×

ஊர் நோக்கி – இரணைதீவு

ஈழத்தின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட பூநகரி பிரதேசத்தில் கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் பல அற்புதங்கள், புரதன தொடர்புகள், வரலாற்றுச் சான்றுகளை தன்னுள் புதைத்துக்கொண்டு, கடலுக்கு நடுவே இணைகள் போல இரண்டு தீவுகள் காட்சி தருவதால், போத்துகேயர் காலத்தில் இத்தீவுக்கு இரணைதீவு என பெயர் வரக்காரணமாகிற்று.

கிமு 6000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெரு அழிப்பேரலையில் குமரிக்கண்டம் சிதைவுற்று இந்திய துணைக்கண்டத்தில் இருந்து ஈழத் தீவும் அதைச் சுற்றியுள்ள சிறு சிறு தீவுகளும் உருவாகியதாக வரலாற்று புவியியல் ஆய்வாரள்கள் கருதுகின்றனர். அந்த வகையில் குமரிக்கண்டத்தின் எஞ்சிய பாகமாக இரணைதீவு உள்ளதாக பரவலாக பேசப்பட்ட போதும், இது தொடர்பான ஆய்வுகள் ஏதுவும் இதுவரை எவரும் முன்னெடுக்கவில்லை.

பாண்டிய மன்னர் பரம்பரையின் வழித்தோன்றல்கள் இங்கு வாழ்ந்ததாக பல சான்றுகள் உள்ளன. அக்காலத்தில் குருதீபம் என அழைக்கப்பட்டு வந்த இரணைதீவு பல காரணப்பெயர்களால் அழைக்கப்பட்டும் வந்துள்ளது. இத்தீவு அழைக்கப்பட்ட பெயர்களாக குருதீபம், இரணைதீவு, பட்டித்தீவு, பரித்தீவு, பவளத்தீவு, மீன்தீவு, குருகுல அன்னைத்தீவு, கண்ணித்தீவு, சீனத்தீவு, உல்லாசத்தீவு, சீதைத்தீவு, விசுவாசத்தீவு, பாண்டியத்தீவு, வள்ளல்தீவு, பரவர்தீவு,  ஆமைத்தீவு, முருங்கைகற்தீவு, தஞ்சைத்தீவு, உபகாரத்தீவு, முத்தீபம். இப்பெயர்கள் அணைத்தும் இத்தீவின் காரணப்பெயர்கள் ஆகும். இத்தீவின் பெயர்கள் பற்றிய காரணங்களை ஆய்வு செய்தால் இத்தீவின் தொன்மையும் மேன்மையும் வெளித்தெரியும் என்பது திண்ணம்.

இரணைதீவு கடல்சார் மற்றும் இயற்கை வளங்கள் சார் வளங்கள் நிறைந்த இடமாக உள்ளது .
கடற்தொழிலும் முத்துக்குளிப்பு, சங்குக்குளிப்பு, அட்டைக்குளிப்பு, இத்தொழிகளை இங்குள்ள மக்களால் செய்யப்பட்டு வந்துள்ளது.

பாண்டிய இராட்சியத்தின் பரவர் என்னும் அரசபரம்பரையினர் வாழ்ந்து வந்த இத்தீவு பல அன்னியப் படையெடுப்புகளை சந்தித்துள்ளது. பொத்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் படையெடுப்புகளும் சின பர்மா தொடர்புகளையும் கொண்டுள்ள இரணைதீவு, வன்னி இராட்சியம் யாழ்ப்பாண இராட்சியத் தொடர்புகளையும் வரலாற்று ரீதியாக கொண்டுள்ளது. 1992ம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் கொடுமைகள் தாங்க முடியாத மக்கள் இடம்பெயர்ந்து கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இரணைமாதாநகர் என்னும் கிராமத்தை உருவாக்கி வாழ்ந்து வந்தனர். பொத்துகேயர் படையெடுப்போடு முழுமையாக கிருத்தவ சமயத்தை பின்பற்றியே மக்களின் வாழ்வியல் இருந்து வந்துள்ளது. பின்னர் 2016க்கு பின் மீண்டும் சில இடங்களில் பல கட்டுப்பாடுகள் உடன் மீளக்குடியேறியுள்ளனர்.
வீரம் மிக்க பரவர் அரசபரம்பரை மக்களின் தியாகம் ஈழவிடுதலைப் போரிலும் பங்காற்றியது .

உசாத்துணை
கடலர் பாண்டியர்
குருதீபம்
இணையம்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments