×

எப்படியோ ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

எப்படியோ ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

தேசியத்தலைவரின் பதில்:

தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப் பெறும்.

சோசலிசம் என்பதன் மூலம் சமத்துவமான சமூக அமைப்பை நான் கருதுகிறேன். இதில் மனித சுதந்திரத்திற்கும், தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதமுண்டு. எல்லாவித ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு சுதந்திரச் சமூகமாகத் தமிழீழம் அமையும்.

இந்தச் சுதந்திரத் தமிழீழம் நடுநிலை நாடாக இருப்பதுடன் அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்கும். அத்தோடு இந்தியாவோடு நேச உறவு கொண்டு அதன் பிராந்தியக் கொள்கைகளை, குறிப்பாக இந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதானப் பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக் கொள்கையைக் கௌரவிக்கும்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments