
கல்முனை படுகொலை – 11 ஆகஸ்ட் 1990
மட்டக்களப்பு நகரத்திலிருந்து 40கி.மீ தொலைவில் கல்முனை உள்ளது. இதனைச்சுற்றி பண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, நிலாவணை ஆகிய கிராமங்கள் உள்ளன. 11.08.1990அன்று பண்டிருப்பு, கல்முனை, சேனைக்குடியிருப்பு ஆகிய கிராமங்களிலுள்ள மக்கள் இராணுவச் சுற்றிவழைப்பினால் அச்சமடைந்து தத்தம் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர். இரைணுவம் வீடுகளுக்குள் குறிவைத்துச் சுட்டு மக்களை வெளியே வரும்படி செய்தது. இளம் ஆண்கள் தமது தேசிய அடையாள அட்டையை கையில் வைத்தபடி வெளியே வந்தனர். தாய்மார் தங்கள் குழந்தைகளை இறுகப் படித்தபடி வெளியே வந்தனர்.
25 இளம் ஆண்களை இராணுவம் கல்முனைக் கிராமத்திலிருந்து காரைதீவு இராணுவ முகாமிற்குக் கூட்டிச் சென்றது. தமது பிள்ளைகளைத் தொடர்ந்து சென்ற தாய்மார் துவக்கினால் தாக்கப் பட்டனர். பல தாய்மார் மயக்கமுற்று விழுந்தனர். அடுத்த நாள் கூட்டிச் செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கல்முனை நகருக்கூடாக காரைதீவு முகாமை நோக்கி நடந்து சென்றனர்.கல்முனை நகரில் இராணுவம் இவர்களை வீதியருகே நிற்க வைத்தது. பெரும் தொகையான இராணுவம் அவ்விடத்திற்கு வந்து உறவினர்கள் மத்தியிலிருந்த இளம் பெண்களைத் தெரிவு செய்து அருகே இருந்த கடட்டத்திற்குள் கூட்டிச்சென்று அவர்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியது.
உறவினர்கள் மத்தியிலிருந்த ஆண்கள் சித்திரவதைக்கு உள்ளிக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டனர். மொத்தமாக இரண்டு மணித்தியாலங்களில் 37 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் முதல் நாள் காரைதீவுக்குக் கூட்டிச் செல்லப்பட்ட 25 இளம் ஆண்களும் பின்னர் காணப்படவில்லை. இரண்டு நாட்களில் 62 பொதுமக்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
![]()