×

கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் வள்ளுவன் / பாண்டியன்

கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் வள்ளுவன் / பாண்டியன்

கடற்கரும்புலி லெப்.கேணல்
வள்ளுவன்/பாண்டியன்
கௌரிசாமி திலக்மோகன்
தமிழீழம்: யாழ்மாவட்டம்
வீரப்பிறப்பு:26.08.1972
வீரச்சாவு: 09.11.1998

கௌரிசாமி திலக்மோகன் என்ற இயற்பெயரைக் கொண்ட கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் வள்ளுவன் யாழ் மாவட்டம் கோண்டாவில் பகுதியை தனது பிறப்பிடமாக கொண்டவன். 1989ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்ட வாழ்வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

போராட்ட வாழ்வின் ஆரம்ப காலங்களில் தமிழீழ நிதிப்பிரிவில் தனது கடமையை மேற்கொண்டிருந்தான். எந்த வேலைகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயற்படும் முகாமைத்துவம் ஒழுக்கம் வள்ளுவனிடம் நிறைந்திருந்தது. எதையும் துருவி ஆராயும் மனம் இது. தேடல்தான் வாழ்க்கை என்பது வள்ளுவனுக்கு பொருத்தப் பாடானது.

1991ம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆகாய கடல்வெளி சமரில் பங்குகொண்ட இவரின் அணியில், அனைத்து போராளிகளும் வீரச்சாவைத் தழுவியபோதும், தோழர்களின் பிரிவைத் தாங்காது அந்த பிரிவின் தவிப்போடு தலைவருக்கு கடிதம் எழுத்து தன்னை கரும்புலியாக இணைத்துக்கொண்டார்.

1996ம் ஆண்டு கடற்புலிகள் பிரிவிற்கு கடமை மாற்றம் செய்யதுகொண்ட இந்தப் புரட்சி மலை பல கடல்சார்ந்த நடவடிக்கைகளில் அர்ப்பணித்து உழைத்தது. எல்லோரிடமும் அன்பாக பழகும் குணம்கொண்ட வள்ளுவன் பல தாக்குதல் நடவடிக்கைகளை கடற்புலிகளின் படகுகளின் கட்டளை அதிகாரியின் நிலையிலிருந்து வழிநடத்தினார்.

09.11.1998 அன்று அனைத்துலகக் கடற்பரப்பிலிருந்து வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை, போராளிகளையும், வழங்கல் படகுகளையும் பாதுகாத்து சிறிலங்கா கடற்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது இந்தக் கரும்புலிவீரன் காவியமாகிக் கொண்டான்.

இத் தாக்குதலில் கடலிலே காவியம் படைத்த கடற்புலி மாவீரர்கள். 
கப்டன் பவளரட்ணம் ( யோசப் கணேஸ்குமார் – மட்டக்களப்பு )
கப்டன் முடியரசி (தங்கராசா கலைமதி – யாழ்ப்பாணம்)
கப்டன் செங்கண்ணன் (சண்முகம் சிவகுமார் – மட்டக்களப்பு)
கப்டன் துமிலன் (வானரசன்) (நாகூரான் இராஜேந்திரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் உதயச்செல்வி (சுதா) (குமாரவேலு தீபா – யாழ்ப்பாணம்)
கப்டன் தர்சனா (சண்முகரட்ணம் விஜயகலா – யாழ்ப்பாணம்)
கப்டன் கனிவளவன் (கறுப்பையா யோகராசா – முல்லைத்தீவு)
மேஜர் மருதவாணன் (லோகச்சந்திரன் சதீஸ்குமார் – யாழ்ப்பாணம்)
மேஜர்உலகப்பன் (மரியதாஸ் றொசான் – யாழ்ப்பாணம்)
மேஜர் கார்வேந்தன் (தம்ராசா வரதகுமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் உமா (சிங்கராசா இதயமலர் – கிளிநொச்சி)
கப்டன் திருவேலன் (ஈசன்) (முத்துக்குமாரசாமி சிவறஞ்சன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ராஜதரன் (சுவைக்கின் பற்றிக் – மன்னார்)

 

guest
0 Comments