×

சுலாவேசி முனா தீவின் பாறைஓவிய ஆதிதமிழ் 

சுலாவேசி முனா தீவின் பாறைஓவிய ஆதிதமிழ் 

இந்தோனேசிய சுலாவேசி மாகாணத்தின் முனா தீவில் அண்மையில் அங்குள்ள குகைகளில் சுண்ணாம்பு பாறைகள் மீது சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்ட அழகு மிகு ஓவியங்கள் கண்டு அறியப்பட்டுள்ளன. இவை ஏதோ ஒரு மூல இடத்தில் இருந்து வந்த மக்களால் வரையப்பட்டவை என்று தெரிகிறது. அந்த மூல இடத்து மக்கள் தாம் உலகம் முழுவதும் பரவி இது போல சிவப்பு வண்ண ஓவியங்களை ஆங்காங்கே தமது இருப்பின் அடையாளமாக வரைந்து மறைந்துள்ளனர். இவை பலவும் சிந்து என்னும் ஆதி தமிழ் எழுத்துகளில் இருப்பதால் படித்து அறிய முடிந்தது. இவை தமிழே என்பது அவற்றின் மொழி அமைப்பு, சொல் பொருளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இவற்றின் காலக் கணிப்பு அறிவியலாளரிடமே இருக்கட்டும். அந்த பிணக்கில் நாம் அகப்பட்டுக் கொள்ள வேண்டாம்.

நமக்கு தேவை அவை உணர்த்தும் செய்தி மட்டுமே. இதில் மலையையும் குகையையும் வரைந்து ‘ம’கரத்தை மூன்று இடங்களில் காட்டியுள்ளனர். அதே போல ‘ன’ / ‘ந’கரத்தை குறிக்கும் நான்கு கோடுகளை மூன்று இடத்தில் வரைந்துள்ளனர். ஏதோ பாறை போல தலைப் பகுதியில் இரண்டு இடத்தில் வரைந்திருப்பதை வைத்து இதை ஏலியன் மூன்று விறல் கைகளை இட்டு தம் உருவை அழகாக வரைந்துள்ளனர் என்று வெள்ளையர் சொல்கின்றனர். ‘அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல அவர்களுக்கு எல்லாம் ஏலியன், ஏலியன் கைவண்ணமாகவே தோன்றுகிறது. ஆனால் எழுதிற்காக வேண்டி இவ்வாறு தொல் தமிழர் வரைந்தனர் என்பதே மெய். ஆங்காங்கே பழைய எழுத்தின் மீது புது எழுத்துகள் வரையப்பட்டிருந்தாலும் சில தனி எழுத்துகள் இன்னும் சில எழுத்துகளுடன் தெளிவாக வரையப்பட்டுள்ளன. இனி இதில் உள்ள மூன்று மலை உருவ எழுத்துகளை படிப்போம்.

மலை ∧ ∧ ∧ – ம, தலை – ண, l – ன், ∧ – க, ஆள் – அ, தலை – ண், ∧ ∧ ∧ – ம, __ – ர, IIII – ன், ∧ ∧ ∧ – ம,

︵ – ன், கதிர் \\\\ – ன, கதிர் //// – ன். இதில் உள்ள எழுத்துகள் மணன்கண் மரன் மன்னன் என்பன. இதை மணங்கன் மரன் மன்னன் என்று சீராக படித்து பொருள் அறியலாம். மணங்கன் என்பது மணம் கமழ் என்பது பொருள் ஆகலாம். மரன் > மரம்,தொடக்கத்தில் மன்னன் என்பது ஒளி ஆகலாம். பின்பு புகழைக் குறித்தது.

மங்கலம் தமிழே

மல் என்ற வெண்மைக் கருத்தே ஒளிக் கருத்து பிறக்க அடிப்படையானது. ஒளியில் இருந்து அறிவுக் கருத்து, அறக்கருத்து, தெய்விக கருத்து, புகழ் கருத்து, நன்மைக் கருத்து ஆகியன தோன்றும். மங்கலம் என்னும் நன்மைக் கருத்து ஒளிக் கருத்தில் இருந்து வந்ததே. மல் > மள் > மண். மண் + கு = மங்கு > மங்கலம் – மங்களம். மண் – வைணவர் நெற்றியில் U, Y வடிவில் இடும் வெள்ளை மண். நிறம் மங்குதல் என்றால் சாயம் வெளுத்தல் எனப் பொருள். இங்கே மங்கு வெண்மையை குறிப்பதை நோக்குக. வெண்மை வழியே மங்கலம் – மங்களம் என்றால் பொலிதல் (bright) ஆகும். “சீர் மல்கும் ஆய்ப்பாடி” என்றால் புகழ் பொலியும் ஆய்ப்பாடி எனப் பொருள்.

“திருமன்னி வளர” என்று முதல் இராசேந்திரச் சோழன் மெய்க்கீர்த்தி தொடங்குகிறது. இங்கே மன்னி என்பது பொலிந்த ஒளி என்று வெண்மைக் கருத்தில் ஆளப்படுவதை கவனிக்க வேண்டும். இதுவே “புகழ் ஒங்க” என்ற கருத்திற்கும் இடம் தருகிறது. எனவே மன்னன் என்றால் புகழுக்கு உரியவன் என்றே பொருள்படும். தமிழ் வேரியல் முன்னோடிகள் வெண்மைக் கருத்தை அடியோடு புறக்கணித்ததால் பல சொற்களுக்கு சரியான வேர் பொருள் அறிய முடியாமல் போனது. அதனால் மங்கலம் சமசுகிருதம் என்று தவறாக அடையாளப்படுத்துகின்றனர். மங்களாசாசனம் என்றால் திருமால் தளங்களை புகழ்ந்து வாழ்த்தி பாடுதல் என்று பொருள்.

மல் என்ற வேருக்கு கருமைப் பொருளும் உண்டு. மங்குதல் என்றால் இருட்டாதல். மண் + கு = மங்கு. இங்கே வெள்ளொளி மங்கி காரிருள்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments