
குறைந்தளவு படையணிகளைக் கொண்டு எப்படி பெரும் சிங்களப்படைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றீர்கள்?
தொடக்கத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன். இது ஆயுதங்களுக்கும் ஆயுதங்களுக்கும் இடையே நடக்கிற மோதல் அல்ல. தமிழரை அடக்கி அழிக்க நினைக்கிற சிங்களப் பேரினவாதத்திற்கும் அடிமை விலங்குகளை உடைத்து விடுதலை பெறத்துடிக்கும் ஓர் இனத்தின் மன எழுச்சிக்கும் இடையே நடக்கிற போர் இது. ஆயுதங்களுக்கிடையேயான போரென்றால் எப்போதோ எங்கள் கதை முடிந்திருக்கும்.
எதிர்காலத்தில் மீண்டும் போர் தொடங்கி ஆயுதப்போராட்டத்தில் நாங்கள் பின்னடைவு கண்டாலும் கூட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழரின் வரலாற்றில் அபூர்வமாகத் தொடங்கிவைத்த மன எழுச்சி அடங்காது. அந்த மன எழுச்சியை எந்தப் படைகளாலும் அடக்கவோ அழிக்கவோ முடியாது. அந்த நம்பிக்கையில் திடமாக நின்றுதான் நான் தமிழீழம் நிச்சயம் ஒருநாள் மலரும் எனவும் நம்புகிறேன்.
– தேசியத் தலைவர்