவன் ஆகியோர் வானவன் என்னும் பெயரால் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

வானவன் என்னும் சொல் இந்திரன் என்னும் தேவனைக் குறிக்கும் வகையில் எடுத்தாளப்பட்டுள்ள இலக்கிய வழக்குகளும் உண்டு. வானவன் முடித்தலை உடைத்த தென்னவன்,  வானவன் விழவு இந்திர-விழா  வானவன் விழாக்கோள்  போன்றவை அவை.
அது போன்று..

வானவரம்பன் எனச் சேர மன்னர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். வானவரம்பன் என்பது சங்க காலத்தில் சேர மன்னர்களுக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சிறப்புப் பெயராகும். ‘வானத்தை எல்லையாகக் கொண்டவன்’ அல்லது ‘வானவர்க்கு (தேவர்க்கு) இனியவன்’ என்று இப்பெயருக்குப் பல்வேறு பொருள்கள் உள்ளன. ”வானவரம்பன் நன்னாட்டு உம்பர்” (தமிழர் பொருள் தேடச் சென்றனர்).

பதிற்றுப்பத்து ஆறாம்பத்தின் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பகைவர் கோட்டையை நொறுக்கியபின் (குட்டம் தொலைய வேலிட்டு கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்) வெளியத்தை ஆண்ட சேரமன்னன் வானவரம்பன்  சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் ஆகியோர் வானவரம்பன் எனப் போற்றப்பட்டுள்ளனர்.இவை சேர மன்னர்களின் சிறப்புப் பெயர்கள். சேர நாட்டு அரசர்கள் இமயவரம்பன், வானவரம்பன் என்னுஞ் சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்ததைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். மாமூலனார் என்னும் புலவர் ஒரு வானவரம்பனைக் குறிப்பிடுகிறார் (அகம் 359 : 6) வெள்ளிவீதியார் என்னும் புலவர் ஒரு வானவரம்பனைக் கூறுகிறார் (அகம் 45:17). நக்கீரர் என்னும் புலவர் ஒரு வானவரம்பனைக் கூறுகிறார் (அகம் 389 : 16). வானவன், வானவர் என்பது சேர அரச குலத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் உரிய பொதுப் பெயர். இந்த பெயர்தான் தெவநபிய என்ற பிராகிருத வடிவ என்ற தேவனுக்கு பிரியமான(அன்) என்பதாகும்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments