×

சங்ககால ஈழத்தில் பாணர்,கூத்தர்,விறலியர்களுடைய கல்வெட்டுக்கள்

சங்ககால ஈழத்தில் பாணர்,கூத்தர்,விறலியர்களுடைய கல்வெட்டுக்கள்

சங்ககால பழந்தமிழகத்தில் வேந்தர், அரசர், வேளிர் போன்றவர்கள் ஆளும் வகுப்பாக இருந்தனர். இவர்கள் ஈழத்திலுள்ள பாகத மொழி கல்வெட்டுக்களில் மஹரஜ,ரஜ,வேள் என விளிக்கப்படுகிறார்கள். அதற்கான காரணமாக அமைந்தது சங்ககால பழந்தமிழகமாக திகழ்ந்த ஈழத்தில் கி.மு 6 இல் மற்கலி கோசாலர்,கணி நந்தாஸிரியர் போன்ற பெருந்துறவிகளால் தோற்விக்கப்பட்ட ஆசீவக சமணம் காரணமாக அமைந்தது.

இவர்கள் முதல் வகுப்பாவர்.

அடுத்து அந்தணர்/பமண, தாபதர், அறிவர், கணியர் போன்ற பிசிராந்தையார் புறம் 191ஆம் பாடலில் குறிப்பிடும் கொள்கைச்சான்றோர் இரண்டாம் வகுப்பாக இருந்தனர். இவர்கள் அறிவு, ஆய்வு, ஒழுக்கம், பொதுநலம், துறவு ஆகியவற்றில் சிறந்தவர்கள்.
வணிகர்கள், தொழில் செய்பவர்கள், வேளாண்மை செய்யும் நிழக்கிழார்கள் போன்றவர்களில் செல்வந்தர்களும், உயர்ந்தோர்கள் எனப்படுவோரும் மூன்றாவது வகுப்புக்கு உரியவர்கள்.

இவர்களில் சிறு குறு வணிகர்கள், சிறு குறு தொழில் செய்பவர்கள், சிறு குறு வேளாண்குடிகள் ஆகியோரும், இன்னபிறரும், போர்வீரர்களும், பார்ப்பனர், பாணர், கூத்தர், பொருநர், விறலி போன்றவர்களும் நான்காவது வகுப்பைச் சேர்ந்தவர்கள். புலையர், இழிசனர் போன்றவர்களும் இந்த நான்காம் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான்.

சங்ககாலத்தில் அவர்கள் மதிப்புக்குரியவர்களாகவே இருந்தனர். பழந்தமிழகத்தில் இந்த நான்கு வகுப்புகள் மட்டுமே இருந்தன. வகுப்புகளிடையே கலப்புமணம் இருந்து வந்தது. மேலும் மேல்வகுப்பினர் கீழ் வகுப்பாக ஆவதும் கீழ்வகுப்பினர் மேல் வகுப்பாக ஆவதும் இருந்து வந்தது. ஆகவே சங்ககாலத்தில் சாதிகள் இருக்கவில்லை. சாதி இல்லை என்பதற்கு அடையாளமாக இருப்பதுதான் ‘உடன்போக்கு’ திருமணமுறை. உடன்போக்கு என்பது தலைவி தான் விரும்பிய ஆண் மகனோடு சென்று திருமணம் செய்துகொள்வதாகும். இதனைச் சங்ககாலத் தமிழ்ச் சமூகம் ஏற்று அங்கீகரித்திருந்தது. இந்த உடன்போக்கில் சங்ககாலத்தலைவி குடி, வகுப்பு, தொழில் போன்ற வேறுபாடுகள் இன்றி அனைத்துத் தலைவனோடும் உடன்போக்கு மேற்கொண்டாள் என்பதைச் சங்க இலக்கிப்பாடல்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன. ஆகவே சங்ககாலத்தில் சாதி இருக்கவில்லை. வகுப்புகள் மட்டுமே இருந்தன.

இவர்களுள் இந்த பாணர், கூத்தர், பொருநர், விறலியர் போன்றவர்களும் சங்ககால பழந்தமிழகமாக திகழ்ந்த ஈழத்தில் இருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக பல்வேறு கல்வெட்டு ஆதாரங்கள் ஆதாரமாக அமைந்துள்ளன. அவற்றுள் …

சுட புதர கித தேரஹ அதி வஸிக பத திஸஹ (லெணெ) (கோணகல, IC No. 670)

சுட புதர கித தேரஹ (மங்கள இசையில் (புதர கித) தேர்ந்த அதி வஸிக பத திஸஹ அதில் சிறந்த குருவாக (பத) விளங்கும் திஸ என்ற பாணருக்குரிய குகை.இவர் கொண்டை தரித்தவர்” சுட “

குறிப்பு:-

ஆகவே இந்த” பத” என்ற சொல் அந்த குறிப்பிட்ட துறையில் மிக உயர்ந்த ஆசானை/குருவை குறிப்பதாக அமைகிறது.

ஈஸீர கித தேரஹ ஸதி விஹரிய பத பகினிய திஸ தேரஹ (சித்துல்பவுன, IC No 614)

ஈஸீர கித தேரஹ (தெய்வீகமாய் பாடுவதில் தேர்ந்த (தேரர்),
ஸதி விஹரிய சதா அலைந்து திரிபவருமாகிய தலைசிறந்த ஆசான்/ குரு திஸ என்ற தேரருக்கு அதாவது பாணருக்கு உரியது.

(தேவர கிதஸ ச- தேவ” எனும் மேள இசைஞரும்)
(தம தேரஸ ச-நீண்ட மேள இசைப்பில் தேர்ந்தவரும் )
( லேணெ- குடைவுத்தளம்) (வெஹெரகம, IC N.700)

தெய்வீக பாடல்களையும்,மேள வாத்தியத்துடன் ஒருங்கே இசைக்கும் பாண்டிய குகை. அவனது பெயர் குறிக்கப்படாது காணப்படுகின்றது.

தம்புள்ள

தமரகித தெரஹ லெணெ, அகத அநகத சதுதிஸ ஸகஸ ,கமணி அபய ஸ ரஜியஹி கரிதெ.

மேளவாத்தியத்தில் தேர்ந்த பாணனுக்கு பாண்டியர்குல ரஜ கமணி அபய ராஜாவால் உருவாக்கப்பட்டது. இவரே பின்பாக ஈழத்து வேந்தராக மஹரஜ கமணி அபய என அழைக்கப்பட்டுள்ளார். இவை ஒருசில உதாரணங்கள் ஆகும்.

 

guest
0 Comments