×

ஐயன்குளம் படுகொலை – 27 நவம்பர் 2007

ஐயன்குளம் படுகொலை – 27 நவம்பர் 2007

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் உள்ள விவசாயக் கிராமமான ஐயன்கன்குத்தில் ஒரே ஒரு பாடசாலையான முல்லை.ஐயன்கன்குளம் அரசினர் தமிழ்க்கலவன்  பாடசாலை  இயங்கி  வந்தது.   மருத்துவ  வசதிகள்  அற்ற  இக்கிராமத்தில் இப்பாடசாலை மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.  முதலுவதி பயிற்சி பெற்ற மாணவர்கள் அருகிலுள்ள ஆலங்குளம் மருத்துவமனையிலும் மருத்துவர்களுக்கு உதவி வந்தார்கள்.

அவ்வாறே 2007 நவம்பர் 27ஆம் நாளும் முற்பகல் 11மணியளவில் பாடசாலையிலிருந்து ஆலங்குளம் மருத்துவமனைக்கு நோயாளர் காவுவண்டியில் அன்றைய மாவீரர் தின நிகழ்வில் கூடும் பெரும் தொகையான மக்களுக்கு முதலுதவி வழங்கும் நோக்கத்துடன் மாணவர்களும் அவர்களின் பயிற்றுனர்களும் சென்றனர். இவர்கள் சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினரால் மேற்கொள்ளப்படட் கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளானார்கள். 06 மாணவர்களும் இரண்டு சுகாதாரத்தொண்டர்களும்;,  சாரதியும்  என  09  பேர்  சம்பவ  இடத்திலேயே  கொல்லப்பட்டனர்.

இரு மாணவிகள் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களது உடலையும் படுகாயமடைந்தவர்களையும் அப்பகுதி மக்கள் உடனடியாக உழவு இயந்திரம் மூலம் மல்லாவி பொதுமருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர். இத்தாக்குதல் காரணமாக சில நாட்கள் வன்னி முழுவதும் சோகம் தழுவியதாகவே காணப்பட்டது.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)

  1. அற்புதராசா அஜித்நாத், 22
  2. சந்திரசேகரம் டிறோசா, 17
  3. காந்தன்
  4. கருணாகரன் கௌசிகா,  15
  5. நாகரட்ணம் மதிகரன்,  15
  6. நாகரட்ணம் பிரதீபா, 16
  7. நித்தியானந்தம் நிதர்சனா, 13
  8. சண்முகவேல் சகுந்தலாதேவி,  17
  9. வைரமுத்து கிருஸ்ணவேணி, 25

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments